கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அல்-ஜன்னத் ஆசிரியரிடமிருந்து ஒரு மடல்…


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, நேரான வழியில்நிலைத்திருக்கச் செய்வானாக!

வாழ்க்கை என்பது இன்பமும் துன்பமும் நிறைந்ததாகும். மனிதர்களை அல்லாஹ் சோதிப்பான் நன்மையைக்கொண்டும் சோதிப்பான், தீமையைக் கொண்டு சோதிப்பான்.
இது அல்லாஹ்வுடைய நியதிக்கு உட்பட்டதாகும். இப்படிப்பட்ட சோதனைகள் நல்லவர்களின் வாழ்விலும் ஏற்படும், தீயவர்கள் வாழ்க்கையிலும் ஏற்படும். அபரிமிதமான செல்வத்தையும் கொடுத்து சில மனிதர்களை அல்லாஹ் சோதிப்பான்.அந்த செல்வச்செழிப்பிலே மிதந்து, அதை வழங்கிய அல்லாஹ்வை நினைத்துப்பார்த்து அவனுக்கு நன்றி செலுத்துகின்றானா? அல்லது அகம்பாவம் பிடித்து ஆணவம் கொண்டு நன்றி கெட்டு நடக்கின்றானா? என்று சோதிப்பான். இந்த நேரத்தில் தான் மனிதன் கவனமாக இருக்க வேண்டும். அவனை அவனது செல்வம் வழிகேட்டில் அழைத்துச் சென்று விடாமல் எச்சரிக்கையாக இருப்பவனே புத்திசாலியானவன். சோதனையில் வெற்றிபெற்றவனாகவும் கருதப்படுவான். இவ்வாறே வறுமையைக் கொண்டும் அல்லாஹ் தன் அடியார்களை சோதிப்பான், இது நல்லவர்களுக்கும் ஏற்படும் தீயவர்களுக்கும் ஏற்படும், நான் நல்லவனாகி விட்டேனே, அல்லாஹ்வுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாகத்தானே செய்கின்றேன். பின்பு ஏன் அவன் என்னை வறுமையில் வாட்ட வேண்டும்? என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகளை எழுப்பி விரக்தியடைந்து விடக்கூடாது. அப்படி விரக்தியடையக்கூடியவன் வாழ்க்கையில் தோல்வியடைந்து விடுகின்றான்.

இதுபோன்றே நோயைக் கொண்டும் தன் அடியார்களை அவன் சோதிப்பான். அந்த நேரத்தில் பொறுமையைக்கடைப்பிடிப்பவன் தான் உண்மையான இறை நம்பிக்கையாளனாவன். இது அல்லாஹ்வின் நாட்டத்தின் மூலம்நடந்தது. இதன் மூலம் அல்லாஹ் ஏதாவது நன்மையை நாடியிருப்பான் என்று நம்பி திருப்திபட்டுக் கொள்வான். தனக்கு ஏற்பட்ட நோயை விடவும் மிக மோசமான நோயினால் அவதிப்படக் கூடியவர்களின் நிலையை அல்லாஹ் தனக்கு வழங்கவில்லை என்பதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவான்.

பொதுவாக எல்லாமே படைத்த நாயனின் நாட்டத்தாலேயே நடக்கிறது எதனால் இவையெல்லாம் நடக்கிறது என்ற இரகசியத்தை அவன் ஒருவன் மட்டுமே அறிந்தவனாக இருக்கின்றான் என்று நம்புவது தான் நமது கடமையாகும். ”நிச்சயமாக நாம் உங்களை ஒரு சில அச்சத்தாலும், பசியாலும் செல்வத்திலும், உயிரிலும், விவசாயத்திலும் இழப்பை ஏற்படுத்தியும் உங்களை சாதிப்போம், அப்போது பொறுமையை கடைபிடிப்போருக்கு நீர் வாழ்த்துச் சொல்வீராக!” அல்குர்ஆன் 2 : 155

உங்கள்நலம்நாடும்
S.கமாலுத்தீன்மதனி
http://www.jaqh.info/

0 கருத்துகள்: