கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

"ஆதார்' அட்டை வாங்காவிட்டால் சமையல் எரிவாயு விலை ரூ.891


சென்னை:வரும்அக்டோபருக்குள், ஆதார் அட்டை வாங்காதவர்கள், சமையல் எரிவாயு உருளையை, மானியம் இல்லாமல், இரு மடங்கு விலை கொடுத்து வாங்க நேரிடும்.பயனாளிகள்நாடு முழுவதும், பொதுமக்களுக்கு உயிரி தொழில்நுட்பத்திலான ஆதார் அடையாள அட்டை, வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு "உங்கள் பணம் உங்களுக்கே' என்ற திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை, பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வழங்க உள்ளது.

இந்த நடைமுறை, வரும் அக்டோபரில் அமலுக்கு வர உள்ளது. ஆதார் அடையாள அட்டை உள்ளவர்களுக்கே, சமையல் எரிவாயு மானியம் வழங்கப்படும். இதனால், வரும் அக்டோபருக்குள், ஆதார் அட்டையை வாங்குவோருக்கு மட்டுமே, சமையல் எரிவாயுவிற்கான, மானிய சலுகை கிடைக்கும். இதனால், ஆதார் அட்டை இல்லாதவர்கள், சந்தை விலையில் சமையல் எரிவாயுவை வாங்க வேண்டிய நிலை ஏற்படும்.தற்போது, சென்னையில், மானியம் விலையில், 14.2 கிலோ சமையல் எரிவாயுவின் விலை, 380 ரூபாயாக உள்ளது.

 மானியம் அல்லாத சமையல் எரிவாயுவின் விலை, 891.50 ரூபாயாக உள்ளது.மத்திய அரசு, ஒரு குடும்பத்திற்கு, ஓராண்டிற்கு மானிய விலையில், 9 சமையல் எரிவாயு உருளைகளை வழங்குகிறது. அதற்கு மேல் தேவைப்படுவோர், சந்தை விலையிலேயே சமையல் எரிவாயுவை வாங்க வேண்டும்.மானியம்ஒரு குடும்பத்திற்கு, ஆண்டிற்கு, சமையல் எரிவாயு மானியமாக, 4,000 ரூபாய் வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்தொகை, ஆதார் அட்டை வைத்துள்ளோரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.இதுகுறித்து, சமையல் எரிவாயு முகவர் ஒருவர் கூறுகையில், "ஆதார் அட்டை உள்ளவர் கூட, சமையல் எரிவாயுவை, மானியம் அல்லாத விலையில் தான் முதலில் வாங்க வேண்டும். அதன் பின்னர், அவரது வங்கிக் கணக்கில், மானியத் தொகை சேர்க்கப்படும்' என்றார்.ஆனால், இதுகுறித்து தெளிவான நடைமுறையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்ப்புநாட்டில் பெரும்பாலான, மக்களுக்கு ஆதார் அட்டை வழங்காமல், "உங்கள் பணம் உங்களுக்கே' திட்டத்தின் கீழ், சமையல் எரிவாயுவை கொண்டு வருவதற்கு, நுகர்வோர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மத்திய அரசின் நடவடிக்கையால், ஆதார் அட்டை இல்லாத பெரும்பாலான மக்கள், சந்தை விலையில் எரிவாயுவை வாங்க நேரிடும் என்பதால், இத்திட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என, அவை கோரிக்கை விடுத்துள்ளன.

பின்தங்கிய தமிழகம்

பொதுத் துறையை சேர்ந்த யு.ஐ.டீ.ஏ.ஐ., நிறுவனம், நாடு முழுவதும் ஆதார் அட்டையை வழங்கி வருகிறது. இதுவரை, 32 கோடி அட்டைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், அவற்றில், 80 லட்சம் பேரின் வங்கி கணக்குகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன.தென்னிந்தியாவை பொறுத்தவரை, தமிழகத்தில் தான் மிக குறைவாக, 1.80 கோடி பேர் ஆதார் அட்டையை பெற்றுள்ளனர். இது, ஆந்திராவில், 5.70 கோடியாகவும், கேரளாவில், 2.40 கோடியாகவும், கர்நாடக மாநிலத்தில், 2.10 கோடி என்ற எண்ணிக்கையிலும் உள்ளன.மொத்தம் 7.20 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை, 91 லட்சம் என்ற அளவில் உள்ளது.
நன்றி:http://www.dinamalar.com

0 கருத்துகள்: