கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மறுமை வாழ்வு பற்றி தெளிவான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முடியாது!


எத்தகைய தந்திரமும் மறுமை வாழ்வு பற்றி தெளிவான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முடியாது! -பிரபல பத்திரிக்கையாளர் அருந்ததி ராய்.

அஃப்சல் குரு வழக்கில் அவருக்கு எதிராக நேரடி சாட்சியங்கள் இல்லை. ஆனால் சூழ்நிலை, சந்தர்ப்பத்தை வைத்துதான் அவர் குற்றவாளி ஆகின்றார். இப்படிப் பட்ட ஒரு குற்றவாளியை சமூக மக்களின் (எந்த சமூகம்??) கூட்டு மனநிலை திருப்தி அடைவதற்காக, இவருக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. இது தான் தீர்ப்பின் தமிழாக்கம்.

இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் அருந்ததி ராய் எழுதிய கட்டுரையிலிருந்து...!

இன்று உலகில் வாழுகின்ற எல்லா மதங்களும் (ஹிந்து மதம் உட்பட) இறந்த பின் ஒரு வாழ்வு உள்ளது என்று பகிரங்கமாக பறைசாற்றிய போதும், இஸ்லாம் மதத் தலைவர்களைத் தவிர ஏனைய மதத் தலைவர்கள் இந்த மரணத்தைப் பற்றியும், மரணத்தின் பின் உள்ள வாழ்க்கை பற்றியும் எங்கும், எந்த மேடையிலும் பேசுவது கிடையாது.

100 சதவிதம் அனைத்து மனித வாழ்விலும் ஏற்படப் போகின்ற இறப்பு என்ற நிகழ்வைப் பற்றி பேசுவதைக் கூட அபசகுணமாக எண்ணும் அவல நிலையில் தான் ஹிந்துக்கள் வாழ்கிறார்கள்.

ஆனால் நாளை நடக்க உள்ள திருமணத்தின் மணப்பெண்ணின் தந்தை திடீரென்று முதல் நாள் மாலை இறந்து விட்டால் கூட திருமணம் நிறுத்தப் படுவதில்லை.

காலையில் தந்தையின் உடலை அடக்கம் செய்து விட்டு, மாலையில் திருமணம் நடத்தப்படும். இது எப்படி சாத்தியமாகின்றது? 

இறப்பு என்பது மனிதனின் வாழ்வின் ஒரு நிகழ்வு. வேறு ஒரு நிலைக்கு ஏற்படும் மாற்றம் தான் இறப்பு. குறிப்பாக முஸ்லிம்கள் தாங்கள் இறந்த பின் ஒரு உயர்ந்த நிலையான சொர்க்கத்திற்குத் தான் செல்லப் போகின்றோம் என்ற நம்பிக்கையினால் இறப்பை அது வரும் போது, ஏற்றுக் கொண்டு விடுகிறார்கள்.

இத்தகைய மனநிலையில் வாழ்கின்ற ஒரு சமூகத்தை, அஃப்சல் குருவின் தூக்கு எதுவும் செய்யாது. அஃப்சல் குருவின் குற்றத்தை சந்தேகமில்லாத வகையில் நிருபிக்க அரசு தவறியதால், அவரை ஒரு சமூக போராளியாகத்தான் இந்த சமூக இளைஞர்கள் பார்ப்பார்கள்.

இத்தகைய மரணம் மறுமையில் ஒரு வெற்றியாகத் தான் அமையும் என்ற சிந்தனையையும் இது ஏற்படுத்தவும் முடியும்.

மேலும் பஞ்ரங்தள் போன்ற அமைப்பினர் அஃப்சல் குருவின் மரணத்தை கொண்டாடுவதை செய்தியாக வெளியிடும் பத்திரிக்கைகள் ஏன் இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களின் கருத்தையும் சேர்த்து செய்தியாக வெளியிடவில்லை.

இது முஸ்லிம்களை தனிமைபடுத்தும் நோக்கில் செய்யப்படும் தந்திரம்.

ஆனால் எத்தகைய தந்திரமும் மறுமை வாழ்வு பற்றி தெளிவான நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முடியாது.
- அருந்ததி ராய்

0 கருத்துகள்: