கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

2342 பணியிடங்களுக்கான VAO தேர்வு அறிவிப்பு .

தமிழ்நாட்டில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பணியில் 2,342 காலி இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வை நடத்துகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப் பணியில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அய்யா சொன்னது நீங்கள்தானா....? சொல்லுங்கள் அய்யா சொல்லுங்கள்....

1992ம் ஆண்டு புரட்சியாளர் பழனிபாபா அவர்கள் எழுதிய ஹிந்துஸ்தானத்திற்கு- ஹிந்துவுக்கு ஆபத்து!?!?!? என்ற நூலில் அய்யா மருத்துவர் ச.இராமதாஸ் அவர்கள் எழுதிய நூல் மதிப்புரை. காலத்தின் தேவை கருதி புரட்சியாளரின் பிள்ளைகள் இன்றைக்கு மறு வாசிப்பு செய்கிறோம்.

ஊழல், மதவாதத்தை தடுக்கவே தேர்தலில் போட்டி: எஸ்.டி.பி.ஐ.

சென்னை: நாட்டிலுள்ள ஊழல் மற்றும் மதவாதத்தை தடுக்கவே தேர்தலில் போட்டியிடுகிறோம் என எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கியுள்ள  சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சி (எஸ்.டி.பி.ஐ.),   இந்தியா முழுவதும் 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

கோணுழாம்பள்ளத்தில் குரங்குகளின் அட்டகாசம்.

கோணுழாம்பள்ளத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலம் வந்து கொண்டிருந்த குரங்குகள் தற்பொழுது கூட்டம் கூட்டமாக ஊரின்  ஒவ்வொரு பகுதியிலும் சுற்றித் திரிந்து மரங்களில் இருக்கும் காய்களையும், வீட்டு மாடி மற்றும் திறந்த  வெளி பகுதிகளில் காய வைக்கப்பட்டிருக்கும் உணவுப் பண்டங்களையும் நாசம் செய்து வருவது வாடிக்கையாகி விட்டது.

அரசியல் கட்சியினர், தேர்தல் அரசியல் அமைப்பினர்களின் கவனத்திற்கு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின்திருப்பெயரால்

நடைபெறயிருக்கின்ற    நாடாளுமன்ற   தேர்தலையொட்டி தாங்களெல்லாம் பரப்புரையில் மிகவும் பரபரப்பாக இருக்கின்ற இந்த நேரத்தில் எல்லோரும் ஒட்டுமொத்தமாக மறந்த வெளிநாட்டில் (வாழும் அல்ல) வேலை பார்க்கும் இந்தியர்கள் சார்பாக சில கோரிக்கைகள்…

எந்த வயதிலும் 10, +2 படிக்கலாம்

உளவியல், இந்தியக் கலாசாரம், ஓவியம், டேட்டா எண்ட்ரி ஆபரேஷன்ஸ் இது போன்ற துறையில் 12ஆம் வகுப்புப் படிக்க வேண்டுமா? தேசிய திறந்தநிலைப் பள்ளி (National Institute of Open Schooling) அதற்கான வாய்ப்பை வழங்குகிறது. அதுபோல 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பில் தவறியவர்களும்/பாதியில் விட்டவர்களும் இந்தப் பள்ளியில் இணைந்து தங்களுக்கு விருப்பமான பாடத்தைப் பயிலலாம்.

சக சகோதர இயக்கங்களை வசை பாடுவது நியாயமா?

தமிழ்நாட்டில் சமுதாயத்தின் பெயரால் இயங்கிவரும் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள்,ஜமா அத்துகள் போன்றவை ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அதிமுக,திமுக என ஏதேனும் ஒரு கட்சியுடன் சீட்டுக்காகவும்,பணத்துக்காகவும் கூட்டணி வைத்துக் கொண்டு தான் சார்ந்துள்ள கூட்டணி கட்சியை வானளாவ புகழ்வது வாடிக்கையாகிவிட்டது.