கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

சிதம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மாயமான வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்


சிதம்பரம் கல்லூரி மாணவர் முகமதுபைசல் கடந்த 2012 ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி  காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

சிதம்பரம் முத்துமாணிக்க நாடார்தெருவில் வசிக்கும் முகமதுயாசின் மகன் முகமதுபைசல் (21). இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பிகாம் இராண்டாம் ஆண்டு பயிலுகிறார். கடந்த
2012 அக்டோபர் மாதம்.7-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிதம்பரத்திலிருந்து திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கல்லூரிக்கு சென்றுள்ளார். மாலை 5 மணிக்கு கல்லூரிக்கு சென்றுவிட்டதாக பெறறோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பிறகு அக்.8-ம் தேதி அன்று அதிகாலை 5.09 மணிக்கு மாணவர் முகமதுபைசல் செல்போனிலிருந்து அவரது தந்தை செல்போனிற்கு உங்களது மகனை கடத்தியுள்ளோம் என மர்மநபர்கள் பேசியுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அவரது தந்தை  முகமதுயாசின் அளித்த புகாரின் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். ஆனால் விசாரணையில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மாணவரின் பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிச.19-ம் தேதி ஹேப்பியல் ஹார்பஸ் (ஆட்கொணர்வு மனு) தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கல்லூரி மாணவரை கண்டிபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிதம்பரம் நகர போலீஸாருக்கு உத்தரவிட்டார். மாணவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சிதம்பரம் போலீஸார் 4 முறை காலஅவகாசம் பெற்றனர்.  இந்நிலையில் இன்று(பிப்.18)  சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவர் காணாமல் போன வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாஷா, தேவதாஸ் ஆகியோர் மாணவர் முகமதுபைசல் மாயமான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

நன்றி:Dinamani

0 கருத்துகள்: