கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

துபாயில் கன மழை மக்கள் பெரும் மகிழ்ச்சி

துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை (30.11.2012) காலை முதல் கன மழை பெய்தது.

துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெளியே செல்ல முடியாவிட்டாலும் வீட்டில் இருந்தபடியே வெளுத்து வாங்கும் மழையை மக்கள் ரசித்து வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.
dubairain4dubairain5dubairain1
dubairaindubairain2dubairain3
Thanks photos: Khaleej Times

0 கருத்துகள்: