கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நீங்கள் SSLC / Hr.Secondary படிப்பவரா? - ஓர் நினைவூட்டல் !

நீங்கள் SSLC அல்லது Higher Secondary படிப்பவரா?... அப்படியானால் உங்கள் வாழ்க்கையின் இலக்கை நிர்ணயிக்கும் நேரம் இதைத்தவிர வேறு எதுவும் இல்லை.

இந்த சமயத்தில் எடுக்கும் சரியான முடிவு உங்களின் எதிர்கால
 வாழ்க்கையின் ஒட்டத்தை சரியான தடத்தில் கொண்டு செல்ல உதவும். உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய கண்ணாடி அல்லது ரெக்கார்ட் செய்யப்பட்ட வீடியோ எது தெரியுமா?. நீங்கள் வாங்கும் இந்த பள்ளிக்கூட மார்க் சீட்டும் , சர்ட்டிபிகேட்டும் தான். இதில் நீங்கள் செய்த தேவை இல்லாத விசயஙக்கள் எதுவும் தெரியாது. தேவையான விசயங்களை எப்படி செய்தீர்கள் என காட்டித்தரும்.

உங்களுக்கு இன்னும் சில தினங்களில் [சரியாக சொன்னால் இன்னும் சில மணித்தியாளங்களில்] அரசாங்கத்தேர்வு வர இருக்கிறது , இதை சரியாக எழுதாமல் ' ராத்தாவுக்கு பிள்ளை பிறந்தது, தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் வந்து பார்க்க வந்தவர்களுக்கு எடுப்பு சாப்பாடு எடுத்து கொடுக்க நான் அழைந்ததால் அந்த சமயத்தில் கொஞ்சம் மார்க் குறைவு” அல்லது “எக்ஸாம் டைம்லெ உடம்பு சரியில்லை” என இனிமேல் உஙகள் சர்டிபிகேட்டை பார்க்கும் எல்லோருக்கும் ஒரு ரெக்கார்டட் மெஸ்ஸேஜ் சொல்ல முடியாது... எனவே...படியுங்கள். உறுப்படியாக உங்கள் கடமை உணருங்கள்.

உங்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் இருக்கலாம்.பிடிக்காத சப்ஜெக்ட் என்று எதுவுமில்லை. ஏனெனில் கல்வித்துறை எல்லா பாடத்திலும் பரீட்சை வைப்பது உறுதி. உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்கள் விதிவிலக்கு தரப்போவதில்லை.

சரியான ஆட்களிடம் உங்கள் ஆலோசனைகளை கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதி, காமராஜ் எல்லோரும் படிக்கவில்லை அவர்கள் முன்னேற வில்லையா என்றும் “தாமஸ் ஆல்வா எடிசன் படிக்கலியே" [இவர் கொஞ்சம் அறிவியல் தெரிந்தமாதிரி காட்டிக்கொள்ள மாட்டிக் கொண்ட விஞ்ஞானி நம்ம தாமஸு, மற்றபடி பல்ப் பீஸ் போயிட்டா கூட இவனுகளுக்கு அதை மாத்த தெரியாது] இதுபோல் வெட்டித்தத்துவம் பேசுபவர்கள் நிறைய பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். இவர்களிடம் நீங்கள் என்ன படிக்கலாம் என ஐடியா கேட்பது நோய்க்கு வக்கீலை பார்ப்பதற்க்கு சமம்.

Get the right advice from the right people, not the wrong advice from wrong people.

VISUALISATION

உங்களில் யாராவது சீனியர்களிடம் உள்ள மார்க் சீட்டை (Mark sheet) வாங்கி அதை ஒரு காப்பி எடுத்து அதில் அவருடைய பேருக்கு மாற்றாக அதே போல் உங்கள் பெயரை எழுதி அந்த சப்ஜெக்ட் உள்ள மார்க்கில் நீங்கள் என்ன மார்க் எடுக்க விரும்புகிறீர்களோ அதை எழுதுங்கள் , அதை நிறைய காப்பி எடுத்து நீங்கள் படிக்கும் இடத்துக்கு பக்கத்தில், படுக்கும் படுக்கைக்கு பக்கத்தில், எல்லா புத்தகங்களின் முதல் பக்கத்திலும் ஒட்டி வையுங்கள்.

இதைப் பார்க்க பார்க்க உங்கள் அவேர்னஸ் லெவல் அதிகரிக்கும்.

நான் எழுதியிருக்கும் இந்த Visualisation Technique சிறந்த ரிசல்ட் தருவதற்கு மிக முக்கியமாக கருதுகிறேன். ஏனெனில் இது ஒரு நிருபிக்கப்பட்ட உண்மை.

உங்களின் முன்னேற்றத்துக்கு தடையான விசயங்களை இந்த பரீட்சை சமயத்திலாவது பட்டியலிடுங்கள்.

உதாரணமாக:

1) இன்டர்னெட்டில் தேவையில்லாமல் சாட்டிங், பிளாக்கரில் பிரபலமாக கண்டதையும் எழுதுவது, ஃபேஸ் புக் இது போன்ற 'மட்டையடிக்கிற' விசயங்கள்.

2) சாயங்காலம் கூடும் டீக்கடை, சலூன் வாசல், குளக்கரை மேடு, ஏரிக்கரை ஓரம், தேசிய விருதுக்கு தயாராவது போன்ற பில்டப் கொடுக்கும் விளையாட்டு மைதானங்கள்.

3) உங்கள் படிப்புக்கு சம்பந்தம் இல்லாமல் அமெரிக்காவிலும், லண்டனிலும், துபாயிலும் , சவூதியிலும் பெரிதாக கிழித்துக் கொண்டிருப்பதாக பில்ட் அப் கொடுக்கும் 'வடிவேலுகள்'. இவனுக வாய் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் வாழ்க்கை நாறிடும்.

4) செல்போனில் வெட்டியாக பேசி வா மாப்லே, படிச்சி என்ன ப்ரொஃபொசரா ஆகப்போறெ...வா வா மோட்டார் சைக்கிள்ளதான் ஒரு 1/2 மணி நேரந்தான் பட்டுக்கோட்டை வரை போயிட்டு கொண்டு வந்து உன் வீட்டு வாசலில் விடுறது என் பொறுப்பு போதுமா என அழைக்கும் 'மொபைல் சைத்தான் மாப்ளைங்க' அவன் மோட்டார் சைக்கிளில் வந்தோமே என்பதற்கு நீங்கள் செட் லன்ச்சுக்கும், கூல் ட்ரிங்க்ஸுக்கும் செலவழித்த காசை கணக்கு செய்தால் மவுன்ட் ரோட்டில் பில்டிங் வாங்களாம்.

ஆனால் அந்த காசை சம்பாதிக்க உங்கள் தகப்பனோ, காக்காவோ வெளிநாட்டில் படும் எந்த கஷ்டமும் உங்கள் கவனத்துக்கே வருவதில்லை என்பது நான் ஒவ்வொரு முறையும் ஊர் வரும்போது பார்க்கும் அதிசயம்.

5) மச்சான் வர்ராப்லெ, மாமா வர்ராக என திருச்சிக்கும், சென்னைக்கும் ஏர்போர்ட்டுக்கும் செல்லும் காரில் “ரிசிவ்” பண்ணப்போறேன் என்பதை ஏதோ ஜனாபதி கையால் பதக்கம் வாங்கப் போகிறேன் என்பதுபோல் சொல்லி உங்கள் நல்ல எதிர்காலத்தை 'சென்ட் -ஆஃப்'செய்து விடாதீர்கள்.[ போனவங்களுக்கு வரத்தெரியாதா?].

மேற்கண்ட தடையை பட்டியலிட்ட பிறகு கவனமாக இருங்கள் இவை எல்லாம் உங்களை முன்னேற விடாமல் தடுக்கும் விசயம் & தடைகள்.

என்டர்டெயின்மென்ட் எல்லாம் தவறல்ல... ஆனால், பரீட்சைக்கு பக்கத்தில் மாபெரும் தவறு..

பரீட்சை முடிந்த பிறகு சேரப்போகும் கல்லூரி, பல்கலைக்கழகம் சம்பந்தமான நுழைவுத் தேர்வுகள், அப்ளிகேசனுக்கான கடைசி நாளை சரியாக தெரிந்து வைத்திருங்கள். ஒரு நாள் தவறினாலும் ஒரு வருடம் தாண்டி விடும்.

ஓட்டப்பந்தயத்தில் ஓடத் துவங்கியவனுக்கு இலக்கு எல்லாம் அந்த கடைசியில் உள்ள கோட்டை தொடுவதுதான் இடையில் யாருக்கும் டாட்டா காண்பிக்கவெல்லாம் நேரம் இல்லை... ஒவ்வொரு வினாடியும் உங்களின் வெற்றியை நிர்ணயிக்கும் தருணம்.
                   நீங்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
                                 May Allah bless you for your Success !
நன்றி:http://adirainirubar.blogspot.com/

0 கருத்துகள்: