கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

என் அருமை சமுதாயமே !

என் அருமை சமுதாயமே !
இயக்கங்கள் பெயராலும் அமைப்புகளின் பெயராலும் பிரிந்து கிடக்கும் என் அருமை சமுதாயாமே !
உன்னை அழிக்க பள்ளிக்கு வெளியில் ஒரு பெருங்கொண்ட கூட்டம் காத்திருக்கிறது இன்னும் நீ பள்ளிக்குள் என்ன செய்து கொண்டிருக்கிராய் ?


ஒ ! சுன்னத்துகள் மீது சண்டையா ?

வெளியில் இருப்பவர்கள் உன் தலையை எடுக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிரார்கள்
நீ இன்னும் தலைக்கு மேல் தொப்பி போடுவது பற்றி சட்டம் போட்டுக் கொண்டிக்கிறாய் !

அவர்கள் உன் கையை உடைக்க திட்டம் போட்டுக்கோண்டிருக்கிரார்கள்
நீ இன்னும் கைவிரலை ஆட்டுவதை பற்றி சட்டம் போட்டுக்கொண்டிருக்கிராய் !

என் அருமை சமுதாயமே ! ஒன்றினைக்க முயர்சிப்பவர்களிடம் தவ்ஹீது ஷிர்கும் எப்படி ஒன்று சேரும் என கேட்கிராயே !

உன்னை ராமசாமியுடனும், குப்புசாமியுடனும் ஒன்று சேர சோல்லவில்லை.

லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸீலுல்லாஹ் என்ற உன்னதமான ஏகத்துவகலிமாவை மொழிந்த அப்துல்லாஹ்வுடனும், அப்துர்ரஹ்மானுடனும் தான் ஒன்று சேர சொல்கின்றோம் !

தவ்ஹீதை நிலைநாட்ட துடிக்கும் அமைப்புகளே ! சமுதாயத்தோடு ஒன்றி போவதும், ஒன்றுபட்ட சமுதாயயாய் வாழவும் இஸ்லாம் கற்றுதருவதை நீ அறியவில்லையா ?

ஒன்றுபட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது என்பதை நீ அறியவில்லையா ?

என் அருமை சமுதாயமே ! புரிந்துகொள்
இன்று..... நீ ஒன்றுபடவில்லை என்றால்
நாளை..... இஸ்லாத்தில் இருந்து கொண்டு அறியாமையால் அனாச்சாரம் செய்ய அவர்களும் இருக்கமாட்டார்கள் ! தவ்ஹீதை எடுத்துரைக்க நீங்களும் இருக்க மாட்டீர்கள்.....

என் அருமை சமுதாயமே ! ஒன்றுபடுவோம்...

சுன்னத்-வல்-ஜமாஅத் என்றும் தவ்ஹீத் ஜமாஅத் எனறும் JAQH என்றும் TNNJ என்றும் அடையாளம் காட்டுவதை நிருத்துவோம். ஒன்றாக கைகோர்த்து 'நான் முஸ்லிம்' என கூறுவோம்.

நம்மில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறப்போம்
நம் சமுதாய பெண்களை காவு வாங்கி கொண்டிருக்கும் பாஸிஸ சக்திகளை எதிர்ப்போம்
இஸ்லாத்திர்க்காகவும் அல்லாஹ்விற்காகவும் அனைத்தையும் இழப்போம்
முடிந்தாள் உயிரையும்!

இழப்பிர்க்கு நிச்சயமாய் பகரமாய் நாம் அடைவோம் ஜன்னாத்தை

இன்ஷா அல்லாஹ்

ஒன்று பட்ட சமுதாயத்தின் மீதுதான் அல்லாஹ்வின் அருளும் உதவியும் இரங்குகிறது !

அதனால் ஒன்று படுவோம் என் அருமை சமுதாயமே ! ஒன்று படுவோம்

0 கருத்துகள்: