கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உலகின் 2 வது பெரிய மதம் இஸ்லாம் – 160 கோடி முஸ்லிம்கள்


உலக மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் ஏதாவது ஒருமதத்தை பின்பற்றுபவர்களாக இருப்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

.உலகில் சுமார் 600 கோடி பேர் பல்வேறு மதங்களைச்சார்ந்துள்ளனர் என்பது பியூ என்ற ஆய்வு நிறுவனம்நடத்தியஆய்வில்
தெரியவந்துள்ளது. சுமார் 200 நாடுகளில் செய்யப்பட்ட மக்கள் தொகைகணக்கெடுப்புத் தரவுகள், கருத்துக்கணிப்பு மற்றும் பிறப்பு இறப்பு பதிவேடுகள் அடிப்படையில் இந்த ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.
.
உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் அதாவதுசுமார் 230 கோடி பேர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுபவர்களாகஉள்ளனர்.
.
இஸ்லாத்தை பின்பற்றுவோர் 160 கோடி பேர் ஆவர்.
.
இந்துக்களின் எண்ணிக்கை 100 கோடியாக உள்ளது. புத்த மதத்தை பின்பற்றுவோர் 50 கோடியாகவும், பழங்குடி- நாட்டுப்புற மரபுகளைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை 40கோடியாகவும் உள்ளது. யூதர்களின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சமாக உள்ளது.
.
நன்றி: மணிச்சுடர்

0 கருத்துகள்: