கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மாலை நேர கல்லூரி மாணவர்களுக்கும் கல்விக் கடன்

கலை, அறிவியல் மற்றும் தொழிற்படிப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் மாலை நேர கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது.
 பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.இ., எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.டி.எஸ்., பி.எச்.எஸ்சி., படிப்புகள், ஐ.சி.டபிள்யூ., ஏ.சி.எஸ்., சி.ஏ., படிப்புகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.எப்.டி.,யால் அங்கீகரிக்கப்பட்ட பாடங்களை தேர்ந்தெடுத்தால் கல்விக் கடன் உண்டு.
.
அங்கீகரிக்கப்பட்ட பி.எட்., படிப்பு, ஆசிரியப் பயிற்சி படிப்புக்கும் உண்டு. சான்றிதழ் படிப்பு, தொலைநிலைக் கல்வி மற்றும் வெளிநாடுகளில் முதுநிலை டிப்ளமோ பயில்பவர்களுக்கு கடன் கிடையாது.
.
டியூசன் கட்டணம், புத்தகம், தேர்வு கட்டணம், விடுதி, லேப்-டாப், போக்குவரத்து கட்டணம், வேலைவாய்ப்பு பயிற்சிக்கான கட்டணம் அனைத்திற்கும் கடன் உண்டு. உள்நாட்டில் படிக்க 10 லட்சம் வரையும், வெளிநாட்டில் படிக்க 20 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். தொழிற்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், வட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
.
என்ன தேவை: பிளஸ் 2 வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தந்தை அல்லது தாய் இணை விண்ணப்பதாரராக, கடன் படிவத்தில் கையெழுத்திட வேண்டும். பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் தாத்தா அல்லது சட்ட ரீதியான உறவினர் கையெழுத்திட வேண்டும். விண்ணப்பதாரர், இணை விண்ணப்பதாரரின் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், குடியிருப்புச் சான்று, கல்லூரி சேர்க்கை அடையாளச் சான்று, “கவுன்சிலிங்’ கடிதம் அல்லது நிர்வாக இடஒதுக்கீட்டில் அனுமதித்தற்கான கடிதம், இந்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்துள்ளார் என்பதற்கான கல்லூரி முதல்வரின் கடிதம், மூன்று அல்லது நான்காண்டுக்கு ஆகும் மொத்த கல்விக் கட்டண ரசீது ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். குடியிருப்புக்கு அருகில் உள்ள வங்கியில் தான் கடன் பெறலாம்.
.
முதல் தலைமுறையாக பி.இ., பி.டெக்., தொழிற்படிப்பு பயிலும் மாணவர்களின் கல்வி கட்டணத்தில் 20 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு இச்சலுகை இல்லை. படித்து முடித்த இரண்டாண்டு அல்லது வேலை கிடைத்த ஆறாவது மாதத்தில் இருந்து கடனை திருப்பி செலுத்த வேண்டும். வட்டி சுமையை குறைக்கும் வகையில், திருப்பி செலுத்தும் காலம் பத்தாண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கியில் ஏற்கனவே வேறு கடன் பெற்று, முறையாக திருப்பி செலுத்தாவிட்டால் கல்விக்கடன் வழங்கப்படாது. அனைத்து வங்கிகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
.
நான்கு லட்ச ரூபாய் வரையான கடனுக்கு, விண்ணப்பதாரர் பங்களிப்பு இல்லை. நான்கு முதல் பத்து லட்ச ரூபாய்க்கு ஐந்து சதவீத பங்களிப்பு. ஜாமீன், சொத்து பிணையம் தேவையில்லை. 7.5 லட்ச ரூபாய் வரை மூன்றாம் நபர் ஜாமீன் உண்டு. 10 லட்ச ரூபாய் வரை, சொத்து பிணையத்துடன். வெளிநாட்டு படிப்புக்கு 15 சதவீத பங்களிப்பு. மாணவியருக்கு வட்டியில் அரை சதவீத சலுகை உண்டு. பாரத ஸ்டேட் வங்கியில் நான்கு லட்ச ரூபாய் வரை, வட்டி 12.25 சதவீதம். 4 முதல் 7.5 லட்சம் வரை 13.75 சதவீதம், 10 லட்ச ரூபாய் வரை 12.25 சதவீத வட்டி. கனரா வங்கியில் நான்கு லட்சம் வரையான கடனுக்கு 13 சதவீதம், அதற்கு மேல் 14 சதவீத வட்டி.
thanks:Dinamalar

0 கருத்துகள்: