கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

பாப்ரிமஸ்ஜித்:அலகபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு விந்தையாக உள்ளது-உச்சநீதிமன்றம்-கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்கு தடை

babar masjidபுதுடெல்லி:பாப்ரி மஸ்ஜித் நில உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பிற்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த  நிலத்தை மூன்றாகப் பிரித்து
 ஒரு பகுதியை ராமர் கோவில் கட்டுவதற்கு இந்துக்களிடமும், இன்னொரு பகுதியை அங்கு சிறிய கோவில் கட்டியிருந்த நிர்மோகி அகராவிடமும், இன்னொரு பகுதியை பாபர் மசூதி கமிட்டியிடம் வழங்க வேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்சின் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பிற்குத் தான் உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்து நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். நீதிபதிகள் கூறுகையில், நிலத்தைப் பிரிக்குமாறு மனுதாரர்கள் யாருமே கோரவில்லை. ஆனால், யாருமே கேட்காத நிவாரணத்தைக் கொடுத்துள்ளது அலகாபாத் உயர் நீதிமன்றம். எவரும் கோராத வகையில், நிலத்தைப் பிரிக்குமாறு தீர்ப்பளித்திருப்பது வினோதமாகவும் உள்ளது, விந்தையாகவும் உள்ளது. இது மிகவும் புதுமையான, புதிரான தீர்ப்பு. இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் தொடர வேண்டும்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உரியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 60 ஆண்டுகளாக தொடரும் அயோத்தி பாப்ரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில் அலகபாத் உயர்நீதிமன்ற லக்னோ பெஞ்ச் அளித்த தீர்ப்பு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

0 கருத்துகள்: