பேரற்புதம் வாய்ந்த எதற்கும் நிகரில்லாத திருக்குர்ஆனுக்கு அல்லாஹ் குர் ஆனிலேயே பல இடங்களில் பல்வேறு பெயர்களைக் குறிப்பிட்டுள்ளான்.ஒவ்வொரு பெயரும் திருகுர் ஆனின் சிறப்புத்தன்மையை தெரிவிப்பதாக அமைந்துள்ளது.ஒரு பொருளுக்கு அதிகமான பெயர்கள் இருப்பது அதனுடைய சிறப்பையும்,உயர்வையும் காட்டக்கூடியது என்பது திண்ணம்.
1. அல் கிதாப் - வேதநூல்
2. அல் பயான் - தெளிவுரை
3. அல் புர்ஃகான் - நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பது
4. அல் புர்ஹான் - தெளிவான அத்தாட்சி
5. அத் திக்ரு - நினைவுறுத்துவது
6. அந் நூர் - ஒளி
7. அல் ஹக்கு - சத்தியமானது
8. அல் கரீம் - கண்ணியத்திற்குறியது
9. அல் முபீன் - தெளிவுபடுத்தக்கூடியது
10. அல் ஹகீம் - ஞானம் நிறைந்தது
11. அல் அஜீஸ் - மதிப்பிற்குறியது
12.அல் ஹுதா - நேர்வழி
13. அர் ரஹ்மத் - அருள்
14. அஷ் ஷிபா - நிவாரணமளிப்பது
15. அல் மவ்இளத் - நல்லுபதேசம்
16. அல் ஹிக்மத் - ஞானம்
17. அல் முஹைமின் - பாதுகாவலாக இருப்பது
18. அல் கய்யிம் - உறுதியானது
19. அந் நிஃமத் - அருட்கொடை
20. அர் ரூஹ் - உயிருள்ளது
21. அத் தன்ஜீல் - இறக்கிவைக்கப்பட்டது
22. அல் ஹுக்மு - சட்டம்
23. அல் முபாரக் - புனிதமாக்கப்பட்டது
24. அல் முஸத்திக் - உண்மையாக்கி வைக்கக்கூடியது
25. அல் பஷீர் - நற்செய்தி கூறுவது
26. அந் நதீர் - அச்சுறுத்தி எச்சரிப்பது.
27. அல் முதஹ்ஹரா - பரிசுத்தமாக்கப்பட்டது
28. அல் முகர்ரமா - சங்கைக்குறியது
29. அல் மஜீத் - மேன்மைக்குறியது
30. அல் அரபிய்யு - அரபி மொழியுடையது
31. அல் மர்ஃபூஆ - உயர்வானது
32. அல் அஜப் - ஆச்சரியமானது
33. அல் பஸாயிர் - ஆதாரமுள்ளது
34. அத் திக்ரா - நினவூட்டும் உபதேசம்
35. ஹப்லுல்லாஹ் - அல்லாஹ்வின் கயிறு
நன்றி:அல்லாஹு அக்பர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக