ஹிஜாபைப் பற்றிய குற்றச்சாட்டுகள் நிறைய..அது பெண்களை தாழ்த்தப்பட்டவர்களாய் காண்பிக்கிறது, ஆண்களின் வற்புறுத்துதலால் மட்டுமே பெண்கள் அதை அணிகிறார்கள்..இன்னும் பல..
ஹிஜாபைப் பற்றி நாம் அதிகம் எங்கும் பேசுவதில்லை...காரணம் அதை நாம் பெரிதாக எடுத்து கொள்வதில்லை..
நம் இஸ்லாமிய இளம் பெண்களால் ஹிஜாப் எந்த அளவிற்கு பேணிக்காட்கப்படுகிறது...??? யோசிக்க பட வேண்டிய ஒன்று தான்..
ஏன் நம்முடைய இளம் பெண்கள் ஹிஜாபை அணியாமல் இருப்பதை பற்றி கவலை கொள்வதில்லை..??
சில சமயங்களில் நம் இஸ்லாமிய பெண்கள் மற்ற மதத்தின் பெண்கள் அணியும் ஆடையை விட குறைவாக அணிந்து நடமாடுகின்றனர்..நம் காயல் மக்கள் இந்த ஹிஜாப் விஷயத்தில் எவ்வளவோ பரவாயில்லை என்றாலும் நம் மற்ற பெண்களின் நிலைமை என்ன..ஹிஜாப் அணியப்படுகிறதா??..
நம்மை சுற்றி அனைவரும் ஹிஜாப் அணிகிறார்கள், நாமும் அணிகிறோம்.ஹிஜாப் அணிவதில் சவால் எதுவும் இல்லை இங்கே...
ஆனால் நம் இளம் இஸ்லாமிய பெண்கள் பள்ளிகளுக்காகவோ அல்லது கல்லூரிகளுக்காகவோ வெளியூர் செல்லும் போது அங்கே மற்ற மதத்தவருடன் பழக நேரிடுகிறது.அங்கே சில சமயம் மற்ற மதத்தவரின் கேலி பார்வையாலும் இன்னும் சில சமயம் 'ஏன் அவர்களை போன்று நாமும் உடை அணிந்து வெளியே செல்லக் கூடாது' என்ற எண்ணத்தாலும் ஹிஜாபை அங்கே சென்ற ஓரிரு வாரங்களில் கழற்றி விடும் அவல நிலை உள்ளது.
நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலமான கதை- ஆடை அணியாமல் வாழும் ஒரு சமுதாயத்திடம் ஆடை அணிந்து ஒரு மனிதன் செல்கிறான்.அவனை அவர்கள் கேலி செய்து சிரிக்கிறார்கள்.இதே நிலைமை தான் இங்கும்.
என் அருமை தோழிகளே!! தங்கைகளே..!!! ஹிஜாபை தொடர்ந்து பேணி வந்து பாருங்கள் உங்களை பார்த்த கேலிப் பார்வை கண்ணியப் பார்வையாய் மாறும்.ஆசிரியைகள் உங்களை அதிக மதிப்புடன் அணுகுவார்கள்.ஏன் அனைவரும் உங்கள் திறமை மற்றும் குணத்திற்காக உங்களை மதிப்பார்கள், வெளித்தோற்றத்திர்க்காக அல்லாமல்.
இங்கே நாம் சற்று நின்று யோசிக்க வேண்டிய விஷயம், ஏன் நம் இஸ்லாமிய பெண்களால் ஹிஜாபை எளிதாக விட்டுவிட முடிகிறது..?? யோசிக்க வேண்டிய ஒன்று தான்.
ஏன் அவர்கள் ஹிஜாபை ஒரு கருப்பு ஆடையாய் மட்டுமே பார்க்கின்றனர்??
பெற்றோர்களே!! நம் செல்ல பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்தவுடன் ஃபர்தா போட சொல்லும் நாம் ஏன் அதன் அருமை பெருமைகளை சொல்லித் தருவதில்லை??...முதன் முதலாக ஃபர்தா வாங்கி அதை உங்கள் பெண் குழந்தைகளிடம் கொடுத்து அணியச் சொல்லும் நீங்கள் அத்தோடு அதை ஏன் அணிய வேண்டும், ஹிஜாப் அணிவதினால் நமக்கு என்ன பயன், போன்றவற்றையும் மெல்ல மெல்ல சொல்லித் தாருங்கள்.ஹிஜாபை அணியச் சொல்வதோடு அதை அணியும் காரணத்தையும் சொல்லிக்கொடுங்கள். எவ்வளவு வருடம் ஆனாலும், எவ்வளவு முதுமை அடைந்தாலும் அவர்கள் ஹிஜாபைப் பற்றிப் பிடித்துக் கொள்வார்கள்.
மற்றொரு விஷயம்,
நம் பெண்களிடம், மாற்றுமதத் தோழிகள் கேட்கின்றனர் 'ஏன் இதை அணிகிறாய்' என்று . நாம் சொல்லும் பதில் 'இறைவனின் ஆணை, அதனால் அணிகிறோம்'. ஆனால் அவர்கள் நம்மிடமிருந்து இன்னும் விரிவான பதிலை எதிர்பார்க்கின்றனர்.நமக்கோ பதில் தெரிவதில்லை, சில சமயம் தெரிந்திருந்தாலும் அவர்களுக்கு புரியும்படி பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறோம்.
இது ஹிஜாப் விஷயத்தில் மட்டுமில்லை, இஸ்லாத்தை பற்றிய சரமாரிக் கேள்விகளுக்கும் இதே நிலைமை தான்.நிறைய சமயம் பதில் தெரிந்திருந்தாலும், அதை எப்படி அவர்களிடம் தெளிவாய் புரியும்படி சொல்வது என்று நம் குழந்தைகளுக்கு தெரிவதில்லை.
பள்ளி முடித்து கல்லூரி செல்லும் நம் இளம் சிறுவர் சிறுமியர்களுக்காக 'கல்வி வழிக்காட்டுதல் நிகழ்ச்சி' நடதுகிறோம். மகிழ்ச்சியான ஒன்று..பாராட்டத்தக்கது.அதை போல் ஏன் நம் பள்ளி முடித்து கல்லூரி செல்லும் குழந்தைகளுக்கு அந்த விடுமுறை நாட்களில் ஒரு 'தஃவா பயிற்சி' கொடுக்க கூடாது?? அது அவர்கள் நம் மார்கத்தை மற்ற மதத்தினரிடையே கொண்டு செல்வதர்க்கு ஒரு சிறப்பான வழியாய் அமையுமே...இன்ஷா அல்லாஹ் சிந்திப்போம்..
நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண்மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலைமுன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
[33:59]
ஹிஜாப் நம் உரிமை நம் அடையாளம் நம் தனித்துவம்.நம்மை கண்ணியமாய் மாற்றும் ஒரு ஈடு இணை இல்லா கவசம். இந்த ஹிஜாபால் இவ்வுலகிலயே இவ்வலவு நன்மை..!!!
யா அல்லாஹ் இந்த ஹிஜாபை எங்கள் வாழ்நாள் முழுவதும் பேணிக்காக்க எங்களுக்கு துணை புரிவாயாக.. ஆமீன்..
ஆக்கம் : சகோதரி M.N கதீஜா
http://www.kayalnews.com/
0 கருத்துகள்:
கருத்துரையிடுக