கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இராமநாதபுரம் – ஆம்பூர் மனித நேய மக்கள் கட்சி வெற்றி!

இராமநாதபுரம் தொகுதியில் மமகவின் சார்பில் போட்டியிட்ட பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் 15, 655 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆம்பூர் தொகுதியில் போட்டியிட்ட  மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் அஸ்லம் பாஷா 5,300 வாக்குகள் அதிகம் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியனைத் தோற்கடித்தார்


சேப்பாக்கத்தில் திமுகவின் சார்பில் ஜெ அன்பழகனும், அதிமுக கூட்டணி சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளர் தமீமுன் அன்சாரியும் போட்டியிட்டனர். இதில் அன்பழகன் வெற்றி பெற்றுள்ளார்.

சகோ.தமிமுன் அன்சாரி வெற்றி பெறவேண்டிய வேட்பாளர் அல்லாஹ்வின் நாட்டம் என்னவோ அதுதான் நடத்துள்ளது…தேர்தல் பயணத்தில் வெற்றி தோல்வி என்பது ஏற்புடையதே…சகோ.அன்சாரி அவர்கள் ஒரு வேளை வெற்றி வாய்ப்பை பெற்றிருந்தால்சமுதாயம் நல்ல திறமையான வீரியமாக காரியம் சாதிக்கக்கூடிய முன்று
சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றிருக்கும்…இன்ஷாஅல்லாஹ் எதிர்காலம் எங்கும் போய்விடாது…இறையவன் நாடினால் சகோ.அன்சாரியின் குரலும் சட்டப்பேரவையில் ஒலிக்கும்…

0 கருத்துகள்: