கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

குடல்வால்(APPENDICITIS) குணமாக எளிய மருத்துவம்

குடல்வால்சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.
அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.
சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் உண்டு. அப்படிப் படியுமானால், அந்த இடம் புண்ணாகும். பின் உணவைத் தள்ளும் காற்றின் மூலம் அக்கற்கள் குடலின் உட்புறம் படிந்துபோய் நின்றுவிடும். பின்னர் அது சிறிய வால் போல் வளர ஆரம்பிக்கும் இதைத்தான் குடல்வால்(APPENDICITIS) என்கிறோம். இதன்மேல் மேல் நாம் உண்ணும் உணவு தாக்கும் போதெல்லாம் ஈட்டியால் குத்தியது போன்ற வலி ஏற்படும்.
சிலருக்கு குடல் ஓரங்களில் உப்பு உறைந்து கல்லைப் போல் காரை கட்டிவிடும் இதனாலும் குடல்வால்(APPENDICITIS) ஏற்படும்.
சுத்தமான விளக்கெண்ணெய் 30 மில்லியும் வாழைக்கிழங்கு சாறு அல்லது வாழைத்தண்டு சாறு 30 மில்லியும் கலந்து காலை நேரத்தில் உணவிற்கு முன் கொடுக்க வேண்டும். இப்படி 3 நாட்கள் தரவேண்டும். பலன் குடல் வாலிலுள்ள கற்கள் வெளியேறிவிடும். முதல் நாளே வலி இருக்காது. 3 நாட்களில் பூரண குணம் தெரியும்.
http://www.thoothuonline.com/

0 கருத்துகள்: