[ வீட்டு வேலையை மட்டும் செவ்வனே செய்து வந்தால் போதாது. நம் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் சந்திப்பது இந்த சமுதாயத்தைத்தான். எனவே ஒவ்வொரு பெண்ணிற்கும் சமூக அக்கறையும் நிச்சயம் தேவை.
பேருந்தில் வயதானவர்கள், குழந்தையுடன் அல்லது கர்ப்பிணி தாய்மார்கள் வந்தால் எழுந்து இருக்கை அளிப்பது, முதியவர்களுக்கு வேண்டிய உதவி செய்வது, வழி தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு வழிகாட்டுவது, சாலையில் கடக்க முயலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது, ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதி அளிப்பது போன்றவற்றை செய்யும் ஒரு சமுதாய நோக்கு கொண்ட பெண்ணாக நம் பெண் சமுதாயம் மாற வேண்டும்.] நாம் அல்லது நமது நண்பர்கள் யாராவது ஒரு பெண்ணைப் பார்த்து பெண் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று சொல்லி நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?
ஆம் என்றால் அந்த பெண் எப்படிப்பட்டவராக இருப்பார்? அழகாக இருப்பதைக் கொண்டு சொல்வதை இங்கே தவிர்த்துவிடுங்கள். ஒரு சராசரி பெண் என்பவள், வீட்டில் மகாராணியாகவும், அலுவலகத்தில் ராணியாகவும் இருப்பாள். இதுமட்டும் அல்லாமல் பொது விஷயங்களிலும் சேவகியாகவும், தவறை தட்டிக் கேட்பவளாகவும் இருப்பாள். அவளது கடமையை செய்துவிட்டு, உரிமையைத் தட்டிக் கேட்கும் பெண்ணைத்தான் பெண் என்றால் இப்படி இருக்கணும் என்று
சொல்வார்கள்.
எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாமல், எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டு, நம்மைப் பற்றி நாமே உணராமல் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் பெண்ணை பெண் இனமே மதிக்காது. பிறகு எப்படி சமுதாயம் மதிக்கும்.
தன்னைப் பற்றிய ஒரு தெளிவான சிந்தனையுடன் வாழ்வதுதான் அடிப்படை. தனக்குள்ள திறமைகளைக் கொண்டு வாழ்வில் முன்னேறும் ஆவலுடனும், எதையும் மற்றவரை எதிர்பார்க்காமல் தானாக செய்யும் தன்னம்பிக்கையும் பெண்ணிற்கு நிச்சயம் வேண்டும்.
திருமணத்திற்கு முன்பு தந்தையின் தயவுடன் வாழும் பெண் திருமணத்திற்குப் பின் கணவரின் தயவுடனும், பிறகு மகனிடம் வாழ்வதும் ஒரு பெண் தனக்குத் தானே போட்டுக் கொள்ளும் கட்டுப்பாடாகும்.
வீட்டு வேலையை மட்டும் செவ்வனே செய்து வந்தால் போதாது. நம் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அந்த குடும்ப உறுப்பினர்கள் வீட்டை விட்டு வெளியே சென்றதும் சந்திப்பது இந்த சமுதாயத்தைத்தான். எனவே ஒவ்வொரு பெண்ணிற்கும் சமூக அக்கறையும் நிச்சயம் தேவை.
ஒரு இடத்தில் தவறான காரியம் நடக்கிறது என்று தெரிந்தும் அதனை சும்மா விட்டுவிடுவதும், பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உதவி செய்யாமல் வேடிக்கை பார்ப்பதும் சமுதாயத்தில் ஒரு அங்கமான பெண்ணிற்கு சரியெனப் படுமா?
தவறைத் தட்டிக் கேட்காமல் போனாலும், தகுந்த இடத்தில் அதைப் பற்றி புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம்.
ஒரு இடத்தில் விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தவரை தூக்கி விட்டு அவருக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வருவதும் சமுதாய அக்கறை என்றே கூறலாம்.
பேருந்தில் வயதானவர்கள், குழந்தையுடன் அல்லது கர்ப்பிணி தாய்மார்கள் வந்தால் எழுந்து இருக்கை அளிப்பது, முதியவர்களுக்கு வேண்டிய உதவி செய்வது, வழி தெரியாமல் தவிக்கும் நபர்களுக்கு வழிகாட்டுவது, சாலையில் கடக்க முயலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது, ஏழைக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதி அளிப்பது போன்றவற்றை செய்யும் ஒரு சமுதாய நோக்கு கொண்ட பெண்ணாக நம் பெண் சமுதாயம் மாற வேண்டும்.
சிலர் வழி கேட்டால் கூட சொல்லாமல் போவார்கள். பேருந்தில் கர்ப்பிணிகளை அடித்துத் தள்ளிக் கொண்டு ஏறுவதும் சில பெண்கள்தான்.
கருணைக்கும், இரக்கத்திற்கும் எடுத்துக் காட்டாக கூறப்பட்ட பெண்கள் தற்போது, அதனை எடுத்துக் கூறும் அளவிற்கு மாறிவிட்டனர். ஆனால் இவை அனைத்தும் நிறைந்து, உற்சாகமாகவும், புத்துணர்ச்சியுடனும் தனது வேலையை செம்மையாக செய்யும் ஒரு பெண்ணைத்தான் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
நன்றி:நீடூர்.இன்ஃபோ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக