கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது"

படு பயங்கரமா கோபத்தில் இருக்கேன். எல்லாம் இந்த வீணா போன பவர்    கட்-னால தான்...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிம்மதியா தூங்க முடியல... நிம்மதியா காலைல எழ முடியல... பின்ன என்ன எழவுக்கு தான் மிச்ச நேர கரன்டையும் விடுறாங்க ??? :-x


2020ல வல்லரசாம். இங்கே எல்லாரும் கற்காலத்த நோக்கி பயணிக்க வைக்கும் போது 2020ல வல்லராகுறதெல்லாம் கேக்க இப்ப காமெடியா இருக்கு! நெனப்புபொழப்ப கெடுக்கும்... இந்த லட்சணத்துல இந்தியா ஒளிர்கிறதாம் :-\


முதன் முதலில் ஒருமணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்த போது சென்னையில் வழக்கம் போலவே மின்விநியோகம் செய்யப்பட்டது. 2 மணி நேர மின்வெட்டுக்கும் அதே நிலை தான். அம்மா ஆட்சிக்கு வந்த போது 4 மணி நேர மின்வெட்டில் நாங்கள் தத்தளிக்க அங்கே மட்டும் ஒரு மணி நேரமாம். சரின்னு அதையும் பொருத்துக்கிட்டா இங்கே இப்ப 8 மணி நேர மின்வெட்டு. ஆனா சென்னையில் மட்டும் அதே ஒருமணிநேர மின் வெட்டு!


தெரியாமத்தான் கேட்குறேன். சென்னைல உள்ளவிங்களாம் என்ன வானத்திலிருந்து குதிச்சு வந்தங்களா? அவங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல் கவனிப்பு? அங்கே மட்டும் தான் தொழிற்சாலைகளும் இன்ன பிற வளர்ச்சிக்கு உதவும் அமைப்புகளும் இருக்கிறதா? அப்படியென்றால் சென்னைக்கு மட்டும் தேர்தல் நடத்தி அவிங்க கிட்ட மட்டும் ஓட்டு கேட்கவேண்டியது தானே? என்னத்துக்கு மொத்தமா எங்க உயிர வாங்கணும்? அதுலையும் ஒலக தமிழர்கள் சாட்டில் வந்து "ஓ ஆமி... பவர் கட்டா???? எங்க(?!) நாட்ல 2 நிமிஷம் கரன்ட் போனாலே பலபேரு செத்துடுவாய்ங்க தெரியுமா ஒனக்கு?ன்னு சொல்லும் போது கடிச்சு கொதற தோணும்... தூரமா போனதுனால தப்பிச்சீங்க மக்களே....

காலை 6 மணி முதல் 9 மணி வரை
மதியம்12 முதல் 3 வரை
சாயங்காலம் 6 முதல் 7 வரை
இரவு 8 முதல் 9 வரை
10.30 முதல் 11.20 வரை
நடுசாமம் அவங்களுக்கு விருப்பப்பட்ட நேரத்தில் ஒரு மணி நேரம்...

அடப்பாவிகளா?????? இதுல எங்கே 8 மணி நேர மின்வெட்டு?

இன்னும் சில தினங்களில் "இன்று முதல் 24 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வருகிறது"ன்னு அறிக்கை விட்டாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை :-( பேன் ஓடுனா ஒலக அதிசயத்த பாத்த மாதிரி ஆச்சர்யப்பட்டுட்டிருக்கோம். வியர்வையிலேயே எங்கள் நாட்கள் போகிறது. கொசுக்கடியிலும் புழுக்கத்திலுமே எங்கள் இரவுகள் கழிகிறது. கரன்ட் போனப்பிறகு காத்துவாங்கலாம்னு வெளியே வந்தா போரினை நினைவுபடுத்தும் விதமா எங்கிங்கிருந்தோ குழந்தையின் அழுகுரல்கள்... கொசுகடியால் பாதிதூக்கத்தில் எழுந்து கத்தும் சிறுவர்கள்... காலையில் வெளியே வந்தால் கண்ணீர் சொட்ட சொட்ட தேர்வுக்காக அவசரவசரமாக புத்தகத்தை புரட்டும் பக்கத்துவீட்டு பத்தாம்வகுப்பு மாணவி.... வயதான குழந்தைகளின் நிலை இன்னும் பரிதாபம்... :-( பட்டபகலில் கொள்ளை என்பதே சர்வசாதாரணமா போன இந்த காலகட்டத்துல இரவு நேர திருட்டுக்களுக்கு பஞ்சமே இல்ல... எங்கிருந்தோ வரும் சிறுசிறு சத்தங்கள் கூட திருடன் வீட்டில் நுழைந்துவிட்டதான பயத்தை கொடுக்கிறது. நிம்மதியாய் தூங்கி பல நாட்கள் ஆச்சு! பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒருநாள் மின்சார விநியோகம் நிறுத்திவைக்கப்படும். அதெல்லாம் அப்ப எரிச்சலான விஷயம். ஆனா அதையும் சர்வசாதாரணமாய் ஆக்கிவிட்டது இந்த மின்வெட்டு! எலவசமா கிரண்டர் மிக்ஸிய வாங்கி ஷோகேஸ்ல தான் வைக்கணும் :'(


எங்களுக்கு கொடுக்கும் கட்டண அட்டையிலும் ரசீதிலும் மின்சார சிக்கனம் தேவை இக்கணம் என எழுதிதராதீர்கள். அந்த வசனங்களை பணம் படைத்தவன் வீட்டிலும் அரசியல்வாதிகளின் மதில்களிலும் பெய்ன்ட் மூலமா பதிச்சுடிங்க -அவ்வசனம் எங்களை போன்ற நடுத்தர மக்களுக்கு அல்ல... அரசியல்வாதிகளே முதலில் நீங்க செய்யுங்க... அரசியல் மேடைகளில், சட்டசபையில், உங்கள் பங்க்ளாக்களில், பொதுவிழாக்களில் என நீங்கள் செலவு செய்யும் மின்சாரத்தை மக்களுக்கு திருப்பிவிட்டாலே போதும். நீங்க சிக்கனமா இருந்தாலே உலகநாட்டுக்கு நாம கரன்ட் வாரிவழங்கலாம் போல! :'( :'( :'( :'( :'( :'( :'( :'(

5 வருஷத்துக்கு ஒரு முறை ஓட்டுபோடும் வழக்கத்தை கொண்டு வந்தவிங்க மட்டும் கைல கெடச்சா...........
நன்றி:http://kuttisuvarkkam.blogspot.com/இணையத்தளத்திலிருந்து

0 கருத்துகள்: