கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அரசியல் பாதை முட்களாலானது: அப்துல்ரஹ்மான் எம்.பி கருத்து!


அரசியல் பாதை முட்களாலானது என்று வேலூர் மக்களவைத் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரமுகருமான அப்துல்ரஹ்மான் எம்.பி தெரிவித்தார்.


மூன்றுநாள் பயணமாக சவூதி அரேபியாவுக்கு வருகை புரிந்துள்ள அப்துல்ரஹ்மான் எம்.பி தனது உம்ரா புனித பயணத்தை முடித்துக்கொண்டு  ரியாத் வந்து தங்கியிருந்தார். அச்சமயம் அவரை  நட்பார்ந்த முறையில் சந்தித்த  நமது செய்தியாளரிடம்  இவ்விதம் தெரிவித்தார்.

"கலை என்ற பெயரால் யாருடைய மத உணர்வுகளும் புண்படுத்தப் படக் கூடாது" என்றார் அப்துல் ரஹ்மான் எம்.பி.

விஸ்வரூபம் எடுத்த முஸ்லிம்களின் கூட்டமைப்புப் போராட்டம் பற்றி பேசுகையில் "மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகளையும், படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மற்ற அமைப்புகளுடன்  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஒன்று படவே செய்கிறது. ஆனால், அதற்கான போராட்ட வடிவங்களில் தனக்கே உரிய பொறுப்பான அணுகுமுறையால் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறது" என்றார் முஸ்லிம் லீக் எம்.பி

"சமுதாய நோக்கிலும், அரசியல் நோக்கிலும் ஒவ்வொரு அமைப்பினரும் தத்தம் வழிமுறைகளைக் கொண்டு சேவை செய்வது பாராட்டிற்குரியதே" என்ற நாடாளுமன்ற உறுப்பினர் "சில பாதைகளில் சிவப்புக் கம்பளங்கள்; சிலவற்றிலோ பாலை மணல், ஆனால் நேர்மையும் ஒழுக்கமும் நிரம்பியவர்களுக்கு அரசியல் பாதை என்பது முட்கள் மட்டுமே பரப்பபட்ட பாதையாகும்" என்றார்.
சந்திப்பின் போது தஃபர்ரஜ்-ரியாத் குழும நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

0 கருத்துகள்: