கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு – இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!


‘விஸ்வரூபம்’ சர்ச்சைக்கு தீர்வு - இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் இடையே உடன்பாடு!சென்னை:சர்ச்சைக்குரிய விஸ்வரூபம் திரைப்படம் தொடர்பான பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர், கமலஹாசன் மற்றும் உள்துறைச்செயலரிடையே  சுமூக உடன்பாடு ஏற்ப்பட்டுள்ளது.

விஸ்வரூபம் விவகாரம் குறித்து உள்துறைச்செயலர், கமலஹாசன், இஸ்லாமிய பிரதிநிதிகள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. ஐந்து மணிநேரம் நீண்ட  இப்பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டது.

சர்ச்சைக்குரிய இப்படத்திலிருந்து 15 காட்சிகளை நீக்கவேண்டும் என்று இஸ்லாமிய கூட்டமைப்பினர்  பேச்சுவார்த்தையின் போது முன்வைத்தனர். ஆனால் சில தொழில்நுட்ப கோளாறால் அனைத்தையும் நீக்க முடியாது என்று கூறிய கமலஹாசன் 7 காட்சிகளை நீக்கவும், சில இடங்களில் வசனங்களின் ஒலியை நீக்கவும் சம்மதம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து  உள்துறைச்செயலர் முன்னிலையில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் கமலஹாசனிடையே எழுத்துப் பூர்வமான உடன்பாடு ஏற்பட்டது.

இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்பு இஸ்லாமிய கூட்டமைப்பின்  பிரதிநிதிகள் கூறும்போது;

“விஸ்வரூபம் படத்தின் துவக்கக் காட்சியில் ‘இது உண்மைத் தொகுப்பு’ என்று இருந்தது. அதை மாற்றக் கோரினோம். அதன்படி  ‘இப்படம் முழுக்க முழுக்க கற்பனையே’ என்று பதிவு செய்ய கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். படத்தில் 15 காட்சிகளை நீக்கக் கோரினோம்; அதில் 7 காட்சிகளை நீக்க கமல் ஒப்புதல் அளித்தார். அதை ஏற்றுக்கொண்டோம்.” என்றனர்.

இதைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் கூறும்போது; “இந்தப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்வர், உள்துறைச் செயலருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.  இஸ்லாமிய சகோதரர்களுடன் நடத்தியப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.  இஸ்லாமிய சகோதரர்கள் கேட்டுக்கொண்ட சில காட்சிகளின் ஒலியை நீக்குகிறேன்.  எங்கள் தரப்பில் கொடுக்கப்பட்ட ரிட் மனுவை வாபஸ் பெறுகிறோம். விஸ்வரூபம் மீதான தடையை அரசு நீக்கும் என்று நம்புகிறேன்.  விஸ்வருபம் ரிலீஸ் தேதியை விரைவில் அறிவிப்பேன் என்று என் ரசிகர்களுக்குக் கூறிக்கொள்கிறேன்.” என்றார் கமலஹாசன்.
http://www.thoothuonline.com

0 கருத்துகள்: