கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர மகளிரணி மாநாடு


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் சென்னை மாநகர  மகளிரணி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பாலியல் வன்கொடுமை போன்ற கொடூரமான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க சட்டத்தில் இடமளிக்க வேண்டும் என்ற வர்மா குழு பரிந்துரையை உடனடியாக நடைமுறை படுத்த வேண்டும். இந்தத் தண்டனைகளைப் பொதுமக்கள் முன்னிலையில் நிறைவேற்ற வேண்டும். இதுபோன்ற தண்டனைகளைப் பொதுமக்களைச் சாட்சியாக்கி வழங்கினால் அது நிச்சயமாக குற்றத் தடுப்பு நடவடிக்கையாக அமையும்.

அச்சு ஊடகங்களிலும் காட்சி ஊடகங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் பெண்களை அரைகுறையாகக் காட்டுவதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.  அதனைக் குற்றமாக அறிவிக்க வேண்டும்.

திரைப்படங்களில் ஆபாசம், வன்முறை, மத உணர்வுகளைக் காயப்படுத்தக்கூடிய வகையில் காட்சிகள் போன்றவற்றைத் தடை செய்ய வேண்டும். திரைப்பட தணிக்கைக் குழுவில் அரசியல் தலையீடு இல்லாமல் சமூக அக்கறையுடையவர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் எந்தக் குறுக்கீடு இல்லாமல் பொறுப்புணர்வுடன் செயல்படும் வகையில் தணிக்கை குழுவில் செயல்முறைகளை விரைவில் ஒழுங்கமைக்க செய்ய வேண்டும்.

ஆண்-பெண் விகிதாச்சாரம் கவலைக்குரிய வகையில் குறைந்து வருகிறது. ஆகவே பெண் சிசுக் கொலைகளை எல்லாக் கட்டங்களிலும் தடுத்து நிறுத்த வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.

எல்லாத் தீமைகளுக்கும் குற்றங்களுக்கும் குறிப்பாக, பெண்களுக்கு எதிரான எல்லாக் கொடுமைகளுக்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது மது.  எனவே மதுவை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்.  அரசாங்கமே சாராயம் விற்கும் போக்கு அகற்றப்பட வேண்டும். டாஸ்மாக் கடைகள் அனைத்தும் முற்றிலுமாக மூடப்பட வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் மாணவிகளுக்குக் கண்ணியமான ஆடைகளை நிர்ணயிக்க வகை செய்ய வேண்டும்.

பாடத்திட்டங்களில் நீதிபோதனை வகுப்புகளைக் கட்டாயமாக்க வேண்டும். நன்னடத்தை விதிகளைக் கடுமையாக்க வேண்டும். இதற்கு மத-ஆன்மீகச் சான்றோர்களின் வழிகாட்டுதலைக் கேட்டுப் பெற வேண்டும்.

திருமணம் எளிதாக்கப்படல் வேண்டும். குறித்த காலத்தில் திருமணம் புரிய ஊக்குவிக்க வேண்டும். வரதட்சணையின் அனைத்து வடிவங்களையும் தடைசெய்ய வேண்டும். எல்லா வகையான வீண் செலவுகளையும் ஆடம்பரங்களையும் கட்டுப்படுத்த வேண்டும்.

திருமணத்துக்கு அப்பாற்பட்ட எல்லா வகையான பாலியல் சேர்க்கைகளையும் சட்டவிரோதமானவை என்றும், தண்டனைக்குரிய குற்றம் எனவும் பிரகடனம் செய்ய வேண்டும்.


முஸ்லிம்களின் திருமணங்கள் பள்ளிவாசல்களில் முறையாகப் பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பதிவுகளையே சட்டரீதியாக பெற்றுக் கொள்ள அரசு முன்வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றோம்.
http://www.jihtn.org/

0 கருத்துகள்: