கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

காயிதெ மில்லத் (ரஹ்...) 116-வது பிறந்த நாள்..

இந்திய முஸ்லிம்களின் அரசியல் வழிகாட்டி, இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிறுவன தலைவர் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் (ரஹ்…) அவர்களின் 116-வது பிறந்த நாள் எதிர் வரும் 05-06-2011 அன்று ஆகும். வருடந்தோறும் காயிதெ மில்லத் (ரஹ்) அவர்களின் பிறந்த நாளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கல்வி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
ஏழை மாணவ – மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் வழங்குவதோடு உயர் கல்வி பயில வாய்ப்பில்லாமலிருக்கும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையும் வழங்க வேண்டுமென அனைத்து மாவட்ட – பிரைமரி நிர்வாகிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை சார்பில் பத்தாம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் முஸ்லிம் மாணவர்களுக்கும், முதல் மூன்று இடங்கள் பெறும் முஸ்லிம் மாணவிகளுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. 18.06.2011 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு திருச்சி பெமினா ஹோட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஊக்கத்தொகையுடன் சான்றிதழ் வழங்கப்பட இருக்கின்றது. இந்நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான சேவையாற்றும் முஸ்லிம் லீகினர் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு காயிதெ மில்லத் சமுதாய சேவை விருது வழங்கப்பட இருக்கின்றது.

0 கருத்துகள்: