கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஆஸ்துமா பற்றி தெரியுமா?


இன்றைய காலக்கட்டத்தில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, ஏழைப் பணக்காரர் என்ற பேதமின்றி மக்களை வாட்டி எடுப்பது ஆஸ்துமா நோயாகும். ஆஸ்துமா வலியை ஏற்படுத்தும் நோய் அல்ல என்றாலும், அன்றாட வாழ்க்கையில் தொந்தரவை ஏற்படுத்தி, பாடாய்படுத்திவிடும். அதிலும், இந்நோயால் பாதிக்கப்படும் சிறுவர்களின் பாடு எப்போதுமே திண்டாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆயினும், இன்னமும் நம் சமூகத்தில் பலர் ஆஸ்துமா நோய் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிராததால், இந்நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே உள்ளன. ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களி‌ன் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போ‌ன்றவை செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.

asthmaஇப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாச‌க் குழா‌ய்க‌ள் சுரு‌ங்குவதா‌ல், அத‌ன் வ‌ழியாக கா‌ற்று‌ச் செ‌ன்றுவரு‌ம்போது அ‌திகமாக ச‌த்த‌ம் கே‌ட்‌கிறது. மேலு‌ம், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.

இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அ‌திகமாக‌க் காணப்படும்.

ஆஸ்துமா வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் ஆஸ்துமா நோய்கண்டவ‌ர்க‌ள் பல‌ர் இந்த நோயினை கட்டுப்பா‌ட்டி‌ல் வை‌த்‌திரு‌க்‌கி‌ன்றன‌ர். எனினும், ஒருசில நேரங்களில் நோயின் தாக்கம் இரு‌க்கு‌ம். அ‌ப்போது உ‌ரிய மரு‌த்துவ‌ம் செ‌ய்து கொ‌ண்டு மற்றவர்களை போல சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ்கின்றனர்.

ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும் போது சுவாசக்குழாய்களில் மிக அதிகமான அடைப்பு ஏற்பட்டு, உடலில் முக்கிய உறுப்புகளுக்கு போதிய பிராணவாயு கிடைப்பதில்லை. (உம். மூளை, ஈரல், சிறுநீரகங்கள்). இது போன்ற சந்தர்ப்பத்தில், அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலை ஏற்படுகிறது. ஆஸ்துமாவின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருப்பின் உயிர் இழப்பும் நேரிடுகிறது.
asthma
எனவே ஒருவர் ஆஸ்துமா வியாதியினால் பாதிக்கப்பட்டால், அந்த நபர் மருத்துவரை சந்தித்து, முறைப்படி மருத்துவ உதவியை பெற்றுக்கொள்ள வேண்டும். எதனால் ஆஸ்துமா வருகிறது, அதனை எப்படி தவிர்க்கலாம் என்பதனையும், அறிந்து கொள்ள வேண்டும். மருத்துவரும் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, உட்கொள்ள வேண்டிய மருந்துகளை பரிந்துரைப்பார்.

நோயின் காரணங்கள்
நாம் சுவா‌சி‌க்கு‌ம் கா‌ற்று உ‌ட்பட சுற்றுச்சூழலில் காணப்படுகிறது ‌சில பொரு‌‌ட்க‌ள், ஆஸ்துமா வியாதிக்கான அறிகுறிகள் மற்றும் பாதிப்புக்குளை கொண்டு வருகிறது. ஆஸ்துமா வருவதற்கான சில பொதுவான காரணங்களில் உடற்பயிற்சி, அலர்ஜின்ஸ் எனப்படும் ஒவ்வா பொருட்கள், எரிச்சலூட்டும் பொருட்கள் மற்றும் வைரஸ் நோய் தொற்று போன்றவையும் அடங்கும். சிலருக்கு உடற்பயிற்சி செய்யும் போதும் அல்லது வைரஸ் கிருமிகளால் தாக்கப்படும் போதும் மட்டும் ஆஸ்துமா வியாதி காணப்படுகிறது.

பொதுவான ஒவ்வாமை (அலர்ஜி)
1. மிருகங்களின் (உடலின் மேல்) உள்ள பொடுகு (தோலில், முடியில் மற்றும் இறகுகளிலிருந்து வருபவை)
2. தூசி மற்றும் தூசியில் உள்ள சிறு பூச்சி (வீடுகளில் இரு‌க்கு‌ம் தூசியில் காணப்படுபவை)
3. கரப்பான்பூச்சி                                                                                                                                                    
4. மரங்கள் மற்றும் புல்களிலிந்து வரும் மகரந்தத்தூள்
5. மேல் பூசு பொருட்கள் - பெயின்ட், டிச்டம்பர் போன்றவை                                                                                                       
6. சிகரட் புகை
7. காற்றில் காணப்படும் மாசுப்பொருட்கள்
8. குளிர்ந்த காற்று அல்லது த‌ட்பவ‌ெ‌ப்பநிலை மாற்றம்
9. வண்ணப்பூச்சுப் பொருள் மற்றும் சமைக்கும் பொழுது வரும் வாசனை
10. நருமண மூட்டப்பட்ட பொருட்கள்
11. கடுமையான மன உணர்வுகளை வெளிப்படுத்துதல் ( அழுதல் அல்லது சிரித்தல்)
12. ஆஸ்பரின் மற்றம் பீட்டா பிளாக்கர்ஸ் எனப்படும் மருந்துகள்
13. உணவில் சல்பைட்ஸ் போன்ற பொருட்கள் (உலர்ந்த பழவகைகளில் அல்லது மதுபான வகைகள் ( திராட்சை மது)
14. வயிறு மற்றும் உணவுக்குழாய் பாதிப்பினால் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஆஸ்த்துமாவின் அறிகுறிகளை, பாதிப்புகளை அதிகப்படுத்தி, மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
15. இராசாயனப் பொருட்கள் மற்றும் தூசிப் பொருட்கள்.
16. நோய்தொற்றுதல்
17. குடும்ப பின்னணி
18. குழந்தைகள் புகை‌யிலை‌யி‌ல் இரு‌ந்து வரு‌ம் புகையை சுவாசிக்க நேரிடும் போது, ஆஸ்துமா வருகிறது.
19. ஒரு கர்ப்பிணிப் பெண், புகையிலையிலிருந்து வரும் புகையினை சுவாசிக்க நேரிடும் போது வயிற்றில் வளரும் குழந்தைக்கு எளிதில் ஆஸ்துமா வருகிறது.
19. உடற்பருமனாகுதல், பிற சுகாதாரக் கேடுகள் ஆஸ்துமா மற்றும் வியாதியோடு தொடர்புடையவைகளாக இருக்கலாம்.
நோயின் அடையாள அறிகுறிகள்
மூச்சுத்தினறல் - திடீரென ச‌ளி ‌பிடி‌த்த‌ல், கா‌ய்‌ச்ச‌ல் போ‌ன்ற பாதிப்புக்குள்ளாகுதல், இது அடிக்கடி ஏற்படுதல் 
இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் பாதிப்பு மோசமாகுதல் 
குளிர்ச்சியான பகுதிக்கு செல்லும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது நிலைமை மோசமாகுதல் மற்றும் நெஞ்செரிச்சல் காணப்படும். பின்னர் தானாகவே மறைந்துவிடும் 
மருந்து உட்கொள்ளும் போது மூடிய சுவாசக்குழாய்கள் திறந்து சுகமாகுதல் 
இருமல் அல்லது சளியுடன் கூடிய இருமல் 
சாதாரணமாக வேலைக‌ள் செ‌ய்யு‌ம்போது மூச்சு இறைப்பினால் உட‌ல்‌நிலை மோசமாகுத‌ல் போ‌ன்ற அ‌றிகு‌றிக‌ள் காண‌ப்படு‌ம்.

பரிசோதனைகள் 
எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, நுரையீரல் செயல்திறன் பரிசோதனை (பி.எப்.டி.) போ‌ன்ற ப‌ரிசோதனைக‌ள் மூல‌ம் ஆ‌ஸ்துமாவை‌க் க‌ண்ட‌றியலா‌ம்.

கா‌ய்‌ச்சலை அள‌‌ப்பத‌ற்கு தர்மாமீட்டர் உள்ளது போ‌ல், ஆஸ்துமாவிற்கும் பீக்ப்ளே மீட்டர் என்னும் ஒரு கருவி உ‌ள்ளது. இதனை‌ப் பய‌ன்படு‌த்‌தி ஒரு நுரை‌யீர‌ல் எ‌வ்வளவு சீராக காற்றை வெளியே விடுகிறது எ‌ன்பதை அளவெடு‌க்கலா‌ம்.

சிகிச்சை முறை
சரியான சிகிச்சை முறையினால், ஆஸ்துமாவை சுலபமாக குணப்படுத்த முடியும். குண‌ப்படு‌த்த முடியு‌ம் எ‌ன்பது சாதாரண வாழ்க்கையை வா‌ழ்வத‌ற்கான சூழலை ஏ‌ற்படு‌த்துவது. ஆ‌ஸ்துமா நோயா‌ளிகளு‌க்கு, இன்ஹேலர் பேருத‌வி பு‌ரியு‌ம். ‌கையட‌க்க இ‌ன்ஹேலரை எ‌ப்போது‌ம் உட‌ன் வை‌‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம்போது அதனை நேரடியாக நுரை‌யீரலு‌க்கு‌ள் உ‌ட்சுவா‌சி‌த்து‌க் கொ‌ண்டு இய‌ல்பாக சுவா‌‌சி‌க்க முய‌ற்‌சி செ‌ய்யலா‌ம். முடியு‌ம்.

எதுவாக இரு‌ந்தாலு‌ம் மரு‌த்துவ‌ரி‌ன் ப‌ரி‌ந்துரை‌யி‌ன்படியே செ‌ய்ய வே‌ண்டு‌ம். 
http://vanakkammalaysia.com

0 கருத்துகள்: