கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மலம் ஜலம் கழிப்பதின் ஒழுங்குகள்

1.    மலம் ஜலம் கழிக்கும் போது மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல்
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குச் சென்றால் ( மக்களை விட்டும்) மிகவும் தூரமாக உள்ள இடத்திற்குச் செல்வார்கள்.
அறிவிப்பவர் :  முகீரா பின் ஸ‎ýஃபா (ர­)  நூல் : அபூ தாவூத் (1)
நபி  (ஸல்) அவர்கள் இரு கப்ருகளைக் கடந்து சென்றார்கள்.
 அப்போது இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறாôகள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர் தாம் சிறுநீர் கழிக்கும் போது மறைப்பதில்லை. மற்றொருவர் கோள் சொல்­த்திரிபவராக இருந்தார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ர­)   நூல் :  புகாரி (218)

2.    கிப்லாவை முன்னோக்கி உட்காருதல் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் மலம் ஜலம் கழிக்கச் சென்றால் கிப்லாவை முன்னோக்கக் கூடாது . தமது முதுகுப் புறத்தால் பின்னோக்கவும் கூடாது, .
அறிவிப்பவர் : அபு அய்யூப் (ர­)  நூல் : புகாரி (144)

கழிப்பறையாகவோ அல்லது சுற்றிலும் மறைப்புள்ள இடமாகவோ இருந்தால் கிப்லாவை முன்னோக்கி உட்காருவதில் தவறில்லை

அப்துல்லாஹ் இப்னு உமர் (ர­) அறிவிக்கிறார்கள். நீர் (மலம் கழிக்கும் போது) உமது தேவைக்காக உட்கார்ந்தால் கிப்லாவையோ, பைத்துல் முகத்தயோ முன்னோக்கி விடக்கூடாது என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நான் ஒரு நாள் எங்கள் வீட்டுக் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அப்போது (தற்செயலாக) நபி (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் முகத்தஸை முன்னோக்கியவர்களாக மலம் கழிக்க அமர்ந்திருக்கக் கண்டேன்.
நூல் : புகாரி (145)

கழிப்பிடத்திற்கு செல்லும் போத ஓதவேண்டிய துஆ.

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழையும் போது ” அல்லாஹ‎ýம்ம இன்னீ அவூது பிக மினல் குபுஸி  வல் கபாயிஸி ” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் :  அனஸ் (ர­) நூல் : (142)
பொருள் :  இறைவா அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான பண்பாடுகள், ஆகியவற்றைத் தூண்டும் ஷைத்தானை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.
மலம் ஜலம் கழிக்கும் போது பேசுவதோ , ஸலாத்திற்குப் பதில் கூறுவதோ கூடாது.
நபி (ஸல் ) அவர்கள் சிறுநீர் கழிக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒரு மனிதர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபியவர்கள் அவருக்கு பதிலளிக்கவில்லை.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ர­)  நூல் : முஸ்­ம் (555)
கழிப்பறையி­ருந்து வெளியேறும் போது ஓத வேண்டிய துஆ.
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையி­ருந்து வெளியேறும் போது ” குஃப்ரானக” என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : திர்மிதி (7)
மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
மலம் , ஜலம் கழிக்கும் போது பேணவேண்டியவை
1.    மக்களை விட்டும் தூரமான அல்லது மறைவான இடங்களில் தான் மலம் , ஜலம் கழிக்க வேண்டும்.
2.    மலம் , ஜலம் கழிக்கும் போது மறைத்துக் கொள்ளவில்லையெனில் கப்ரில் வேதனை செய்யப்படும்
3.    கிப்லாவை முன்னோக்கியோ , பின்னோக்கியோ மலம் , ஜலம் கழிக்க் கூடாது. கிப்லா என்பது ”கஃபா” அமைந்துள்ள திசையாகும்.
4.    ஒரு ஹதீஸில் கிப்லாவை முன்னோக்கவோ பின்னோக்கவோ கூடாது என்றும் மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு உட்கார்ந்தார்கள் எனவும் வந்துள்ளது. இது முரண்பாடு அல்ல. மாறாக வெட்ட வெளியாக உள்ள இடங்களில் உட்காரும் போது கிப்லாவை முன்னோக்கவோ , பின்னோக்கவோ கூடாது. ஆனால் கழிப்பறைகளிலோ, சுற்றிலும் மறைப்பாக உள்ள இடங்களிலோ அவ்வாறு உட்காரலாம். இதனை மற்ற ஹதீஸ்கள் தெளிவு படுத்துகிறது. நபியவர்கள் கிப்லாவை பின்னோக்கி உட்கார்ந்த இடம் சுற்றிலும் மறைப்பாக உள்ள இடம் ஆகும். ஏனெனில் இப்னு உமர் (ர­) வீட்டின் மேல் பகுதியில் நின்று பார்க்கும் போதுதான் நபியவர்களைக் கண்டுள்ளார்கள்.
5.    மலம் , ஜலம் கழிக்கும் போது ஸலாம் கூறுவதோ ஸலாத்திற்கு பதில் கூறுவதோ கூடாது. இதி­ருந்து பேசுவதும் கூடாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் நபியவர்கள் எந்த ஒரு வார்த்தையும் பேசவில்லை.
6.    கழிப்பறையில் நுழையும் போதும் வெளியேறும் போதும் ஓதவேண்டிய துஆக்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

சிறுநீர் கழிக்கும் போது பேணவேண்டியவை


உட்கார்ந்து சிறுநீர் கழிக்க வேண்டும்.

” நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டு சிறுநீர் கழித்ததாக உங்களுக்கு எவர் சொன்னாலும் அதனை நீங்கள் நம்பாதீர்கள்.அவர்கள் உட்கார்ந்தவர்களாகவே தவிர சிறுநீர் கழித்ததில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : திர்மிதி (12)

அசுத்தமாக உள்ள இடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்..

ஹ‎ýதைஃபா (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு சமூகத்தாரின் குப்பை கூளங்கள் போடும் இடத்தில் வந்து நின்று சிறுநீர் கழித்தார்கள்.
நூல் : புகாரி (224)
குழந்தைகளின் சிறுநீர்
நபி (ஸல்) அவர்கள் கூறினாôகள். ” பெண் குழந்தையின் சிறுநீர் ( ஆடையில் பட்டால் அது) கழுவப்படவேண்டும்.  ஆண் குழந்தையின் சிறுநீô பட்டால் நீர் தெளிக்கப்பட்டால் (போதும்)
அறிவிப்பவர் :  அபூ ஸம்ஹ் (ர­)
நூல் :  நஸயீ ( 302)

மேற்கண்ட ஹதீஸ்களி­ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

1.    உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்க வேண்டும்.
2.    அசுத்தமான இடங்களில் நின்று கொண்டு சிறுநீர் கழிக்கலாம்.
3.    பெண்குழந்தையின் சிறுநீர் ஆடையில் பட்டால் அந்த இடத்தை கழுவ வேண்டும். ஆண் குழந்தையின் சிறுநீர் பட்டால் அந்த இடத்தில் நீர் தெளித்தால் போதுமானதாகும்.

மலம் ஜலம் கழிக்கும் போது செய்யக்கூடாதவை
தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”ஓடாமல் தேங்கிக் நிற்கும் தண்ணீரில் உங்களில் எவரும் சிறுநீர் கழித்து விட்டு பின்னர் அதில் குளிக்க வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ர­)
நூல் : புகாரி (239)

பொந்துகளுக்குள் சிறுநீர் கழிக்கக் கூடாது
.
” உங்களில் எவரும் பொந்துகளுக்குள் சிறுநீர் கழிக்க வேண்டாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :  அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் (ர­)
நூல் :  நஸயீ ( 34)

மறைவுறுப்பை வலது கையால் தொடுவது கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ” உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது தமது மர்மஸ்தானத்தை தமது வலக்கரத்தால் பிடிக்க வேண்டாம். வலது கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம்.
அறிவிப்பவர் :  அபூ கதாதா (ர­)
நூல் : புகாரி (154)
அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ர­) அவர்கள் அறிவிக்கிறார்கள். ”மலம் ஜலம் கழிக்கும் போது கிப்லாவை நாங்கள் முன்னோக்குவதையும் வலக்கரத்தால் தூய்மை செய்வதையும் மூன்று கற்களுக்கு குறைந்த அளவைக் கொண்டு நாங்கள் தூய்மை செய்வதையும் விட்டை எலும்பு ஆகியவற்றால் சுத்தம் செய்வதையும் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடைசெய்தார்கள்
நூல் : திர்மிதி (16)

மேற்கண்ட ஹதீஸ்களி­‎ருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயஙகள்
,

1.    ஓடாமல் தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் சிறுநீர் கழிக்கக் கூடாது,
2.    பொந்துகளுக்குள் சிறுநீர் கழிக்கக் கூடாது. ஏனெனில் அவை ஜின்களின் வசிப்பிடமாகும்.
3.    மறைவுறுப்பை வலது கையால் தொடுவது கூடாது.
4.    வலது கையால் சுத்தம் செய்வது கூடாது.
5.    கற்களைக் கொண்டும் சுத்தம் செய்து கொள்ளலாம் . ஆனால் மூன்று கற்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
6.    விலங்குகளின் விட்டைகள் எலும்புகள் ஆகியவற்றால் சுத்தம் செய்வது கூடாது. ஏனெனில் அவை ஜின்களுக்குரிய உணவாகும்.
source:Kadayanallur Aqsa

0 கருத்துகள்: