கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மயிலாப்பூர் பள்ளிவாசலுக்குள் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட அதிமுக பெண் நிர்வாகியால் பரபரப்பு

சென்னை : மயிலாப்பூர் அப்பு தெருவில் சார்சமன் பள்ளிவாசல் உள்ளது. பள்ளிவாசலுக்கு சொந்தமான இடம் பின்புறம் இருக்கிறது. இந்த இடத்தை அதிமுக நிர்வாகி சரஸ்வதி என்பவர்
 ஆக்கிரமித்து வீடு கட்டி யதாக பள்ளிவாசல் கமிட்டி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பள்ளிவாசல் இடத்தை ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்கும்படி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.'

அதன்படி மாநகராட்சி அதிகாரிகள் அந்த வீட்டை நேற்று மாலை இடித்தனர். இதன் பிறகு பள்ளிவாசலுக்கு முஸ்லிம்கள் வந்து தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக நிர்வாகி சரஸ்வதி 10க்கும் மேற்பட்டவர்களுடன் வந்து, தொழுகை செய்து கொண்டிருந்தவர்கள் மீது ஜன்னல் வழியாக செங்கற்களை வீசியுள்ளார். இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த மீரான், நியமத் உள்பட 4 பேருக்கு கை, கால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பள்ளிவாசல் கூரை, ஜன்னல்கள், கதவுகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தன. ரத்த காயத்துடன் கிடந்த 4 பேரும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=5670

0 கருத்துகள்: