கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஆடுதுறையில் மாநாடாக நடைபெற்ற மாநபி பிறந்த தின விழா:இ.யூ. முஸ்லிம் லீக் தலைவர்கள் - உலமா பெருமக்கள் பங்கேற்பு


ஆடுதுறை, பிப்.15- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை இணைந்து நடத்திய உத்தம திருநபி (ஸல்) அவர்கள் உதய தின விழா நடை பெற்றது. 

தஞ்சை மாவட்டம் ஆடு துறை தெற்கு செட்டித் தெரு வில் பிப்ரவரி 13-ம் தேதி புதன்கிழமை நடைபெற்ற இவ் விழாவிற்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மவ்லானா ஏ.இ.எம். அப்துல் ரஹ்மான் ஹஸரத் தலைமை தாங்கினார்.

திருவிடைமருதூர் ஜமாஅத் துல் உலமா சபை துணைச் செயலாளர் மவ்லவி எஸ்.அப்துல் ஸமது இறைமறை ஓதினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில கல்விப் பணிச் செயலாளரும், ஆடுதுறை அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் தாளாளருமான ஏ.எம். ஷாஜ ஹான் அனைவரையும் வர வேற்றுப் பேசினார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம் மது அபூபக்கர், காயிதெ மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கி ணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற் றினர்.

அமீரக காயிதெ மில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ. லியாகத் அலி, மக்கள் தொடர் புச் செயலாளர் ஆவை ஏ.எஸ். அன்சாரி, கத்தார் காயிதெ மில்லத் பேரவைத் தலைவர் கே.வி.ஏ. டி. ஹபீப் முஹம்மது, 

தஞ்சை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலா ளர் லயன் ஏ. பஷீர்அஹமது, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மோதீன் கே.ஏ. அப்துல் நஸீர், மாவட்ட துணைத் தலைவர் திருப்பனந்தாள் சர்புதீன், மாவட்ட துணைச் செயலாளர் ஆடுதுறை ஹாஜி முஹம்மது, மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் பண்டாரவாடை ஆர். தாவூத் பாட்சா, 

நாகை வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அபூபாரிஸ், கும்பகோணம் எம்.எஸ்.எஃப். அமைப்பாளர் எம். அப்துல்லாஹ், மாவட்ட துணைத் தலைவர் திருமங்கலக் குடி எம். முஹம்மது சுல்தான், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஓ.முஹம் மது ஹுசைன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ஆர். கமாலு தீன் பைஸி, மாவட்ட இணை அமைப்பாளர் வழுத்தூர் எம். முஹம்மது நாஸர், அஸ்ஸலாம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சேர்மன் எம்.ஜே.ஏ. ஜமால் முஹம்மது இப்ராஹீம், ஆடு துறை நகரத் தலைவர் ஏ.ஷேக் அலாவூதீன், நகரச் செயலாளர் எம். ஸலாஹுதீன், ஆவனியா புரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே. நஜீர் முஹம்மது, அல்-அரமைன் ஹஜ் சர்வீஸ் தலைவர் ஏ. முஹம்மது இக்பால், 

ஆடுதுறை இமாம் மவ்லவி இ. ஷாகுல் ஹமீது தாவூதி, திருவிடை மருதூர் ஜமாஅத்துல் உலமா கவுரவத் தலைவர் எம். முஸ்தபா தாவூதி, தலைவர் மவ்லவி ஏ. அப்துல் அஜீஸ் மக்தூமி, பொருளாளர் மவ்லவி என்.எஸ். அப்துல் இலியாஸ் மிஸ்பாஹி மற்றும் திருவிடை மருதூர் வட்டார அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள், ஜமா அத்துல் உலமா சபை பிரமுகர் கள் கலந்து கொண்டனர்.

மாநாடாக நடைபெற்ற இம் மாபெரும் விழாவில் ஐநூறுக் கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கா னோர் இந் நிகழ்ச்சியில் பங் கேற்று சிறப்பித்தனர்.

0 கருத்துகள்: