கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

கேஸ் சிலிண்டரை கையாளும் முறைகள்..!!!

* வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் மொத்த எடை 14.2 கிலோ. வாடிக்கையாளர்கள் சிலிண்டரை வாங்கும் போது எடையை சரிபார்த்து வாங்க வேண்டும். சிலிண்டர் எடுத்து வருபவர்களிடம் எடை அளவு இயந்திரங்கள் உள்ளன.
* சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைக்க வேண்டும்.

* ஐ.எஸ்.ஐ முத்திரை உள்ள அடுப்புச் சாதனங்களையும், இரப்பர் குழாய்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* எரிவாயு செல்லும் குழாய் தரமானதாக இருக்க வேண்டும். இப்போது ஸ்டீல் வயரால் பின்னப்பட்ட குழாய்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதை பயன்படுத்தலாம். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை குழாயை மாற்ற வேண்டும்.
* அடுப்பை அணைக்கும்போது முதலில் ரெகுலேட்டர் வால்வை மூடிவீட்டுப் பிறகு அடுப்பின் வால்வை மூடுவது நல்லது.
* அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.
*அடுப்பு எரிந்து கொண்டிருக்கும்போது கவனக் குறைவாக இருக்கக்கூடாது. கவனிக்காமல் இருந்தால் பொங்கி வழியும் பால் போன்ற பொருள்கள், அடுப்பை அணைத்து வெளி வரும் எரிவாயுவினால் வாயுக் கசிவு ஏற்பட்டுத் தீ விபத்து ஏற்படலாம்.
* காஸ் ஸ்டவ் வைத்திருப்பவர்கள் வீட்டில் உள்ளக் குழந்தைகள் காஸ் குழாயைத் திருப்பாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காஸ் குழாயில் குழந்தைகள் விஷமம் செய்வதால் பல ஆபத்துக்கள் ஏற்படுகின்றன.
* அடுப்பின் வால்வையும், சிலிண்டர் வால்வையும் மூடிய பிறகு சிலிண்டரை மாற்ற வேண்டும்.
* சுய ரிப்ப்பேர் வேலை ஆபத்தானது. யாரையும் காஸ் உபகரணங்களைப் பழுது பார்க்க அனுமதுக்கக் கூடாது. விற்பனையாளர்களிடமே இந்த பொறுப்பை விட்டுவிட வேண்டும்.
* மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும். மின்சார இணைப்புகள் இயங்க கூடாது.
* ரப்பர் குழாயில் வெடிப்பு, துளை இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
*காஸ் அடுப்பின் பர்னரை 10 நிமிடம் மண்ணெயில் ஊற வைத்துப் பிறகு பழைய டூத் பிரஷ் மூலம் சுத்தம் செய்யலாம்.
* அடுப்பின் பர்னர்களை சலவை சோடா சேர்ந்த வெது வெதுப்பான் தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தப்படுத்தி உலரச் செய்த பிறகே பொருத்த வேண்டும்.
* குரோமிய காஸ் அடுப்பு, ஸ்டவ் போன்றவற்றைச் சூடாக இருக்கும்போது துடைத்தால் பளிச்சென்று இருக்கும்.
* பெயிண்ட் அடுப்பாக இருந்தால் சூடாக இருக்கும் போது நனைந்த துணியால் துடைக்கக் கூடாது. திடீர் வெப்ப மாறுதலால் வண்ணம் மாறலாம்.
* காஸ் சிலிண்டரிலோ, ரப்பர் குழாயிலோ கசிவு இருப்பதாக சந்தேகம் தோன்றினால் உடனடியாகக் கதவுகள், ஜன்னல்கள் அனைத்தையும் திறந்துவிட வேண்டும். எரிந்து கொண்டிருக்கும் அடுப்பு, விளக்கு முதலியவற்றை அணைக்க வேண்டும். சிலிண்டருடன் இணைந்திருக்கும் சேப்பு கேப்பினால் சிலிண்டர் வால்வை அழுத்தி மூட வேண்டும். இது வால்விலிருந்து காஸ் கசிதைத் தடுக்கும்.
* எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்தினால் சராசரி ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு 6 முதல் 8 சிலிண்டர்வரைதான் ஆகும். பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தால் 12 சிலிண்டர்கள் வரை ஆகலாம்.

0 கருத்துகள்: