கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் சேவை

ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பாஸ்போர்ட் முகாம்இவ்வாண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ள ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் அலுவலக சிறப்பு முகாம், வரும் மார்ச் 31ம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள மூன்று சேவை மையங்களில் ஒன்றான சென்னை, சாலிகிராமம், டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா சாலையில் உள்ள பாஸ்போர்ட் உதவி மையத்தில், வரும் 31ம் தேதி காலை, 9.30 மணி முதல், மதியம், 2 மணி வரை, ஹஜ் பயணிகளுக்காக பாஸ்போர்ட் சிறப்பு முகாம் நடக்கிறது விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதள விண்ணப்பத்துடன், மாநில ஹஜ் குழுவின் ஒப்புதல் சான்றிதழை பெற வேண்டும். மேலும் விவரங்களை, 044 - 2825 2519, 2822 7617 ஆகிய எண்களில் பெறலாம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக வரம்பிற்குள் வசிக்கும் ஹஜ் பயணிகள் இம்முகாமில் பங்கேற்கலாம். பாஸ்போர்ட் அலுவலக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: