கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கற்பழிப்பு - என்ன தண்டனை? யாருக்கு தண்டனை ?


டெல்லி மாணவி கற்பழிப்பு சம்பவத்தால் சிகிச்சை பலனின்றி உயிர் பலியான பெண் அமானத் பற்றிய செய்தியே தேசிய மற்றும் உலகம் தழுவிய செய்தி ஊடகங்களில் இதுவே கடந்த இரண்டு நாட்களாக தலைப்பு செய்தி!. அந்த கற்பழிப்பு கொடூரத்தை செய்தவர்கள்
கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று கோஷங்கள் கடந்த இரண்டு வாரமாக இந்திய ஊடங்களின் ஒளி, ஒலிகளில் மின்னிக் கொண்டிருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே!.

TRIBUTES TO INDIA’S DAUGHTER, INDIA DAUGHTER REST IN PEACE, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் பலி. ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதல்வர், தி.மு.க. தலைவர் என்று வரிசைப் பிரகாரம் இரங்கல். டெல்லி மாணவி கற்பழிப்பு தொடர்பான செய்திகளை இணையத்தில் வாசிக்க நேரிட்டதில் பெரும்பான்மையான ஊடக தளங்களின் பேனர்களாக மேல், கீழ், இடது, வலது, புறங்கள் பெண்களின் ஆபாச படங்கள் நிறைந்ததாகவே உள்ளது. தொட்டிலை ஆட்டிவிட்டு பிள்ளையை கிள்ளி விளையாடும் இது போன்ற ஊடகங்களுக்கு என்ன தண்டனை?.

பொதுமக்கள் பார்ப்பதற்கென(?) எடுக்கப்படும் சினிமாக்களில் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச காட்சிகளுடன் வயது வித்தியாசமின்றி காம இச்சையை தூண்டும் காட்சிகளை எடுக்கும் சினிமாகாரர்களுக்கு என்ன தண்டனை?.

பெரும்பாலான கற்பழிப்பு குற்றங்களுக்கு காரணமாக இருப்பது மது என்பது ஒட்டுமொத்த மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் வருடத்திற்கு தமிழகத்தில் மட்டும் 27,000 கோடி ரூபாய் டாஸ்மார்க்கிலிருந்து வருமானம் வருகிறதாம்(!!!). தமிழ்நாட்டில் குடிகாரனின் சராசரி வயது 13. ஏராளமான பாலியல் வன்முறைக்கு காரணம் இந்த மதுவே. கேடுகெட்ட இந்த மதுவை வைத்து கடைவிரித்து வருமானம் பார்க்கும் ஆட்சியாளர்களுக்கு என்ன தண்டனை?.

பொது இடங்களிலும் அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் காமப் பார்வையில் சிக்கி கற்பழிக்கப்பட்டட பின்னர், நான் எந்த ஆண் நண்பனோடும் சுற்றுவேன், நான் எவ்வகை ஆடை (ஆபாச அரைகுறை உடையானாலும்) அணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பது என்னுடைய உரிமை என்று போலி பேராட்டங்கள் நடத்தி பெண் சமூகத்தை கேவலப்படுத்தி வழிகெடுத்துவரும் போலிப் பெண்ணுரிமை காவலாளிகளுக்கு என்ன தண்டனை?.

இப்படி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனால், இந்தியாவில் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை பற்றி பேசும் போலிகளான எவனுக்கும் / எவளுக்கு அறுகதையில்லை. இஸ்லாத்தை முறையாக கடைப்பிடித்துவரும் முஸ்லீம்களை தவிர.

டெல்லி பாலியல் வன்முறை தொடர்பாக “பெண்களுக்கு இரவு நேரத்தில் ஊர் சுற்றுவதால் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறுகிறது” என்று 3 பெண் பிள்ளைகளை பெற்றவர் என்ற முறையில் நியாயமான கருத்தை தெரிவித்த ஆந்திராவை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு எதிராகவும், கற்பழிப்புக்கு எதிராக போலிப் பேராட்டம் நடத்தி வருபவர்களைக் கடுமையாக சாடிய இந்திய குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜியையும் காமவெறியைத் தூண்டும் ஊடகங்கள் பொங்கி எழுந்து கண்டனங்களால் தங்களின் போலிப் பெண்ணுரிமை ஆதரவை காட்டினார்கள்.

இஸ்லாத்தை அறியாத அல்லது விமர்சிக்கும் பிறமத சகோதர சகோதரிகளே..! இது போன்ற கற்பழிப்பு வன்முறைகளும், சீர்கேடுகளும் தொடராமல் இருக்க, பெண்களுக்கு மரியாதையை, கண்ணியத்தை கொடுங்கள். அவர்களை அரை நிர்வாணத்துடன் மேடையிலும், திரையிலும், தொலைகாட்சிகளிலும் ஆட விட்டு உங்களின் காம பசியை தீர்த்துக்கொள்ள உதவும் காட்சிப் பொருளாக அவர்களை பயன்படுத்தாதீர்கள்.

செய்த குற்றத்திற்கு ஏற்ற உடனடி தண்டனையும், அது நிகழ்வதற்கு காரணமாக அமைந்த காரணிகளை கண்டறிந்து கலைந்து எறிவதுதான் மக்களுக்கும் பொறுப்பில் இருக்கும் அரசுக்கும் உள்ள தலையாய கடமை. கடும் சட்டங்களால் மட்டுமே பாலியல் குற்றங்களை குறைக்க முடியாது, இஸ்லாம் நிலைநாட்டிய இஸ்லாமிய திட்டங்களால் பாலியல் குற்றங்களை அடியோடு குறைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு - (திருக்குர்ஆன் 24:31, 33 :59).

பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை - (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:32)

ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், சுய பார்வைக் கட்டுப்பாடு  - (திருக்குர்ஆன் 24:30,31).

பத்து வயதுக்கு மேல் ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல் - (ஹதீஸ்).

இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி - (ஹதீஸ்).

பெண்கள் உரிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை - (ஹதீஸ்).

அந்நிய ஆண்களும் பெண்களும் இருபாலரும் இணைந்து சரளமாகப் பழகுவதற்குத் தடை -  (திருக்குர்ஆன் 24:27, 33: 55).

அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை- (திருக்குர்ஆன் 33:32).
வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை - (ஹதீஸ்)

வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் உரிய காலத்தில் விரைவாகத் திருமணம் -(திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)

மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை (திருக்குர்ஆன் 17:31)
வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கொடை (மஹர்) கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)

குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)

கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4  )

இந்த வரம்புகள் அனைத்து மனிதனால் உருவாக்கபட்டதல்ல, இது  அகிலத்தின் அதிபதி இறைவனால் வகுக்கப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியிருக்கும் நாடுகளில் கற்பழிப்பு பேன்ற குற்றங்கள் மிகக் குறைவு என்பது உலகம் அறிந்ததே.
பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்த்தால்தான் தெரியும் அந்த குற்றத்திற்கு எவ்வகை தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று. இஸ்லாமிய குற்றவியல் தண்டனைச் சட்டம் மட்டுமே இதுபோன்ற பாலியல் குற்றங்கள் குறைய மிகச் சரியான தீர்வு.

சிந்தீப்பார்களா வீதியிறங்கியிருக்கும் பெண்ணுரிமை பேரியக்கவாதிகளும், அறிவுஜீவிகள் என்று சொல்லித் திரியும் கேடுகெட்ட பிற்போக்கு சிந்தனையுடைய பெண்ணுரிமைக் காவலாளிகள் (?) அவர்களுக்கு துணைபோகும் அரசியல் வாதிகளும்!?
அதிரைநிருபர் பதிப்பகம்

0 கருத்துகள்: