கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இது என் ஒருவனின் விருப்பம் அல்ல ! ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் தாகம் !

அண்ணலாருக்காக 
அண்ணா சாலையில் சங்கமித்த சமுதாயம்!

துப்பாக்கிக்காக 
துள்ளி எழுந்து கூடிய கூட்டமைப்பு !

விஸ்வரூபத்த்துக்காக 
வெகுண்டெழுந்து காட்டிய ஒற்றுமை !

கட்டாயப் பதிவு சட்டத்தை எதிர்த்து 
களம் கண்ட அமைப்புகள் ! 

காதியானிகளுக்கு எதிராக 
கரம் கோர்த்த தலைவர்கள் !

ஷரியத் சட்டத்துக்குகாக பெரம்பலூரில்
சங்கமித்த இயக்கங்கள் ! 

அப்பாவிகள் கைதுக்காக 
அணி திரண்ட அமைப்புகள் !

தேர்தல் என்றதும் 
திசைக்கொன்றாய் செல்வது வேதனை !

தேர்தல் இயக்க நலனுக்கானது இல்லை 
அது சமுதாய நலனுக்கானது என்றால் 
கூட்டமைபில் ஆலோசியுங்கள் !
குறைந்த பட்சம் ஒரு அணியில் நில்லுங்கள் ! 

கூட்டமைப்புடன் அல்லாஹ்வின் கரம் உள்ளது என்பதை ஒன்று பட்ட போதெல்லாம் அல்லாஹ்வின் உதவியை நேரடியாக கண்டோம் ! 

நீங்கள் முரண்பட்டால் பலம் குன்றி கோழைகளாகி விடுவீர்கள் ! எனும் இறை வசனத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள் ! 

இது என் ஒருவனின் விருப்பம் அல்ல 
ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம்களின் தாகம் ! 

மோடிக்கு எதிராகக் கூட நாம் ஒன்று சேரவில்லை என்றால் வேறு எதற்கு ஒன்று சேரப்போகிறோம் ?

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் பற்றிப் பிடியுங்கள் !
நீங்கள் பிரிந்து விடாதீர்கள் ! [அல்குர்ஆன்]

- செங்கிஸ் கான்

0 கருத்துகள்: