கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

தமிழக பாஸ்போர்ட் அதிகாரியின் வேண்டுகோள்!!

பாஸ்போர்ட் பெறுவதற்கு புரோக்கர்களை அணுக வேண்டாம். அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முறையிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

என சென்னை மண்டல புதிய பாஸ்போர்ட் அதிகாரி சி.செந்தில் பாண்டியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தமிழ்நாட்டில் சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும், மதுரை, திருச்சி, கோவை ஆகிய இடங்களில் கிளை அலுவலகங்களும் செயல்படுகின்றன.

சென்னை மண்டலத்தைப் பொருத்தவரையில் ஒரு மாதத்தில் 20 ஆயிரம் விண்ணப்பங்கள் வருகின்றன. தினசரி ஏறத்தாழ ஆயிரம் பேர் விண்ணப்பிக்கிறார்கள்.

சாதாரணமாக விண்ணப்பித்த 8 முதல் 10 வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு 7 முதல் 10 நாட்களில் பாஸ்போர்ட் வழங்குகிறோம்.

பொதுமக்களுக்கு எவ்வளவு விரைவாக பாஸ்போர்ட் வழங்க முடியுமோ அவ்வளவு வேகமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 35 நாட்களில் வழங்குவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

உடனடியாக பாஸ்போர்ட் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் பாஸ்போர்ட் அதிகாரிகளை நேரடியாக சந்தியுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

எக்காரணம் கொண்டும் புரோக்கர்களை அணுக வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். பாஸ்போர்ட் அலுவலகத்தில் புரோக்கர்களின் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கு அவரை தெரியும், வி.ஐ.பி.யை தெரியும் என்று சொல்லி பாஸ்போர்ட் விண்ணப் பிப்பவர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு வரும் 10 புரோக்கர்களை இதுவரையில் அடையாளம் கண்டுள்ளோம். விரைவில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் புரோக்கர்கள் யாரும் நுழையக்கூடாது என்றார்.

0 கருத்துகள்: