கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

புதுச்சேரி மாநிலத்தில் கட்சி பாகுபாடின்றி வேட்பாளர்களுக்கு ஆதரவு! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

புதுவை: நடைபெறபோகும் புதுவை சட்டசபை தேர்தலில் அந்தந்த பகுதியில் உள்ள வேட்பாளர்களுக்கு தகுதி அடிப்படையில் ஆதரவு அளிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் முடிவு செய்துள்ளது.
m
இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அத் புதுச்சேரி பஹாருதீன் நிருபர்களிடம் கூறியதாவது: முஸ்லிம் சமுதாயத்திற்கு 6.1 சதவீதம் தனி இட ஒதுக்கீடு, இஸ்லாமிய வங்கி, வட்டி இல்லா கடன், அரபி, உருதுமொழி பாடத்திட்டம், பள்ளிவாசல் சொத்துகளைப் பள்ளிவாசல்களே நிர்வகிக்கும் உரிமை கேட்டு பல கட்ட போராட்டங்களை நடத்தியும் கண்டுக்கொள்ளப்படாமல் உள்ளது.
m
m
மேலும் சட்டசபை தேர்தல் அறிக்கைகளிலும் முஸ்லிம்களுக்கென்று எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. எனவே வரும் தேர்தலில் தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய ஒட்டுமொத்த ஆதரவை எந்த கூட்டணிக்கும் வழங்குவதில்லை என முடிவு செய்துள்ளது.
m
வாக்களிப்பது மக்களின் கடமை என்பதால், வேட்பாளர்களின் செயல்பாடு போன்ற தகுதிகளின் அடிப்படையில் கட்சி பாகுபாடின்றி அந்தந்தத் தொகுதிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஆதரவு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். புதுச்சேரி மாநில தலைவர் தாஸீன்,பொருளாளர் அக்பர் கரீம், நிர்வாகிகள் ஹாபி, கவுசர்,நஸீர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: