'அனாதைகளை ஆதரியுங்கள், நோயாளர்களை பார்வையிடுங்கள், அவர்களது சுகத்திற்காக பிரார்த்தனை புரியுங்கள், அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல'' என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்.
''நபியே! மார்க்கத்தை அல்லது மறுமையின் தீர்ப்பைப் பொய்யாக்குவோனை நீர் பார்த்தீரா? அத்தகையோன் தான் அனாதையைக் கடிந்து விரட்டுபவன். அவன் ஏழைகளுக்கு ஆகாரமளிக்கும் படி தூண்டவும் மாட்டான். எனவே, இத்தகைய தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் தங்களது தொழுகையில் பராமுகமாக. பொடுபோக்காக இருக்கின்றனர். பிறருக்குக் காண்பிப்பதற்காக, முகஸ்தூதிக்காகத் தொழுகின்றனர். மேலும், அவர்கள் அற்பப் பொருட்களையும் கொடுக்காது தடுத்துக் கொள்கின்றனர்''
இந்த அல்குர்ஆன் அத்தியாயம் ஸூரத்துல் மாஊன், ஸூரத்துல் எனும் இரு பெயர்களிலும் அழைக்கப்படுகின்றது. இந்த ஸூரா, யார் தொடர்பாக இறங்கியது எனும் விஷயத்தில் வித்தியாசமான அறிவிப்புக்கள் காணப்படுகின்றன. லோபித்தனமும் முகஸ்துதியும் கொண்ட ஒரு முனாபிக் - நயவஞ்சகன் தொடர்பாகவே இவ்வத்தியாயம் இறங்கியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்
நன்றி :நீடூர்.இன்ஃபோ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக