கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

8 மணி நேர மின்வெட்டு: அம்மி, உரலை நாடும் பெண்கள்

Ammi
சென்னை: தமிழ்நாட்டில் தொடரும் மின்வெட்டால் கிரைண்டர், மிக்சி ஆகியவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளும் முடிவுக்கு பெண்கள் வந்துள்ளனர். மேலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட அம்மிக்கல், ஆட்டு உரல் ஆகியவற்றை நம்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மிக்சியும் கிரைண்டரும் இல்லாத வீடு இப்போது இல்லை!

ஆட்டு உரலையும் அம்மிக்கல்லையும் அறிந்திருக்கும் பெண்களும் இப்போது இல்லை!

காட்சிப் பொருளாகிப் போய்விட்ட அம்மிக்கல்லும் ஆட்டு உரலும் இப்போது அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய நிலை!

எப்போதுதான் மிக்சியும் ஏசியும் கிரைண்டரும் இயங்குமோ என ஏங்கிக் கிடக்க வேண்டிய நிலையை தொடரும் மின்வெட்டு உருவாக்கியதன் விளைவுதான் இது!

ஆட்சி மாறினால் காட்சிகளும் மாறிவிடும் என்பது நப்பாசையாகிவிட்டது!

அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டு அமலுக்கு வந்துவிட்ட பின்பு வேறு என்னதான் செய்ய முடியும்?

25 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக்கல்லையும் ஆட்டு உரலையும்தான் நாடியாக வேண்டும்!

8 மணி நேரம் என்பது அறிவிக்கப்பட்டதுதான் எனினும் அறிவிக்கப்படாத கூடுதல் மின்வெட்டு கிராமப் புறங்களில் நீடித்து வருகிறது.

ஆட்டு உரலும் அம்மிக் கல்லும் சில கிராமங்களில்தான் இப்போதும் உருவாக்கப்பட்டு வரும் நிலையில் மின்வெட்டின் பாதிப்பை இது சமன் செய்து விடாதுதான்.

மின்வெட்டு நீடிக்கும் என்ற நிலையில் ஆட்டு உரலையும் அம்மிக் கல்லையும் தயாரித்து வைத்துக் கொண்டு காத்திருக்கவும் அதன் தயாரிப்பாளர்கள் தயங்கவும் செய்கின்றனர்.

அனைத்து பொருட்களின் விற்பனையும் உயரும்போது இவற்றின் விலையும் உயராமல் இருக்குமா என்ன?

300 ரூபாய் தொடங்கிய 500 ரூபாய் வரை அம்மிக்கல் விலையும் 200 ரூபாய் தொடங்கி 600 ரூபாய் வரை ஆட்டு உரலும் விற்கப்படுகிறது..

மின்வெட்டு நீடித்தால் அம்மி, ஆட்டு உரல் வாங்கலையோ என்ற கூப்பாடு இனி அனைத்து வீதிகளிலும் எதிரொலிக்கத்தான் செய்யும்...
நன்றி:http://tamil.oneindia.in/

0 கருத்துகள்: