கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

திங்கள், 11 ஏப்ரல், 2011பெரியோர்களே... தாய்மார்களே... ( இது அணைத்து தமிழ் மக்களுக்காகவும்)


பெரியோர்களே... தாய்மார்களே... வாக்காளப் பெருங்குடிமக்களே...

கடந்த இருபது தினங்களுக்கு மேலாக தமிழக மக்கள் அன்றாடம் கேட்டுவந்த

வார்த்தைகள்  (ஏப்ரல்11) பிற்பகலுடன் ஒரு நிறைவுக்கு வந்துள்ளது...

இனி இதுபோன்ற வார்த்தைகளை கேட்க சில ஆண்டுகள் ஆகலாம்...


தமிழ்நாடு தனது 16 வது சட்டப்பேரவைக்கான தேர்தலை வரும் ஏப்ரல்13ம் தேதி சந்திக்க உள்ளது.அடுத்த ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டை ஆளப்போகும் ஆட்சியாளரை தேர்வுசெய்ய வாக்களிக்கும் தகுதி பெற்ற சுமார் நான்கு கோடியே ஐம்பத்தொன்பது லட்ச தமிழக வாக்காளர்கள் தயாராக உள்ளனர்.


பொதுவாக தமிழக தேர்தல் களம் எப்போதுமே ஏதாவது ஒரு ஆதரவு அலை அல்லது எதிர்ப்பு அலைஅல்லது அனுதாப அலை இவற்றுடந்தான் நடந்தேறும்.ஆனால் இந்த 2011 ஆண்டின் சட்டப்பேரவை தேர்தல் இதுபோன்று எந்த அலையும் இல்லாமல் நடந்தேரப்போவதுதான் அதிசயம்.


இந்த தேர்தல்கால பரப்புரைகளில் ஆளும் கட்சியான திமுகவிற்கு எதிராக ஸ்பெக்ட்ரம் 2 ஜி அலைகற்றை ஒதுக்கீட்டு இமாலய ஊழல் எதிர்க்கட்சி அதிமுக கூட்டணியினரால் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.

திமுக கடந்தகால அதிமுக ஆட்சிகால அவலங்களை மீண்டும் மக்களுக்கு நினைவூட்டியது. இதுவெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கதாநாயகனாக வலம்வந்தது இரு பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைதான்.


திமுக தங்களின் கடந்த ஐந்தாண்டுகால இலவச திட்டங்களை சாதனைகளாக மக்களிடம் சொன்னது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய இலவச திட்டங்களோடு புதிதாக சில இலவசங்களும் வழங்குவதாக உறுதியளித்துள்ளது. திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகளை அப்படியே அச்சுபிசகாமல் இரட்டிப்பாக அதிமுக தேர்தல் அறிக்கை பிரகடனபடுத்தியது.


ஆக ஊழல்கள் மக்களுக்கு செய்யப்பட்டுள்ள துரோகங்கள் ஆகியவற்றை இரு கூட்டணிகளுமே இலவசங்கள் எனும் அறிவிப்பின் மூலமாக தமிழர்களின் மறதி நோயை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடித்துவிடலாம் என்கிற தெம்புடனேயே தேர்தல் களத்தில் நிற்கிறார்கள்.


மக்கள் ஊழலுக்கு எதிராக வாக்களிக்கப் போகிறார்களா...? இலவசங்களுக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறார்களா...? சுமார் நாலரை கோடி தமிழக மக்கள் மீண்டும் திமுகவே ஆட்சியில் தொடர வாய்ப்பளிக்கப் போகிறார்களா...? அல்லது செல்வி ஜெயலலிதா அவர்களை மீண்டுமொருமுறை ஆட்சியில் அமரவைக்கப் போகிறார்களா...? இதுதான் இன்றைக்கு தமிழக வீதிகளில் விவாதிக்கப்படும் பிரதான கேள்வி... இதற்க்கான பதிலை வரும் மே13 சொல்லும்.


வாக்களிபிற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள இந்த தருணத்தில் எமது இந்த கட்டுரை வெளிவருவதன் நோக்கம் கட்டுரையின் முடிவில் நீங்களே உணர்வீர்கள்...


கடந்த 1991 முதல் இன்றைய 2011 வரை தமிழகம் இருபது ஆண்டுகளில் நான்கு சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் இரண்டு முறை திமுகவும் இரண்டுமுறை அதிமுகவும் ஆட்சியில் இருந்துள்ளனர். சம அளவில் தமிழகத்தை ஆண்டுள்ள இந்த இரண்டு பிரதான கட்சிகளின் கடந்த கால ஆட்சியை சற்று கவனிக்க வேண்டும்.


1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அமரர் ராஜீவ்காந்தி அவர்களின்

மரணம் அனுதாப அலையாய் தமிழகத்தை சூழ்ந்தது. அந்த அனுதாப அலையில் திமுக இருந்த இடம் தெரியாமல் போனது... அதிமுக அமரர் எம்ஜிஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு செல்வி ஜெயலலிதா அவர்களின் தலைமையில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. மக்கள் ஜெ அவர்கள் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தை முறையை அமலாகுவார் என எதிர்பார்த்தனர்.


ஆனால் அவரோ தமிழக மக்களின் நலனைவிட அவரது தோழி குடும்பத்தினரின் நலனில்தான் அதிகமான அக்கறை செலுத்தினார். முதல்வராக பதவியில் இருப்பது ஜெயலலிதாவா அல்லது அவர் உயிர் தோழி சசிகலாவா... என மக்கள் குழப்பமடைந்தனர். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்றுஜெ அவர்கள் சசிகலா அவர்களின் உறவுக்கார சுதாகரனை சுவிகாரப் புத்திரனாக தத்தெடுத்தார்அதோடுமட்டும் நில்லாமல் உடணடியாக அமரர் சிவாஜிகணேசன் அவர்களின் குடும்பத்தில் தனது சுவிகாரப்புத்திரனுக்கு மணம்முடித்தார். அதுவும் சாதாரணமாக அல்ல இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா திருமணதிற்கு சற்றும் குறைவில்லாமல் ஆடம்பரமாக நடத்தினார்.


திருமண ஊர்வலத்தில் தனது தோழியுடன் வீதி உலா வந்த அந்த அற்புதமான காட்சியை பத்திரிகைகள் நகைகடையே வீதி உலாவந்ததாக புளகாங்கிதப்பட்டு எழுதினார்கள்... ஒரு முதல் மந்திரி எப்படியெல்லாம் ஆணவமாக அகங்காரமாக நடந்துகொள்ள முடியும் என்பதற்கு ஜெயலலிதா முன்னுதாரனமானார்.மக்களின் பசி விலைவாசி ஏற்றம் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு இவற்றை எல்லாம் கவனிக்க நேரமில்லாமல் போகும் அளவிற்கு தனக்கும் தனது தோழி குடும்பத்திற்கும் இந்தியா முழுவதும் சொத்துகளை வாங்கிகுவிக்க தொடங்கினார். மக்களின் எதிர்ப்பு அலை வீச துவங்கியது மரணபடுக்கையில் இருந்த திமுக மீண்டும் வீறுகொண்டு எழுந்தது.


1996ல் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை தமிழக மக்கள் சந்தித்தார்கள் அந்த தேர்தலில் முழுக்க முழுக்க ஜெயலலிதா எதிர்ப்பு அலையால் மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றது. அந்த தேர்தலில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவே தோல்வியடைந்தார். மீண்டும் முதல்வராக கலைஞர் பொறுப்பேற்றார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முன்னாள் முதல்வர் உட்பட பல அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் சில வழக்குகள் இன்னும்கூட நிலுவையில் உள்ளது.


பல நல்ல திட்டங்கள் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. மேலைநாடுகளுக்கு இணையான மேம்பாலங்கள்உழவர்சந்தை கட்டிடங்கள் பெரியார் சமத்துவபுர வீடுகள் என பட்டியல் நீண்டது. ஆட்சிக்காலத்தின் மத்திய பகுதியில் வழக்கம்போல மக்களை விலைவாசி உயர்வும் சாதிகலவரங்களும் ரௌடிகளின் கட்டபஞ்சாயத்து கொடுமைகளும் வெகுவாக தாக்க ஆரம்பித்தது. அப்போதுதான் மக்கள் உணர ஆரம்பித்தார்கள் திமுகவின்

திட்டங்கள் அனைத்துமே சிமெண்டை அடிபடையாகவைதே உள்ளதே என்ன காரணம் என மக்கள் ஆராய துவங்கினார்கள்...


அப்போதுதான் அதில் நடந்துள்ள ஊழல்கள் வெளிவந்தது. ஆம் மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் நகர ஆரம்பித்தார்கள். அப்போதைய திமுகவின் ஆட்சிகாலம் தமிழகத்தின் "பொற்க்காலம்" என திமுகவால் பறைசாற்றப்பட்டது. ஆனால் அதனை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அதனை திமுக 2001 தேர்தலில் உணர்ந்தது.


மீண்டுமொரு ஆட்சி மாற்றத்தை தமிழகம் சந்தித்தது அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது அந்த தேர்தலில் போட்டியிடும் தகுதிகூட பெற முடியாத செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார். தன்னை சிறையில் அடைத்த கருணாநிதியை தானும் சிறையில் அடைத்தே தீர வேண்டும் என்கிற பழிவாங்கும் உணர்ச்சிக்கு உருவம் கொடுத்து ஒரு நள்ளிரவு நேரத்தில் கருணாநிதி அவர்களின் படுக்கையறைக்கே சென்று

காவல்துறையினரை கைது செய்யவைத்தார். வழக்கம்போல திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது அரசுத்தரப்பில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


ஆட்சிகாலத்தில் ஊழலையும் உடன்பிறவா சகோதரியின் நலனையுமே முன்னெடுத்த ஜெ இம்முறை மக்களை மனவேதனைகுள்ளாக்கும் பல அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டு மனித உரிமை மீறலை நடத்திகாட்டினார். மதமாற்ற தடை சட்டம் சிறுபான்மையின மக்களை அச்சுறுத்தியது. எஸ்மா... டெஸ்மா... போன்ற சட்டங்கள் அரசு ஊழியர்களை பழிவாங்கியது... மக்களின் சராசரியான வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

தமிழக மக்கள் சீ...சீ.. இந்த பழம் புளிக்கும் என்கிற மனநிலைக்கு மறுபடியும் வந்தார்கள்... மீண்டுமொரு ஆட்சிமாற்றம் 2006ல் நடைபெற்ற தேர்தலில் திமுக மக்களால் மீண்டும் ஆட்சி பொறுப்பை பெற்றது.

இதற்க்கு முன் எப்போதும் இல்லாத அளவில் மக்களுக்கு திமுக கொடுத்த இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றியது..இனி திமுகவின் ஆட்சியை ஜெ அல்ல வேறு யாராலும் அசைக்க முடியாது என திமுகவினர் மட்டுமல்ல மக்களே பல இடங்களில் பேசினார்கள்... அட ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சியா...? என இந்தியாவே வியந்து பார்த்த வேளையில்தான்

ஸ்பெக்ட்ரம் 2 ஜி என மக்களுக்கு புரியாத மொழியில் எழுதி பார்க்க முடியாத தொகையில் ஊழல் வெளிச்சத்திற்கு வந்தது. அதோடு அடுத்த தேர்தலும் வந்துவிட்டது. இந்த முறை மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை இதுவரை யாராலும் துல்லியமாக கணிக்க முடியவில்லை.


மக்களே... அடுத்த ஐந்தாண்டுகள் யாரை ஆட்சியில் அமரவைக்க போகிறீர்கள்...? மீண்டுமொரு ஆட்சி மாற்றமா...?அல்லது இலவசங்களை வாரிவழங்கிய திமுக ஆட்சியையே மீண்டும் தொடர செய்ய போகிறீர்களா...?

ஒன்றை நினைவில்கொள்ளுங்கள் இவர்களில் (திமுக,அதிமுக)ஊழலில் சளைத்தவர்கள் இல்லை...

அதிமுக ஆட்சிக்கு வந்தாலும் சரி... திமுகவே தொடர்ந்தாலும் சரி... உங்கள் நிலை மாறப்போவதில்லை...தமிழகத்தில் பாலாரும் தேனாறும் ஓடப்போவதில்லை... ஏன் குறைந்தபட்சம் நியாயமான காவிரி ஆறுகூட ஓடப்போவதில்லை... வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை கடமை... அதறக்கா வாக்களியுங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் ஆனால் எதையும் எதிர்பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்...


ஏனெனில் இப்போதுள்ள எந்த ஆட்சியாளர்களாலும் நீங்கள் விரும்பும் ஆட்சியை தர முடியாது. நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பு அப்படியாக பழக்கப்பட்டுவிட்டது.புனிதமயமான ஆட்சிமுறை இன்று பணமயமாகி விட்டது ஒரு கட்சியில் ஒரு வேட்பாளர் சீட் பெறவே பல லட்சங்களை அந்த கட்சி தலைமைக்கு கப்பம் கட்ட வேண்டியுள்ளது... அவர் வெற்றி பெற்று பதவிக்கு வந்தால் கட்டிய கப்பத்தை மீட்க்கதான் போராடுவார் மாறாக உங்களை உங்கள் நிலையை மாற்ற போராடுவார் என நீங்கள் நம்புவது தவறு என்பதை உணருங்கள்...


இந்த இரண்டு பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள இலவசங்களை மட்டுமே கவனத்தில் கொண்ட நீங்கள் உங்களின் சமூக,பொருளாதார, கல்வி மேம்பாடுகள் குறித்து ஏதேனும் சொல்லப்பட்டுள்ளதா என்பதை

. அரசுடமையாக்கப் படவேண்டிய கல்விக்கூடங்களும் மருத்துவமனைகளும் இங்கு தனியார்மயமாகி உள்ளது.அறவே ஒழிக்கப்படவேண்டிய சாரயகடைகள் "டாஸ்மாக்" என்கிற பெயரில் தமிழகம் முழுவதும் வீதிக்கு வீதி அரசே நடத்துகிறது... ஒரு ஆட்சியில் கல்விக்கூடங்கள் பொது உடமையாக்கப்பட்டு வளர்ந்திருந்தால்கல்வியார்கள் உருவாகி இருப்பார்கள்... தொழிற்சாலைகள் உருவாகி இருந்தால் வேளை இல்லா நிலை மாறி மக்கள் வறுமை கோட்டை கடந்து இருப்பார்கள்... இவைகள் எல்லாம் நடக்காத நமது நாட்டில் மதுகடைகள் பெருகி உள்ளது... ஒரு சமூக சீரழிவு நடந்து வருகிறது... குடிக்கு அடிமையாகி வாழ்கையை தமிழர்கள் தொலைத்து ஆய்வறிக்கையில் 13 வயது பள்ளி மாணவன்கூட மதுவுக்கு அடிமையாகிறான் என சொல்லப்பட்டுள்ளது.

இது சமூக கலாசாரத்தின் பின்னடைவு இல்லையா...


மதுகடைகளை ஒழிப்போம் என இவர்கள் சொல்லவில்லை... கல்வியை பொது உடமையாக்குவோம் என இவர்கள் சொல்லவில்லை... தொழிற்சாலைகளை உருவாக்குவோம் என இவர்கள் சொல்லவில்லை... சமூக பொருளாதார முன்னேற்றத்தை முன்னெடுப்போம் என இவர்கள் சொல்லவில்லை... கிரைண்டரையும் மிக்சியையும் இலவசமாக தருவோம்

என்றவர்கள் அதனை மக்களே வாங்ககூடிய பொருளாதார சூழலை ஏன் உருவாக்க முன்வரவில்லை...


மக்களே... இப்போதாவது உணருங்கள் எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உங்கள் நிலை உயர போவதில்லை... இருந்தாலும் வாக்களியுங்கள் அது நமது ஜனநாயக உரிமை... கடமை... ஆனால் வாக்களிக்கும்போது இதுவே எங்களுக்கு எந்த நன்மையையும் கொடுக்காத அரசியல்வாதிகளுக்கு நாங்கள் அளிக்கும் கடைசி வாக்கு... என்கிற உறுதியான எண்ணத்துடன் வாக்களியுங்கள்... ஆம் ஆட்சி மாற்றங்களால் எந்த காட்சியும் மாறப் போவதில்லை...

இதற்கெல்லாம் ஒரே தீர்வு அரசியல் மாற்றம்தான்... அடுத்த ஐந்தாண்டுகள் அரசியல் மாற்றத்திற்கான பயிற்சிகாலம்...அந்த பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மக்களாக உருவாக்குங்கள்...


2016ல் தமிழகம் ஒரு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் அதே வேளையில் தமிழகம் சமூக ஒருங்கிணைப்பின் மூலமாக அரசியல் மாற்றத்தையும் சந்திதேதீரும்
நன்றி:நிதர்சனங்கள் http://www.vengai2020.blogspot.com/

0 கருத்துகள்: