கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

மின்வெட்டு. .மின்வெட்டு.. அப்படின்னா எப்படி இருக்கும்? ‘அனுபவிக்காத’ ஆசாமிகள் படிக்கவும்


13 மணி நேர மின்வெட்டு, 18 மணி நேர மின்வெட்டு என்று சொல்கிறார்களே? அந்த மின்வெட்டு வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அனுபவிக்காத ஆசாமிகள் அவசியம் படித்தே ஆக வேண்டும்…குறிப்பாக வெறும் 2 மணி நேர மின்வெட்டுடன் எஸ்கேப்பாகிக்
கொண்டிருக்கும் சென்னை ஆசாமிகளாகட்டும்.. அல்லது மின்வெட்டே இல்லாத நகரங்களில், நாடுகளில் வசிப்போரும் அவசியம் படிக்கனும்!
காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை மின்வெட்டு..(இந்த நிலைமையில்தான் காலையில் எழுந்து பள்ளிக்கும் பணிக்கும் அனைவரும் சென்றாக வேண்டும்!
காலை 9 மணிக்கு மின்சாரம் வரும் அது அனேகமாக 10.30 மணி வரை நீடித்தால் அதிசயம்! காலை 10 மணிக்கோ அல்லது 10.30க்கோ மின்சாரம் கட் ஆனால் அடுத்து 3 மணி நேரத்துக்கு மின்சாரம் கிடையாது! (மதிய சாப்பாடு எப்படி செய்வாங்க?)
அடுத்து ஆரம்பிக்கும் பாருங்க…மின்சார விநியோகம்! அப்படி ஒரு கண்ணும் கருத்துமாக பணி செய்வார்கள்! எப்படி தெரியுமா?
மிகச் சரியாக 1 மணி நேரம் மின்சாரம் கொடுத்துவிட்டு மிகச் சரியாக 1 மணி நேரத்தை கட் பண்ணிடுவர். அதாவது மாலை 6 மணிக்கு மின்சாரம் கட் ஆகும்…. அப்புறம் 7 மணிக்கு வரும்… 8 மணிக்கு கட் ஆகும்… இப்படியே காலை 6 மணி வரை கண்ணும் கருத்துமாக மின்சாரத்தை கொடுத்து கட் பண்ணுகிற அந்த கடமை உணர்ச்சிக்கு அளவே இருக்காது! அதுவும் குறிப்பாக காலை 5 முதல் 6 மணி வரை மின்சாரத்தைக் கொடுத்துவிட்டு 6 மணி முதல் 9 மணி வரை “ரொம்பவே கடமை உணர்ச்சியோடு” செயல்படுகிறார்கள்!
இப்படி மின்சாரத்தைக் கொடுக்கும் நிலையில்தான் மாணவர்கள் தேர்வுக்கும் போகிறார்கள்! மக்கள் பணிக்கும் போகிறார்கள்! கடைகளை திறந்து வைத்து வியாபாரமும் நடக்கிறது!
இது ஒருநாள் வாழ்க்கை அல்ல.. பல மாத காலமாக வாழும் இந்த மக்கள் தொலைக்காட்சி என்றால் என்ன என்பதையே மறந்துவிட்டனர்.. அதாவது நாட்டு நடப்புன்னா என்ன என்பதையே அடுத்த நாள் செய்தி தாள்களைப் புரட்டிப் பார்த்து தெரிந்து கொண்டுதான் “கரண்ட்” வரக் காத்திருக்கின்றனர்!
அப்படின்னா இந்த 24 மணி நேர டிவியில் லைவ்வாக செய்தி கொடுப்பதெல்லாம் யாருக்காக?
source:http://tamil.oneindia.in/

0 கருத்துகள்: