கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஸ்லிம்களின் தேர்தல் அறிக்கை-2011

2011ஆம் ஆண்டுக்கான தேர்தல் களத்தில் உள்ள பல கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில் முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனை.
இலவசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உழைப்பை ஊக்கப்படுத்தி அதற்கு முறையான ஊதியம் வழங்கப்படும்.
கல்வி:
* கல்வியில் அவரவர் மதப் பண்பாட்டுப் பாடங்கள் சேர்க்கப்படும்.
* தொடக்கக் கல்வி முதல் ஆய்வு நிலை வரையிலான கலை, அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், சட்டம் போன்ற அனைத்துக் கல்வியும் குடிமக்கள் அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
வேலை வாய்ப்பு:
* கல்வி கற்ற குடிமக்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிகேற்ப 100 விழுக்காடு வேலை வாய்ப்பு அரசு மற்றும் தனியார் துறைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்.
* கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் பராமரிப்பு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
* சுய உதவிக் குழுக்களுக்கு பணம் வட்டிக்கு விடப்படுவதைத் தடுத்து பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி அழிக்கப்படும். அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரசே கொள்முதல் செய்யும்.
மருத்துவம்:
* குடிமக்கள் அனைவருக்கும் பாரபட்சம் இல்லாமல் உயர்தரமான மருத்துவச் சேவையை முற்றிலும் இலவசமாக அரசே வழங்கும்.
* இந்திய பாரம்பர்ய வைத்திய முறைகளான சித்தா, ஆயுர்வேதம், யூனானி மற்றும் ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்ற மருத்துவ முறைகளுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு இதன் ஆய்வுகளுக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும்.
* நபி மருத்துவத்திற்கான நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்படும்.
சுகாதாரம்:
* சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் எல்லா உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்களுக்கும் அதன் உற்பத்தி பாதிக்கப்படாமல் மாற்று ஏற்பாடு உடனடியாகச் செய்யப்படும்.
* மனிதர்களுக்கும் பூமிக்கும் கேடு விளைவிக்கும் எந்த இரசாயனப் பொருளையும் உற்பத்தி செய்வதற்கும் அதை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்கப்படும்.
* உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பான்பராக், குட்கா, ஜங்புட்ஸ், பெப்ஸி, கோக் போன்ற பொருட்களுக்கு நிரந்தர தடை. மீறினால் அது கொலைக் குற்றமாகக் கருதப்படும்.
* திருப்பூர் உள்ளிட்டு நாடு முழுவதிலும் உள்ள சாயப் பட்டறைகளில் இரசாயன சாயப் பொருட்களுக்கு மாற்றாக மூலிகை சாயப் பொருட்கள் பயன்படுத்திட வழிவகை செய்யப்படும்.
மது:
* 100% பூர்ண மதுவிலக்கு கறாராக அமல்படுத்தப்படும்.
* கள்ளச்சாராயம் காய்ச்சுவது மரண தண்டனைக் குரிய குற்றம்.
கள்:
தென்னை, பனை மரங்களிலிருந்து அரசே கள் இறக்கி அவற்றை உணவுப் பொருட்களாகவும் மருந்து
களாகவும் உற்பத்தி செய்யும்.
விவசாயம்:
* விவசாயமுறை முற்றிலும் மாற்றப்பட்டு இயற்கை முறையிலான  விவசாயமுறை கடைபிடிக்கப்படும்.
* இரசாயன உரம், பூச்சி மருந்து போன்றவற்றை உற்பத்தி செய்யவோ இறக்குமதி செய்யவோ தடை விதிக்கப்படும்.
* விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் விதை மற்றும் இயற்கை உரங்கள் இலவசமாக வழங்கப்படும்.
* நாட்டில் உள்ள அத்துனை தரிசு நிலங்களும் விவசாயத்திற்கு ஏற்றவையாக மாற்றப்படும்.
* யூகபேரம், முன்பேரம் என்ற வியாபார சூதாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும்.
* விவசாய பொறியியல் பல்கலைக் கழகம் துவங்கப்படும்.
* மாவட்டம் தோறும் இயற்கை விவசாயக் கல்லூரிகள் உருவாக்கப்படும்.
நீர்:
* குடி மக்கள் அனைவருக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
* ஏரி, குளங்கள், நீர்நிலைகள் போன்றவற்றை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களை உடனடியாக அப்புறப்படுத்தி அவற்றை மழைநீர் சேமிப்பு இடங்களாக மாற்றப்படும்.
* நகரங்களில் மழைநீர் சேமிப்பு கட்டாயமாக்கப்படும்.
* புதிய நீர் தேக்கங்கள், கண்மாய்கள் உருவாக்கப்படும்.
சுரங்கம்:
* கனிம வளங்கள் மற்றும் அனைத்து விதமான சுரங்கத் தொழிலும் அரசுடமையாக்கப்படும். தனியார் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்.
* பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் எடுக்கப்படும் கனிமப் பொருட்களின் மதிப்பில் பெரும்பகுதி அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு செலவிடப்படும்.
வரி:
* தொழில் வரி, விற்பனை வரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, ஆயத்தீர்வை, மதிப்புக்கூட்டு வரி, உற்பத்தி வரி போன்ற எல்லா கோமாளித் தனமான வரிகள் அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படும்.
* தொழில் மற்றும் உற்பத்தியில் கிடைக்கின்ற இலாபத்தை கணக்கிட்டு ஆண்டிற்கு 21/2 சதம் மட்டும் வரியாக வசூல் செய்யப்படும்.
* தொழில் நிறுவனங்களிலும் வீடுகளிலும் புகுந்து சோதனையிடுவதை மனிதனின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் செயலாக கருதி அனைத்து துறை சார்ந்த அமலாக்கப் பிரிவுகளும் கலைக்கப்படும்.
லஞ்சம் – ஊழல்:
* அனைத்துத் துறைகளிலும் கடமையை செய்ய – கடமையை மீற லஞ்சம் கொடுப்பதையும் வாங்குவதையும் திருட்டுக் குற்றமாகக் கருதி குற்றம் நிரூபிக்கப்பட்டால் கை துண்டிக்கப்படும்.
பொருளாதாரம்:
* வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் முழுவதும் உடனடியாக திரும்பப் பெறப்படும்.
* வட்டி அடிப்படையிலான அனைத்து பொருளாதார பரிவர்த்தனைகளும் தடை செய்யப்படும்.
* மனிதாபிமான அடிப்படையிலான வட்டி இல்லா வங்கிச் சேவை அறிமுகப்படுத்தப்படும்.
* உலக வங்கி, சர்வதேச நிதியகம் போன்ற உலகமகா வட்டி கம்பெனிகளிடம் கடன் பெறுவது தடை செய்யப்படும்.
* கந்துவட்டி, மீட்டர் வட்டி, நாள் வட்டி, வார வட்டி போன்ற அக்கிரமங்கள் அனைத்தும் உடனடியாக முடிவிற்கு கொண்டு வரப்படும்.
மதிப்பில்லாத காகித நோட்டிற்கு பதிலாக மதிப்புடைய தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் நாணயங்கள் உருவாக்கப்படும்.
மின்சாரம்:
* விவசாயத்திற்கு 24 மணி நேரமும் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
* வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்கப்படும்.
* காற்று, சூரிய ஒளி போன்றவற்றிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்திட அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும்.
* அணுமின் நிலையங்கள் இழுத்து மூடப்படும்.
போக்குவரத்து:
* சாலை வரி, வாகன வரி, சுங்க வரி போன்ற அநியாயங்களிலிருந்து உடனடி விடுதலை.
* அரசுப் பேருந்துக்கள் தரம் உயர்த்தப்படும்.
* இரவில் பணியாற்றும் ஓட்டுனர் நடத்துனருக்கான ஊதியம் உயர்த்தப்படும், அவர்களுக்கு தொடர்ந்து இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.
* சாலை விதிகளை கடைபிடிக்காதவர்க
ளுக்கு குற்றங்களுக்கேற்ப கசையடி கொடுக்கப்படும்.
முதியோர்:
* முதியோரை கைவிடுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
* அரசின் சார்பில் மூத்த குடிமக்கள் அனை
வரின் உணவு, உடை, மருத்துவம், இருப்பிடம் அனைத்தும் உறுதி செய்யப்படும்.
பெண்களுக்கு:
* கல்வி மற்றும் சொத்துரிமை உறுதி செய்யப்படும்.
* கற்பழிப்பு குற்றத்திற்கு மரண தண்டனை.
* வரதட்சணை போன்ற சமூக கொடுமைகளுக்கு கசையடி கொடுக்கப்படும்.
* விபச்சாரத்திற்கு கசையடி மற்றும் மரண தண்டனை வழங்கப்படும்.
கலாச்சாரம்:
* எல்லா மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளும் பாதுகாக்கப்படும்.
* கட்டாய மதமாற்றம் தடைசெய்யப்படும்.
* மத துவேசத்தை விதைப்பவர்களுக்கு கடும் தண்டனை.
ஊடகம்:
* மனித வாழ்வை மேம்
படுத்திடும் பயனுள்ள சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
* பகல் நேர சினிமா காட்சிகள் இரத்து செய்யப்படும்.
பொதுச் சொத்து:
* கோயில் மற்றும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருது மீட்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படும்.
* கோயில்களை பராமரிக்
கும் பொருப்புகள் இந்துமத ஆன்மீக பெரியவர்கள் கொண்ட சபையில் ஒப்படைக்கப்படும்.
நீதி:
முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய ஷரீஅத் சட்டமும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவரவர் சார்ந்துள்ள மதச்சட்டமும் அமல்படுத்தப்படும். குற்றவியலில் மட்டும் அனைவர் மீதும் மதப்பாகுபாடு இன்றி ஷரீஅத் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மீனவர்கள்:
கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் குளிர் சாதன கிடங்கு அமைக்கப்பட்டு மீனவர்களுக்கு கடல் சார் உணவுகளை பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல் போன்ற பயிற்சி அளிக்கப்படும்.
தொகுப்பு – ஷெர்ஷா
source:http://www.samooganeethi.org/

0 கருத்துகள்: