கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

"குடும்ப அட்டையை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்'

தற்போதுள்ள குடும்ப அட்டையை 2014 ஆம் ஆண்டுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்டுள்ள உள்தாள்களின் 2013 ஆம் ஆண்டுக்கான பக்கத்தின் மறு பக்கத்தில் 2014 ஆம் ஆண்டுக்குப் பயன்படுத்தும் வகையில் உள்தாள் அச்சடிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 1.1.2014 முதல் 31.12.2014 வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

எனவே,   குடும்ப அட்டைதாரர்கள் தங்களது குடும்ப அட்டையைப் பயன்படுத்தி 1.1.2014 முதல் 31.12.2014 வரை தொடர்ந்து நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம் என சுப்பையன் தெரிவித்துள்ளார்.


0 கருத்துகள்: