கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

துபாயில் ஈமான் அமைப்பு வழங்கி வரும் தமிழகத்து நோன்புக் கஞ்சி


துபாய் : துபாயில் ஈமான் என்றழைக்கப்படும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் நோன்பாளிகளுக்கு பாரம்பர்ய தமிழகத்து நோன்புக் கஞ்சியினை தேரா லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் ( குவைத் பள்ளி ) வழங்கி வருகிறது.

இது குறித்து ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தெரிவித்ததாவது ஈமான் அமைப்பு கடந்த 1976 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. கல்வி மற்றும் சமுதாய மேம்ப்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

ஈமான் அமைப்பின் தலைவர் செய்யது எம் ஸலாஹுத்தீன் தலைமையிலும், துணைத்தலைவர்கள் பி.எஸ்.எம். ஹபிபுல்லாஹ் மற்றும் எம். அப்துல் ரஹ்மான் வழிகாட்டுதலிலும், பொதுச்செயலாளர் ஏ. லியாக்கத் அலி, துணைப்பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக்குழு செயலாளர்கள் காயல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹமீது யாசின், கல்விக்குழுச் செயலாளர் மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், இஃப்தார் குழுவினர் கோவை இல்யாஸ், படேஷா பஷீர், வி.களத்தூர் ஷாகுல் ஹமீது, வி.களத்தூர் ஷர்புதீன், இஸ்மாயில் ஹாஜியார், ஜமால், முஹைதீன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நோன்புக் கஞ்சி ஆரம்ப காலத்தில் மிகச் சிறிய அளவில் ஆரம்பித்து தற்பொழுது தினமும் 3500 க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகிறது. கஞ்சி தயாரிக்கும் பணி கும்பகோணம் அன்வர் குழுவினரால் காலையில் ஆறு மணிக்கு துவங்கப்பட்டு நண்பகல் வரை தொடர்கிறது. அதன் பின்னர் அவை தனித்தனி கோப்பைகளில் ஊற்றப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

நோன்புக் கஞ்சியுடன் பேரிச்சம் பழம், அரை லிட்டர் தண்ணீர், இரண்டு சமோசாக்கள், ஆரஞ்சு, ஜுஸ் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

இச்சேவை குறித்து பலரது கருத்துக்கள் இதோ :

தமிழகத்திலிருந்து அலுவலகப் பணியின் காரணமாக அமீரகம் வருகை புரிந்த கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தகுமார் ஈமான் அமைப்பு அமீரகத்தில் தினமும் 3000 க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு நோன்புக் கஞ்சி வழங்குவதை அறிந்து ரமலானின் முதல் நாள் நோன்பு திறப்பு நிகழ்வில் பங்கேற்றார்.

அவர் கூறியதாவது ஈமான் அமைப்பின் நிர்வாகிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டினார். அமீரகத்தில் தமிழக சுவையுடன் கூடிய நோன்புக் கஞ்சி ஏதோ தமிழகத்தில் இருப்பது போன்றதொரு உணர்வினை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.

இனம், மதம், மொழி என்ற பேதமின்றி இந்தியர், இலங்கையர், பாகிஸ்தானியர், அரபு நாட்டவர், பங்களாதேஷவர், ஆப்பிரிக்க நாட்டவர் என உலக நாட்டவர் அனைவரும் ஒருங்கிணைந்து உலக ஒற்றுமையினைப் பறைசாற்றும் நிகழ்வாக இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சி அமைந்துள்ளதாக மனம் நெகிழ குறிப்பிட்டார்.

நீக்ரோ நாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் வரிசையாக பரப்பி வைக்கப்பட்டிருந்த நோன்பு திறப்பு உணவுகளைப் பார்த்து சொன்னார் :


“வெரி நைஸ்… நோன்பாளிகளுக்கு இப்படி உணவு தருபவர்களை அல்லாஹ் விரும்புகிறான்!”

கல்லூரி மாணவியைப் போல் இருந்த ஒரு இளம்பெண் அங்கே வரிசையாய் நோன்பு திறக்க உட்கார்ந்தவர்களைதனது கேமராவில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்.அவரிடம் “நீங்க யார்? ஏன் இதை போட்டோ எடுக்கிறீர்கள்?என்பதை தெரிந்து கொள்ளலாமா?” எனக் கேட்ட போது அதற்கு அந்தப் பெண் சொன்ன பதில் :

“நான் ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவள். என் பெயர் மோனிகா. முஸ்லீம்கள் ரம்ஜான் மாதத்தில் இறைவனை பிரார்த்தித்து உணவு உண்ணாமலும், தண்ணீர் பருகாமலும்நோன்பு வைக்கும் இந்த செயலும், நோன்பு திற்க்கும்போதுஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் இப்படிசரிசமமாக உட்கார்ந்து சாப்பிடுவதும் எனக்கு ரொம்பவும்பிடித்திருக்கிறது. இதை என் நாட்டு மக்களுக்கும், என்உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் காண்பிப்பதற்காகவேபோட்டோ எடுக்கிறேன்!”

எதிரில் கடைவைத்திருந்த சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு கடை உரிமையாளர் சொன்னது :

“நான் இங்கே 2 வருஷமாக இந்த கடையை நடத்திவருகிறேன். ரம்ஜான் மாதத்தில் இந்த ஈமான் அமைப்புஇப்படி இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியைப் பார்த்து நான் என்கடையில் வேலை பார்க்கும் இஸ்லாமியர்களுக்கு என்செலவில் பழங்கள், பழரசங்கள், உணவு வாங்கிக் கொடுத்துஅவர்கள் நோன்பு திறப்பதற்கு உதவி செய்வதில் என்மனதுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கிறது. அவர்களும்ரொம்பவும் மகிழ்ச்சி அடைந்து என்மீது ஒரு சகோதரபாசத்தை காண்பிக்கிறார்கள். விசுவாசமாய்உழைக்கிறார்கள்!”

இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் தங்கள் வீட்டு விஷேசத்தை செய்வதைப்போல்ஈடுபாட்டோடு செய்து வருகின்றனர்.

நோன்பு திறக்கும்போது வயிறு மட்டும் நிறையவில்லை…உறவுகளைப் பிரிந்து வந்த தொழிலாள தோழர்களுக்குமனசும்தான் நிறைந்தது!

இப்பணிக்கு உதவுபவர்களுக்கு நிச்சயம் ஆண்டவனின்வெகுமதி உண்டு!


0 கருத்துகள்: