கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்!!

படத்தை பார்த்ததும் பட ஹீரோ என்று என்ன தோன்றுகிறதல்லவா ஆம்! இவர் ஒரு அரசியல் ஹீரோ.

நாஜிம், காரைக்கால் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 25 வருடங்களாக தோல்வியே இல்லாத திமுக சட்ட மன்ற உறுப்பினர். 

இவரின் தொடர் வெற்றிக்கு சாதி, மத ஓட்டுக்கள் என்று எந்த வித குறுக்கு வழியுமில்லை. பணம் சம்பாதிக்க வேண்டியும் இவர் அரசியலுக்கு வரவில்லை பரம்பரை பணக்காரர். அரசியலுக்கு வரும் முன்னரே தேவைக்கேற்ற வாழ்வாதாரத்தோடு இருந்தவர். இன்று வரை இவர் மக்கள் மனதில் பிடித்த இடம் மட்டும் சற்றும் மங்காமல் அப்படியே இருக்கிறது. 

ஆளுங்கட்சி என்ன செய்யுது? யாரை எப்போது குறை சொல்லலாம் என்று பொழுதைக் கழிக்காமல் அட்டவணை முறையில் மக்கள் பணிகளைப் பிரித்து அவர் தொகுதி முன்னேற்றத்தில் கவனம் கொள்கிறார். ஒரு மனித நேயமிக்க தொகுதி மக்கள் நலனில் அக்கறை கொண்ட சட்ட மன்ற உறுப்பினரைப் பார்ப்பதே அரிதாகி விட்டக் காலத்தில் இவரை ஊக்குவிப்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. 

ஜாதி, மதங்களைக் கடந்து மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி தான் அரசியல் என்பதை நீங்கள் நம்பினால் இதனை பகிர்ந்து இவரை ஊக்கப்படுத்துங்கள்.

0 கருத்துகள்: