கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நமது 'துப்பாக்கி' எதிர்ப்பின் விஸ்வரூபம்...

[ அந்த காலத்தில்... அப்போதைய மூளை சலவையின் படி... விஜயகாந்த்தும் அர்ஜுனும் செய்தார்கள் எனில்... அவர்கள் வாழ்ந்தது "கார்கரேக்கு முன்னர்" என்ற அறியாமை நிரம்பிய அசத்திய கற்காலத்தில்...! ஆனால்... 'உன்னைப்போல் ஒருவன் கமல்...', 'அதேபோல இன்னொருவன்... துப்பாக்கி விஜய்...' எல்லாம் கருத்தரித்தது... வளர்ந்தது... பிறந்தது... எல்லாம் "கார்கரேவுக்கு பின்னர்" என்ற சத்தியம் விளங்கிய அறிவுபூர்வமான தற்காலத்திலே அல்லவா...?

மாலேகான் குண்டு வெடிப்பு முதல்... ரியல் ஹீரோயின் திருமதி கார்கரே, நரேந்திர மோடியிடம் கோடி ரூபாய் நஷ்டஈடு(?) வாங்க மறுத்து துச்சமாக அதை அவரிடமே வீசி எறிந்தது உட்பட... 'கார்கரே கொலையில் மர்மம் இருக்கிறது' என்று பார்லிமென்டில் சொன்ன ஏ.ஆர்.அந்துலே... அதன் பிறகு அட்ரஸ் இல்லாமல் போனதும் சேர்த்து... இதுதான் உங்கள் பட ரியல்-ஸ்கிரிப்ட்..! இதில், ரியல் ஆக்ஷன் ஹீரோவான ஹேமந்த் கார்கரேயாக நடிக்க உங்களில் யார் தயார்..? உங்களில் யாரேனும் ஒரே ஒரு துணிச்சல் காரராவது உண்டா...?

நீங்கள் இன்னும் கொலைகாரன் கோட்சேயை ஹீரோவாக்கி, காந்தியை வில்லனாக்கி 'ஹேராம்' அல்லவா எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..! இதற்கு வெட்கப்பட வேண்டாமா நீங்கள்..? இதுதான் உங்கள் தேசபக்தியின் நிறமா..? மெய்யான நடிப்பல்லவா இது..!

விஜயகாந்த், அர்ஜுன்‌, சரத்குமார்‌ போன்றாராவது பெரும்பாலும் பாகிஸ்தான் முஸ்லீம்களைத்தான்... பயங்கரவாதிகளாக திரித்தனர்..! ஆனால்... கமலும் விஜயும்... நம் எதிர்வீடு... அடுத்தவீடு... பக்கத்து வீட்டு சகோதரனை அல்லவா பயங்கரவாதியாக காட்டுகிறார்கள்..? இது அராஜக அக்கிரம அநியாயம் அல்லவா...? இதைத்தான் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்..!]

  நமது 'துப்பாக்கி' எதிர்ப்பின் விஸ்வரூபம்...

இந்தியாவில் நடந்த ர(த்)தயாத்திரை - பாபர் மசூதி இடிப்புக்கு பின்னர் நடந்த "பயங்கரவாத குண்டுவெடிப்பு கலாச்சாரத்தை" பொருத்த மட்டில்... அதை நாம் "கார்கரேக்கு முன்" என்றும், "கார்கரேக்கு பின்" என்றும் இரண்டாக பிரிக்கிறோம். சினிமாவையும் ஊடகத்தையும் இதற்குள் அடக்கித்தான் அலச வேண்டும் நாம்..!

'கா.மு', வில்... அரசின் கட்டளைக்கிணங்க... அல்லது ஓட்டரசியலில் அரசு எதிர்ப்பார்ப்பதை பூர்த்தி செய்யும் விதத்தில்... அல்லது அரசை பதவி உயர்வுக்காக குளிர்விப்பதற்கு... என்று ஏதோ ஒரு விதத்தில்... ஒவ்வொரு குண்டு வெடிப்பு நடந்து முடிந்த உடனேயே... 'இவர்களிடம் இருந்து மெயில் வந்தது, அவர்களிடம் இருந்து கடிதம் வந்தது' என்று பிரஸ்மீட்டில் ஏதாவது ஒரு முஸ்லிம் அமைப்பின் பெயரை சொல்லி... "அது "பொறுப்பேற்று க்கொண்டது" என்று தொடர்ந்து ஒரே ஒரு பல்லவியையே எல்லா குண்டு வெடிப்பு நடந்த பிளாஷ் நியூஸ்களுக்கு வால் பிடித்து பின்னாடியே... ஏக ராகத்தில் பாடி வந்தது... நமது இந்திய உளவுத்துறையும் காவல்துறையும் என்பதை அப்போது செய்திகளை பின்பற்றியோர் நிச்சயமாக அறிவர்..!

இந்த உளவுத்துறை கருத்தையே... பூவும் பொட்டும் வைத்து, சடை பின்னி, ரிப்பன் வைத்து, ஹேர்பின் குத்தி, நகை நட்டு போட்டு... பட்டு அலங்காரம் இட்டு... தொடர்ந்து மக்கள் மத்தியில் வசீகரமாக உலவ விட்டு... கருத்துத்திணிப்பு மூலம் மூளைச்சலவை செய்ததில்... மாபெரும் வெற்றி பெற்றன... நமது முன்னணி ஊடகங்கள் அனைத்துமே..!

அதை அப்படியே சுவீகரித்துக்கொண்டன.... சினிமா கதை இலாக்காக்கள்..! அதில்.... 'தமக்கு எக்கச்சக்க தேசபக்தி இருப்பதாக காட்டி நடிக்கும்' நடிகர்களான விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் போன்றவர்கள்... தமது கதைகளில் மிக முக்கியமாக எடுத்துக்கொண்டனர்.

எந்த புதுமுகமும் இந்த பயங்கரவாத ஸ்கிரிப்ட்... படத்தில் நடிக்க வைக்கப்படமாட்டார். காரணம்... மாஸ் ஹீரோ செய்ய வேண்டிய ஹெவி பட்ஜெட் ஸ்கிரிப்ட். அவர்கள் நடித்தால் மட்டுமே ஓடும்..! பெரிய ரசிகர் பட்டாளமும் கமர்ஷியல் வேல்யூவும் உள்ள ஹிட் ஆக்ஷன் ஹீரோக்களும் பைஜாமா குர்தா அணிந்து தாடி வைத்த தொப்பி வில்லன்கள் நடிக்கும் கதையாக நாளடைவில் குண்டுவெடிப்புகள் ஆகிப்போனது நம் தலைவிதி..!

நம்நாட்டில்.... மும்பை-கோவை குண்டு வெடிப்பு மட்டுமே தீர்ப்பு வந்த வழக்குகள் என்ற நிலை இனி மாறி... மாலேகான்-1, -மாலேகான்-2, அஹமதாபாத், சூரத், கோவா, புனே, அலஹாபாத், வாரணாசி, டெல்லி, அஜ்மீர், ஜெய்ப்பூர், மும்பை லோக்கல் ரயில், பாகிஸ்தான் சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், ஹைதராபாத் டிரைவ் இன் தியேட்டர், பெங்களூர், சென்னை... போன்ற எல்லா குண்டு வெடிப்புகளிலும் குற்றவாளிகள் மீது தீர்ப்பு வரட்டுமே..! இதுதானே சரியான நீதி...?! எதற்கு அவர்கள் எல்லாம் இயற்கையாக மரணிக்கும் வரை சட்டம் காத்து இருக்க வேண்டும் என்றுதான் எனக்கு புரியவில்லை. :-(

26/11 மும்பை துப்பாக்கி சூட்டில் மட்டும் சரியான தீர்ப்பு வந்தது போல... (கோகுல கிருஷணன் அறிக்கைப்படி) கோவை கலவரம்... (ஸ்ரீகிருஷ்ணா அறிக்கைப்படி) மும்பை கலவரம்... தொடங்கி... இதற்கெல்லாம் ஆரம்ப புள்ளியான... ர(த்)த யாத்திரை... பாபர் மசூதி.... (லிபர்ஹான் கமிஷன்) என்று, அனைத்து கமிஷன் அறிக்கைகள் மீதும் தீர்ப்பு வரட்டுமே...!?

மும்பை.. கோவை... குண்டுவெடிப்புகளுக்கு பிறகுதான் தடா- பொடா சட்டங்கள் எல்லாம் அதனதன் அசுர பலத்துடன் தன் ஆக்டோபஸ் கால்களை தூக்கி கோரதாண்டவம் ஆட ஆரம்பித்தன..! அதில் இடையே.. வைகோ-நெடுமாறன் சிறைவாசம் போன்ற அரசியல் காமடிகள் முடிவுக்கு வந்தாலும்... அவற்றை தவிர்த்து பெரும்பாலான மீதி எல்லாமே முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட அராஜக அக்கிரம அநியாயங்கள் மட்டுமே..!

அவற்றின் மூலம் நடந்த முஸ்லீம்கள் மீதான போலி விசாரணை கைதுகள்... 'கா.பி.' யில்... உண்மை புரிந்தும் இன்னும் விசாரணைக்கைது சிறைவாசங்கள் தொடர்வதுதான் உலகமகா கொடுமை..!

சரி.. அப்படி என்னதான் சாதித்தார் கார்கரே..? காலண்டரில் 'கா.மு-கா.பி' போடும் அளவுக்கு..?

அதுவரை... "குண்டு வெடிப்பு என்றாலே... அது முஸ்லீம்கள் மட்டுமே அறிந்து வைத்து செயல்படுத்திக்கொண்டு இருக்கும்... வேறு எவருக்கும் புரியாத ஒரு அதிவினோத தொழில்நுட்பம்" என்று மக்கள் மனதில் மிக மிக ஆழமாக மூளை சலவை மூலம் பதிய வைத்து இருந்த அஸ்திவாரத்தை தூள் தூளாக்கி உடைத்து நிர்மூலமாக்கியவர்தான்...அஞ்சாநெஞ்சர் நேர்மையின் சிகரம் சத்திய தியாகி ATS தலைவர் மாவீரர் ஹேமந்த் கார்கரே IPS அவர்கள்..!

மாலேகானில் ஆரம்பித்து... ஏறக்குறைய... எல்லா குண்டு வெடிப்பு வழக்குகளிலும் துப்பு துலங்கி, காவி போர்வைக்குள் சாதுக்களைப்போல ஒளிந்து கொண்டிருந்த பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழித்தெறிந்து, குற்றவாளிகளை வெளிக்கொணர்ந்து, ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி, மக்களின் மூளைச்சளவை அஸ்திவாரத்தை தகர்த்து எறிந்து நிர்மூலமாக்கினார்..! இந்திய முஸ்லிம்களின் மீது அதுகாறும் போடப்பட்ட அநியாய அவதூறை தன் ரத்தத்தால் கழுவினார்..!

90களின் இறுதி, 2000 களின் துவக்கம் எல்லாம்... 'கா.மு.' வில் இந்திய முஸ்லிம் ஆண்கள் கையில் ஒரு முட்டையோ/வெங்காயமோ அல்லது கிரிக்கெட்/டென்னிஸ் பந்தோ இருந்தால் கூட... அது வெடிகுண்டா இருக்குமோ என்ற பார்வை வரும். தாடி வளர்க்கக்கூட முடியாது. ஏனெனில், போலீஸ் ஸ்டேஷனில் தேடல் லிஸ்டில் எல்லார்க்கும் தாடி வரைந்து விட்டிருப்பார்கள். அப்படி தேடிப்பிடித்து கைதானவர்கள் எல்லாம் இன்று நீதிமன்றத்தால் நிரபராதிகள் எனப்பட்டு விட்டனர்..!

ஒரு முஸ்லிம் பெண் ரோட்டில் புருக்கா போட்டு நடந்தால்... அல்லது பேருந்தில் அமர்ந்து இருந்தால் கூட... திடுமென போலீஸ் உள்ளே ஏறி வந்து அப்பெண்ணிடம் சென்று கேட்கும்... 'உன் பெயர் ஆயிஷாவா'..? வேறொரு ஆயிஷாவாகவே அவர் இருந்தாலும், அவர் 'நான் ஆயிஷாவே இல்லை' என்று சொல்லவேண்டிய அவல நிலை..! ஆனால், 'கா.பி.'யில்... 'அந்த பெல்ட் பாம் ஆயிஷா மேட்டர் உண்மையல்ல' என்றனரே சென்னை போலீசார்..! உலக மகா கொடுமைடா..!

இந்தியாவின் ஒவ்வொரு முஸ்லிமும் மட்டுமல்ல... நேர்மையையும் உண்மையையும் விரும்பும் எல்லா சமயத்தவரும் ஹேமந்த் கார்கரேக்கு நன்றிக்கடன் பட்டுள்ளார்கள்..! இன்றெல்லாம் நான் பயங்கரவாதத்தை எதிர்த்து தலை நிமிர்ந்து இந்தியாவில் பதிவு எழுதுகிறேன் என்றால்... அவரை நினைவு கூறாமல் என்னால் இருக்க முடியாது. இவரை நம் நாட்டுக்கு ஒரு அருட்கொடையாக அனுப்பிய அந்த ஏக இறைவனுக்கே எல்லா புகழும்...!

ஆக, இப்பேற்பட்ட இந்த "கார்கரேக்கு பின்னர்" மும்பை-கோவை தவிர மீதி இந்தியாவில் நடந்த அத்தனை குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தியது... ஆர்எஸ்எஸ்-சங்பரிவார இயக்கங்கள் என்று அறிந்த பின்னும்... உண்மை புரிந்த பின்னும்... சத்தியம் தெளிந்த பின்னும்... குழப்பம் விலகிய பின்னும்... எதற்கு இன்னும் அந்த அதே அரத பழைய மூளை சலவை... சினிமா ஊடகமே..? உனக்கே இது லாஜீக் மீறலாக தெரியவில்லையா...? கர்கரேயின் உயிருக்கும் அவரின் தியாகத்துக்கும் என்ன மரியாதை தருகிறீர்கள்..? இதுதான் இப்போது நாம் சினிமாவினர் முன்னர் வைக்கும் ஒர்‌ர்‌ர்‌ர்‌ர்ரே கேள்வி..!

அந்த காலத்தில்... அப்போதைய மூளை சலவையின் படி... விஜயகாந்த்தும் அர்ஜுனும் செய்தார்கள் எனில்... அவர்கள் வாழ்ந்தது "கார்கரேக்கு முன்னர்" என்ற அறியாமை நிரம்பிய அசத்திய கற்காலத்தில்...!

ஆனால்... 'உன்னைப்போல் ஒருவன் கமல்...', 'அதேபோல இன்னொருவன்... துப்பாக்கி விஜய்...' எல்லாம் கருத்தரித்தது... வளர்ந்தது... பிறந்தது... எல்லாம் "கார்கரேவுக்கு பின்னர்" என்ற சத்தியம் விளங்கிய அறிவுபூர்வமான தற்காலத்திலே அல்லவா...?

விஜயகாந்த், அர்ஜுன்‌, சரத்குமார்‌ போன்றாராவது பெரும்பாலும் பாகிஸ்தான் முஸ்லீம்களைத்தான்... பயங்கரவாதிகளாக திரித்தனர்..! ஆனால்... கமலும் விஜயும்... நம் எதிர்வீடு... அடுத்தவீடு... பக்கத்து வீட்டு சகோதரனை அல்லவா பயங்கரவாதியாக காட்டுகிறார்கள்..? இது அராஜக அக்கிரம அநியாயம் அல்லவா...? இதைத்தான் நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும்..!

முன்னர் விஜயகாந்த் சரத்குமார் அர்ஜுனுக்கெல்லாம் அப்போது கையில் கார்கரேயின் ஆதாரம் இல்லை..! உளவுத்துறை-ஊடக உளறல் மட்டுமே அவர்களுக்கு அப்போது ஆதாரம்..! ஆனால், இப்போது..? இனி இப்படி முஸ்லீம்களை 2 படத்தில் பொடிக்கட்டம் போட்ட அரபிய-ஆப்கானிய மேல் துண்டில் போர்த்தி பயங்கரவாதியாக காட்டினால்... 13 படங்களில் காவி உடையில் ஹிந்துக்களை போர்த்தி பயங்கரவாதியாக சேவை(?) இயக்கப்பெயருடன் காட்டவேண்டி இருக்குமே..?! உங்களால் அப்படி காட்ட முடியுமா..? இது தவறு என்று புரியும் உங்கள் மூளைக்கு அது மட்டும் தவறென புரியாமல் போன மாயம்தான் என்ன...? இது முடியாது என்றால் அதையும் நீங்கள் செய்யக்கூடாது அல்லவா..?!

தமிழ் சினிமா ஆக்ஷன் ஹீரோக்களே..! நீங்கள் 'முஸ்லிமாக நடிப்பது' எல்லாம் அப்புறம் இருக்கட்டும். அதற்கு முன்னர்.... உங்கள் அனைவருக்கும் நான் ஒரு பகிரங்க சவால் விடுகிறேன்..!

மாலேகான் குண்டு வெடிப்பு முதல்... ரியல் ஹீரோயின் திருமதி கார்கரே, நரேந்திர மோடியிடம் கோடி ரூபாய் நஷ்டஈடு(?) வாங்க மறுத்து துச்சமாக அதை அவரிடமே வீசி எறிந்தது உட்பட... 'கார்கரே கொலையில் மர்மம் இருக்கிறது' என்று பார்லிமென்டில் சொன்ன ஏ.ஆர்.அந்துலே... அதன் பிறகு அட்ரஸ் இல்லாமல் போனதும் சேர்த்து... இதுதான் உங்கள் பட ரியல்-ஸ்கிரிப்ட்..! இதில், ரியல் ஆக்ஷன் ஹீரோவான ஹேமந்த் கார்கரேயாக நடிக்க உங்களில் யார் தயார்..? உங்களில் யாரேனும் ஒரே ஒரு துணிச்சல் காரராவது உண்டா...? பாக்கிஸ்தானில் இருந்து குஜராத் பார்டர் வழியா வந்து உங்களை எவனாவது ஒரு 'கஸாப்' சுட்டுடுவான் என்று பயமா..? :-))

நம்ம GANDHIயை படமாக எடுக்க ரிச்சர்ட் ஆட்டன்பரோவும், நடிக்க பென் கிங்ஸ்லியும் ஹாலிவுட்டில் இருந்து வந்தது போல... வேறு நாட்டில் இருந்துதான் யாராவது கார்கரேவாக நடிக்கவும் படம் எடுக்கவும் வரவேண்டுமா..? நீங்கள் இன்னும் கொலைகாரன் கோட்சேயை ஹீரோவாக்கி, காந்தியை வில்லனாக்கி 'ஹேராம்' அல்லவா எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்..! இதற்கு வெட்கப்பட வேண்டாமா நீங்கள்..? இதுதான் உங்கள் தேசபக்தியின் நிறமா..? மெய்யான நடிப்பல்லவா இது..!

இனி பழுக்க காய்ச்சி சூடுபோட்டாலும்... உணர இயலாது மரத்துப்போய் தூங்கும் செல்கள் (sleeping cells) அல்ல நாம்..! அவற்றுக்கும் உணர்ச்சி உண்டு..! வலி உண்டு...! எண்ணக்குமுறளை எழுத்தில் வெளிப்படுத்தும் எதிர்க்குரல் என்றென்றும் உண்டு..! 'சினிமாதானே' என்றெல்லாம் இவர்களை கண்டும் காணாமல் விடுவதாக இல்லை இனி..!

'துப்பாக்கி'யே இறுதியாக இருக்கட்டும். சினிமாவுலகுக்கு பாடம் கற்பித்த 'துப்பாக்கி'யை சினிமா மறக்க கூடாது..! விஷயம் புரிந்தும் எதிர்காலத்தில் இன்னொரு படத்தை ரிலீஸ் பண்ணிவிட்டு, இதேபோல 'மன்னிப்பு கோரல் பிரஸ் மீட்' என்று இனி ஒன்று ஒருபோதும் நடக்கவே கூடாது..!

அப்படி நடந்தால்...?

'துப்பாக்கி'யில் காட்டிய நமது ஒருங்கிணைந்த எதிர்ப்பு... அப்படியே, தனன்று கொண்டே இருந்து... அடுத்த விஸ்வரூபம் எடுத்து... அது அப்படியான படத்தை திரையிட 'தடை உத்தரவு' என்ற உடனடி நீதிமன்ற அதிரடி இடைக்கால தீர்ப்பில்தான் முடியவேண்டும்..!

அப்பாவி ரசிகர்களை ஏமாற்றி கிரிக்கெட்டில் மேட்ச் ஃபிக்சிங் செய்தோருக்கான நீதி, 'கிரிக்கெட் விளையாட வாழ்நாள் தடை' என்றால்... சினிமாவின் மூலம் அப்பாவி மக்கள் மத்தியில் கருத்து ஃபிக்சிங் செய்யும் இவர்களுக்கும், அந்த படத்துக்கும், நீதி மன்றம்... 'படம் எடுக்க-திரையிட வாழ்நாள் தடை' எனும் தீர்ப்பு தந்தால்தான் என்ன..?

என்னது...? செலவு பண்ணி எடுத்த படத்தை திரையிடாமல் என்ன செய்வதா...?

ஏன்..? ஆர்.கே. செல்வமணியின் 'குற்றப்பத்திரிக்கை' கோமாவுக்கு சென்ற இடத்துக்கே அவையும் செல்லட்டுமே..! என்ன இப்போ..?

நாட்டின் ஒற்றுமையை விட, சமூக நல்லிணக்கத்தை விட, மக்கள் அமைதியை விட பெரிதாக விஸ்வரூபம் எடுத்துவிடுமா உங்கள் பாக்ஸ் ஆபீஸ் கல்லாப்பெட்டி..?ஸாரி.... நோ மோர் ச்சான்ஸ் ஃபார் யு கய்ஸ்..!
source: www.pinnoottavaathi.blogspot.com

0 கருத்துகள்: