கட்டிட வாடகை டெல்லியில் இந்தியாவின் இதர நகரங்களை விட பெருமளவு அதிகரித்துவரும் நிலையில் அங்குள்ள வக்ஃப் சொத்துக்களுக்கு மாதாந்திர வாடகை வெறும் ஒரு ரூபாய்
முதல் 11 வரை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல் 11 வரை அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் நிஜாமுத்தீன், கரோல்பாக், பஹார்கஞ்ச், சப்ஜிமண்டி, பல்லிமாரன், மாத்தியமஹல், பழைய டெல்லியின் வீதிகள் உள்ளிட்ட இடங்களிலுள்ள வக்ஃப் போர்டுக்கு சொந்தமான 86 கட்டிடங்களுக்கு மாதாந்திர வாடகையாக 1 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வக்ஃப் வாடகைக்கு எடுத்தவர்களில் பலரும் இந்த வாடகையை கூட கடந்த 40 ஆண்டுகளாக அளிப்பதில்லை என்பது அடுத்த அதிர்ச்சியாகும்.
பத்திரிகையாளரான அஃப்ரோஸ் ஆலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அளித்த மனுவில் இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
நிஜாமுத்தீன் தர்காவிற்கு அருகில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் இரண்டு கட்டிடங்கள் வேர்ல்ட் எஜூகேசனல் ஆர்கனைசேஷன் வாடகைக்கு எடுத்துள்ளது. வாடகை தொகை எவ்வளவு தெரியுமா? மாதாந்திரம் ஒரு ரூபாய். ஆனால், இப்பகுதியில் ஒரு ஃப்ளாட்டின் மாதாந்திர சராசரி வாடகை ரூ.20 ஆயிரம் ஆகும்.
அப்துல் குத்தூஸ் சித்தீகி தலைவராக உள்ள நுஸ்ரத்துல் இஸ்லாம் எஜுகேசனல் சொஸைட்டி பழைய டெல்லியில் ஃபதஹ்பூரியில் வாடகைக்கு எடுத்துள்ள கட்டிடத்திற்கு வக்ஃப் போர்டிற்கு அளிக்கவேண்டிய பாக்கி 16,521 ரூபாய் ஆகும். கட்டிடத்தை வாடகைக்கு எடுத்தபிறகு சொஸைட்டி இதுவரை வாடகை அளிக்கவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
ஸப்ஜி மண்டியில் ஷா அஃபாக் தர்காவிற்கு அடுத்துள்ள வக்ஃப் கட்டிடம் வீராவாலி என்ற தனிநபருக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. மாதந்திர வாடகையோ வெறும் 3 ரூபாய் ஆகும். 248 ரூபாய் இதுவரை வாடகை பாக்கி உள்ளது. பஹாட் கஞ்சில் குதுப் சாலையில் அமைந்துள்ள கட்டிடத்தை ராம்சந்தர் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார். மாதாந்திர வாடகை தொகை வெறும் 5 ரூபாய். இதுவரை வாடகை பாக்கி 807 ரூபாய்.ஸப்ஜி மண்டியில் ஷா அஃபாக் தர்காவிற்கு அடுத்துள்ள இன்னொரு கட்டிடத்தின் வாடகை மாதந்திரம் ஆறு ரூபாய் ஆகும். இக்கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ள சீதாராம் இதுவரை அளிக்கவேண்டிய வாடகை பாக்கி 897 ரூபாய் ஆகும். குதுப் சாலையில் தெல்மில் குர்த் மஸ்ஜிதில் கட்டிடத்தின் வாடகை ஏழு ரூபாய் ஆகும். இக்கட்டிடத்தை வாடகைக்கு எடுத்துள்ள ராம் பியாரிலால் அடைக்கவேண்டிய வாடகை பாக்கி 1672 ரூபாய் ஆகும்.
துர்க்குமான் கேட்டிலும், ஸப்ஜி மண்டியிலும், வஹாப்கஞ்சிலும் இதர சில கட்டிடங்களுக்கு மாதாந்திர வாடகை எட்டு ரூபாய் ஆகும். 2378 ரூபாய் வாடகை பாக்கி நிலுவையில் உள்ளது.வக்ஃப் போர்ட் வசூலிக்கு அதிகபட்ச வாடகை வெறும் 11 ரூபாய் ஆகும். 3440 வரை வாடகை அளிப்பவர்களும் இவர்களில் உண்டு.
குறைந்த கட்டணத்திற்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள கட்டிடங்கள் வணிகத்திற்காகவே உபயோகிக்கப்படுகின்றன. தினந்தோறும் லட்சக்கணக்கான ரூபாய் இங்கு லாபமாக சம்பாதிக்கப்படுகிறது.
வக்ஃப் சொத்துக்களின் பாதுகாப்பிற்காக கடந்த 2010 மார்ச் மாதம் அரசு புதிய சட்டம் கொண்டுவந்த போதிலும் இதுவரை அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
நன்றி:மணற்கேணி டைம்ஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக