கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கருணையுள்ளம் கொண்டோரே… வாரி வழங்கிடுவீர்…


ijasதிருநெல்வேலி மாவட்டம் மேலபாளயத்தை சார்ந்த சகோதரர்.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களின் ஆறு வயது மகன் ஜெ.இஜாஸ் அஹமது பிறவியிலேயே வாய் பேசமுடியாத காது கேட்காத குறையுள்ளவன்.


மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள சகோ.ஜாகிர் ஹுசைன் தனது மகனை எப்படியும் குணபடுத்திட தொடர்ந்து தனது சக்திக்கும்மீறி முயற்சித்து வருகிறார்இறுதியாக சென்னை KKR மருத்துவமனையில் சோதித்த மருத்துவர்கள் நவீன சிகிச்சையின் மூலமாக இன்ஷாஅல்லாஹ் சிறுவன் இஜாஸ் அகமதுவின் குறையை நீக்கிவிடலாம் என உறுதியளித்துள்ளனர்.சிகிச்சைக்கு சுமார் ரூபாய் 7.5 லட்சம் வரை தேவைபடுகிறது.
ஏழ்மையின் இயல்புநிலையில் இருக்கும் சகோ.ஜாகிர் ஹுசைன் கருணையுள்ளம் கொண்ட சமூக சகோதரர்களின் உதவியை நாடுகிறார். கடந்த மாதமே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய சிகிச்சை பொருளாதார சூழ்நிலையால் முடியவில்லை. எனவே சில வாரம் தவணை கேட்டிருக்கிறார் மருத்துவர்களிடம்.
ஆகையால் அந்த ஏழை சிறுவனின் எதிர்காலம் சிறப்பாக அமைந்திட அல்லாஹுவின் அன்பிற்காக சிறுவன் ஜெ.இஜாஸ் அஹமதுவின் சிகிச்சைக்கு தங்களாலான பொருளாதார உதவியை விரைந்து வழங்கிடுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்… இன்ஷாஅல்லாஹ் ஏக இறையவன் சிறுவன் இஜாஸ் அஹம்துவிற்க்கு சிகிசையின்மூலமாக ஊனத்தை நீக்கிவைப்பனாக… பூரண ஆரோக்கியத்தை அளிதிடுவானாக… அவனது சிகிச்சைக்கு பொருளாதார உதவிகளை வழங்கிடும் அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் அல்லாஹ் ஈருலக வாழ்க்கையிலும் சிறப்பை தருவானாக…
மேல் விபரங்கள் மற்றும் பொருளாதார உதவி அளித்திட சிறுவன் ஜெ.இஜாஸ் அகமதுவின் தகப்பனார் சகோ.எஸ்.ஜாகிர் ஹுசைன் அவர்களை +919095573103 என்ற அலைபேசியில் தொடர்புகொள்ளவும்… வஸ்ஸலாம்
source:http://muthupet.org/

0 கருத்துகள்: