கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

முஸ்லிம் குழந்தைகளுக்கு இடமறுப்பு: இந்திய தலைநகரில் அதிர்ச்சித் தகவல் - கே.எம்.கே.

`டெல்லி நர்சரி பள்ளிகளில் முஸ்லிம் சிறார்களைப் பார்ப்பது அபூர்வமாக இருக்கிறது  என்று `தி ஹிண்டு  நாளிதழில் 19-3-2012-ல் ஒரு கட்டுரை பிரசுரமாகியிருக் கிறது.

டெல்லியில் உள்ள 179 பள்ளிக்கூடங்களையும் ஆய்வு செய்து, இந்தக் கட்டுரையை பிந்து ஷாஜன் பெரப்பாடன் மற்றும் ரானா சித்தீக் ஜமான் ஆகிய இருவரும் எழுதியிருக் கிறார்கள்.


டெல்லி பள்ளிக் கல்வி இயக்குநரகம் ஒவ்வொரு பள்ளிக்கும் தாக்கீது அனுப்பி, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் சேர்க்கப் பட்டுள்ள மாணவர்கள் பற்றிய விவரங்களைப் பொது அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் என்று கூறியி ருந்தது.

டெல்லியில் உள்ள 179 பள்ளிகளில் 87 பள்ளி நிர்வாகங் கள் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. முஸ்லிம் மாணவர்கள் பற்றிய எந்தவொரு தகவலும் அவைகள் தருவதற்குத் தயாராக இல்லை.

மீதமுள்ள 179-87 = 92 பள்ளிகளில் முஸ்லிம் சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளார்களா என்று ஆய்வு நடத்தியபோது, தெரிந்த தகவல் முஸ்லிம்களின் பரிதாப நிலையை வெளிப்படுத்தி யிருக்கிறது.

இந்த 92 பள்ளிகளில் 20 பள்ளிக்கூடங்களில் ஒரு முஸ்லிமும் இல்லை. 17 பள்ளிகளில் ஒரே ஒரு முஸ்லிம் சிறார்தான் சேர்க்கப்பட்டுள்ளார். மீதமுள்ள பள்ளிக்கூடங்களில் கணக்கெடுத்த போது ஒரு பள்ளிக்கூடத்தில் இரண்டு மாணவர்கள் இருந்தனர்; ஒருபள்ளியில் 5 மாணவர் இருந்தனர்.

ஒரே ஒரு பள்ளியில்தான் 65 மாணவர்கள் இருந்தனர். அவர்களில் 23 பேர் பொது முறையில் சேர்க்கப்பட்டவர்கள்; 42 பேர் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற முறையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ள பெருநகரில் பள்ளியில் இடம் பெற்றவர் கள் வெறும் 0.5 சதவீதம் தான்.

முஸ்லிம்கள் குவியலாக வாழும் பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களில் கூட முஸ்லிம் மாணவர்க்கு இடம் கிடைப்பதில்லை. தரமான பள்ளிக்கூடத்தில் படிக்க வைக்க விரும்பும் பெற்றோர் அலைந்து திரிந்து இறுதியில் தங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க முடியாமல் மனம் நொந்து போய் விடுகிறார்கள். ஒருசிலர் மட்டுமே இந்தக் குறைபாட்டை சமூக சேவையாளர்களிடமும், மனித உரிமை காக்கும் நிறுவனங் களிடமும் முறையீடு செய்கின்றனர். டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்ஷித் அவர்களிடம் இந்த பிரதிநிதிகள் சமீபத்தில் முஸ்லிம் மாணவர்க்கு ஏற்பட்டுள்ள அவலம் பற்றி தெரிவித் திருக்கிறார்கள்.

`தி ஹிண்டு  நாளிதழ் செய்தியைப் படித்துத் துடித்துப் போன ராம் விலாஸ் பாஸ்வான் மாநிலங்கள் அவையில் இதுபற்றிய பிரச்சினையை எழுப்பியுள்ளார். முஸ்லிம்களுக்கு நர்சரி பள்ளிக்கூடங்களில்கூட இடமில்லையா? முஸ்லிம்கள் இந்த நாட்டுப் பிரஜைகள் இல்லையா? என்று ஆவேசத்துடன் பேசியுள்ளார்.

இந்தப் பிரச்சினை குறித்து, டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் விரைவில் முழு விவரமும் சேகரித்து வெளியிடுவோம் என்று கூறியிருக்கிறார். மைனாரிடிகளுக்கான தேசிய கமிஷன், இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்வதற்கு முன்வந்திருக்கிறது. சிறுபான்மை யினருக்கான நலத் திட்டங்களினால் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய பலன் எதுவும் கிடைக்கவில்லை என்பதையே இந்த தகவல் மூலம் தெரிகிறது என்றும் மைனாரிடி கமிஷன் கருத்துத் தெரிவித் திருக்கிறது.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் முஸ்லிம் குழந்தைகளை சேர்க்க மறுத்துள்ள பள்ளிக் கூடங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதுபற்றி முழு விவரமும் சேகரிக்க கூறியுள்ளதாகவும் தெரிவித் திருக்கிறார். `தி ஹிண்டு  நாளிதழ் எடுத்துக் காட்டியதை பரிவோடு எல்லோரும் பார்த்துள்ளனர். ஆனால், பாரதீய ஜனதா கட்சி எம்.பி., பல்பீர் புஞ்சு என்பவர் என்ன கூறினார் தெரியுமா?

பாராளுமன்றத்தில் கல்வி பற்றிப் பேசும் போது மதத்தை எதற்கு குறிப்பிடுகிறீர்கள். முதலில் முஸ்லிம்களை மதரஸாக்களுக்கு போகாதீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்.

எப்பொழுதும் வேதாளம் முருங்கை மரத்தில்தான் ஏறுகிறது!
http://www.muslimleaguetn.com/

0 கருத்துகள்: