கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

இனவெறி!, இஸ்லாத்திற்கு எதிரான கொலைவெறி!


இறைவனின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீது அவதூறுகளும், அபாண்டங்களும் அள்ளி வீசப்பட்டு கொண்டிருக்கின்றன. எங்கோ இருக்கின்ற டென்மார்க் தொடங்கி அமெரிக்கா, இஸ்ரேல் என்ன? நம் கண் முன்னால் கடைகளில் தொங்கும்

தினமலர் வரை கேலி சித்திரங்களும், தகாத தவறான தகவல்களும் பரப்பப்பட்டு வருகின்றன. அதன் உச்சகட்டமாக இஸ்லாத்தையும், இறைவனின் இறுதித் தூதரான முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் மிகக் கேவலமாக
விமர்சிக்கும் ‘innocence of Muslims’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சாம் பாசிலி என்ற யூதன் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளான். இரண்டு மணிநேரம் நீண்ட இத்திரைப்படத்தை எகிப்தில் ஒரு காப்டிக் கிறிஸ்தவர் அரபு மொழியில் மொழிமாற்றம் செய்து யூ ட்யூப் சமூக வீடியோ இணையதளத்தில்
தர ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறைத்தூதரை அவமதிக்கும் காட்சிகள் இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இறைத்தூதரின் உருவம்போல் கற்பனையில் அவதூறாக உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரமும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. யூ ட்யூபில் வெளியான 13 நிமிட டிரைலரிலும் இறைத்தூதரை
அவமதிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் 2010-ஆம் ஆண்டு திருக்குர்ஆனின் பிரதியை எரிக்க அழைப்பு விடுத்த கிறிஸ்தவ பயங்கரவாதி டெர்ரி ஜோன்ஸின் அவதூறான கருத்துக்களை நியாயப்படுத்தும் காட்சிகளும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளன.

இதன் காரணாக உலகின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும் ஆர்பாட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் மிகப்பெரும் எதிர்ப்பலைகளை கிளப்பி இருக்கும் இச்சூழலிலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான யூதன் சாம் பாசிலி மீண்டும் இஸ்லாத்தை மோசமாக விமர்சித்து பேட்டியளித்துள்ளான். இஸ்லாம் ஒரு புற்றுநோய் என்று கருத்து தெரிவித்த பாசிலி தனது
திரைப்படம் ஒரு அரசியல் சினிமா என்று கூறியுள்ளான். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த அவதூறான அவமதிக்கத்தக்க தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறான்.

வரலாறுகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல. சத்தியத்தை எடுத்தியம்ப அகில உலக அதிபதியாம் வல்ல அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி தூதர் தான் முஹம்மது நபி(ஸல்).

இப்பூவுலகில் வன்முறை, கற்பழிப்பு, இனப்பாகுபாடு, கலாச்சார சீர்கேடு, மூடப் பழக்க வழக்கங்கள், மது, மாது, கொலை, கொள்ளை என மனிதன் மனிதம் அற்று மிருகங்களாக வரைமுறைகளற்று வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் சமத்துவம், சகோதரத்துவம், நீதி, பாதுகாப்பு, அன்பு என மனிதர்களை புனிதர்களாக்கிய மாபெரும் தலைவர்.

முஹம்மது நபி(ஸல்) அவர்களது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அந்த புத்தகத்தில் மனித வாழ்விற்கான அனைத்து தகவல்களும் பொதிந்து கிடக்கின்றன. ஒரு மனிதன் தன்னை படைத்த இறைவனிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், தன் மனிவியுடன், தன் தாயுடன், தன் தந்தையுடன், தன் பிள்ளைகளுடன், தன் நண்பர்களுடன், தன் சுற்றத்தாருடன், தன் அண்டைவீட்டாருடன் என மனித வாழ்விற்கு இன்றியமையாத பொக்கிஷத்தை பரிசாக அளித்தவர்.

இன்றைய ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் அல்லது கொள்கைகளை வகுத்த மேதகர்களது வாழ்க்கையை நாம் கையில்
எடுத்தால் கை கலங்கபட்டுவிடும் அளவிற்கு அசுத்தமடைந்துள்ளது. ஆன்மிகத்திற்கு ஒரு வாழ்க்கை, ஆசாபாசங்களுக்கு ஒரு வாழ்க்கை என தான் செய்யும் தவறுகளை மறைப்பதற்கு வியாக்கியானம் கொடுக்கின்றனர். தனது ஆன்மீக வாழ்க்கையை எடுத்து கொள்ளுங்கள் அந்தரங்கத்தில் தலையிடாதீர்கள் எங்கின்றனர்.

ஆனால் உலக மக்களுக்கு ஒரு அருட்கொடையாக அருளப்பட்ட எம்பெருமானார் முஹம்மது (ஸல்) அவர்களது வாழ்க்கையில் ஆன்மீகம், அந்தரங்கம் என அனைத்தும் மனித குலத்திற்கு படிப்பினையாக்கப்பட்டுள்ளது . உலக மானுடர் பின்பற்ற முற்றிலும் தகுதி படைத்தவராய் விளங்கும் வரலாற்று நாயகர் இறுதித்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். இறுதித் தூதரின் வருகையைப் பற்றி வல்ல இறைவன் முன்னர் இறக்கியருளிய வேதங்கள் யாவற்றிலும் முன் மொழிந்துள்ளான். ஒன்றுவிடாமல்
எல்லா வேதங்களும் இறுதித் தூதரைக் குறித்த முன்னறிவிப்புகளை தாங்கியுள்ளன. வருகையை மட்டுமல்லாமல் அவர் ஆற்ற உள்ள பணிகளைக் குறித்தும் வேதநூற்கள் யாவும் உரைக்கின்றன. அவர் வந்துவிட்டால் முழுமையாக அவரையே பின்பற்றுங்கள் என
முழு மானுட உலகிற்கும் உணர்த்தப்பட்டுள்ளது.

வேதம் என உலகம் எவற்றை எல்லாம் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றதோ அவை அனைத்திலும் அண்ணலாரைப் பற்றிய குறிப்புகளும் முன்னறிவிப்புகளும் காணமுடிகின்றது என்பது ஆச்சரியத்தை வரவழைக்கும் வி­ஷயமல்ல! மாறாக, இறைவன், தான் வழங்கியாக வேண்டிய வழிகாட்டுதலை கொஞ்சம்கூட சந்தேகமில்லாமல் திட்டவட்டமாக அளித்துவிட்டான் என்பதற்கான அடையாளம்.

இதனை தெரிந்தும், உணர்ந்தும் இருக்கின்ற மேற்கத்திய அநாகரீக கலாச்சாரத்தில் ஊறித் திளைத்திருக்கும் மூடர்கள் தனது இச்சைகளுக்கு கட்டுபாடு விதித்து மிருகங்களாக வாழ்ந்தவர்களுக்கு மனிதத்தை கற்றுக் கொடுத்த முஹம்மதையும், இஸ்லாத்தையும் இழிவுபடுத்த முயற்சிகின்றனர். அது வானத்தைப் பார்த்து காரி உமிழும் போது அந்த அசுத்தம் தன் மீது தான் விழும் என்பதை கூட அறிய
வக்கற்ற கோமாளிகல் என்பது தான் நிஜம்.

இந்த அடிப்படையை உணர்ந்த முஸ்லிம்கள் அந்த ஒப்பற்ற தூதருக்காக உயிரை விடுவதற்கும் கிஞ்சிற்றும் அஞ்சமாட்டார்கள் என்பதற்கு இன்று உலகம் முழுவதிலும் நடந்து கொண்டிருக்கும் எழுச்சியே சாட்சி.

காரணம் எம்முன்னோரகள் காட்டித் தந்த வழிமுறை அத்தகைய சக்தியுடையது.

ஓ யூத, கிறிஸ்துவனே! வராலற்றை தெரிந்துகொள் வாய்பிளந்து நிற்பாய்.

மக்காவில் இஸ்லாம் துளிர்விட்ட காலம். சத்தியத்தை எடுத்தியம்பும் போது கல்லடிகள், சொல்லடிகள் என சொல்லனா துயரங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. இஸ்லாத்தை ஏற்ற ஸஹாபாக்கள் சுடு மணலில் படுக்க வைக்கபட்டு பாறாங்கற்களை நெஞ்சில் வைத்து அன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் சிரித்து மகிழ்ந்தார்கள். தனது பிறப்புறுப்பில் ஈட்டியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஸஹாபிய பெண்மணி, ஒட்டகத்தின் பலத்தை கொண்டு இரு கூறுகளாக உடல்களை பிளந்து வதைக்கப்பட்ட அல்லாஹ்வின் அடியார்கள்.

அந்த வரிசையில் இஸ்லாம் அதன் அதிபதியாம் வல்ல அல்லாஹ்வின் மீது கொண்ட பற்றும் அவனது தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களது மீது கொண்ட பாசமும், அன்பும் பல ஸஹீதுகளை உருவாக்கியது. அதில் ஒருவர் தான் ஹுபைப் (ரலி). இஸ்லாத்தை ஏற்று கொண்ட குறுகிய காலத்தில் மரணம் மாவீரனின் வாசலை தட்டியது. சாதாரன மரணம் அல்ல வீர மரணம். ஆம் இஸ்லாத்தின் எதிரிகளாம் குறைஷிகள் ஒன்று கூடினார்கள். ஹுபைப் (ரலி) இஸ்லாத்தை ஏற்று கொண்ட ஒரே காரணதிற்காக கைது செய்யப்பட்டு அழைத்து வரப்பட்டார்.

தூக்கு கயிறு பரிசாக காத்துக் கொண்டிருந்தது. சத்தியத்தை ஏற்றுக் கொண்டதற்காக, எடுத்தியம்பியதற்காக. தூக்கு கயிருக்கு முன்னால்
நிறுத்தப்பட்டார்கள். தூக்கு கயிருக்கும் ஹுபைப் (ரலி) அவர்களுக்கும் ஒரு சில செண்டி மீட்டர் தொலைவே இருந்தது. மரணம் கண் முன்
காட்டப்பட்டு விட்டது.  குரைஷி தலைவரகள் பேச ஆரம்பித்தார்கள்.

ஓ… ஹுபைபே!  நாம் உனக்கு ஒரு சந்தர்பம் தருகிறோம். நாம் சொல்லும் ஒரு விஷயத்திற்கு ஆம்!!! என்ற ஒரு வார்த்தை பதில் அளித்தால் போதும் இந்த மக்காவில் இருக்க கூடிய மிகப்பெரும் மாளிகைகள், அழகில் சிறந்த பெண்கள், சுகபோகமான வாழ்க்கை அது மட்டுமல்ல தூக்கிலிருந்து விடுதலை என உலக ஆசை ஒரு கனம் மெய்சிலிர்க்கும் விதமாய் அவர் முன் கூறப்பட்டது.

ஓ… ஹுபைபே!  நீ கருத வேணடாம் நாம் உன்னை உன் மார்கத்திலிருந்து விலகி விடு என்று கூறுவோம் என்று.  அவ்வாறு சொன்னால் நீ உன் உயிரை கொடுத்துவிடுவாய் என்று எங்களுக்கு தெரியும். நாம் சொல்லும் வார்த்தைக்கு ஆம்!!! என்று பதில் கூறிவிட்டால் நாம் முன்னால் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றி வைப்போம். வாக்கு மீற மாட்டோம் என்றார்கள்.

ஹுபைப்(ரலி) உறுதியாக நின்று குரைஷிகளின் வார்த்தைகளை கேட்டு கொண்டிருந்தார்கள். குரைஷி தலைவர்கள் சொன்னார்கள். ஹுபைபே நீ நிற்கும் இந்த தூக்கு கயிருக்கு முன்னால் உன்னுடைய தூதர் முஹம்மது நின்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார். எங்களால் முஹம்மதை இங்கே கொண்டு வந்து நிறுத்த முடியாது. ஆனால் நீ கற்பனை செய்து கொள். அவ்வாறு செய்துவிட்டால் ஆம்!!!  என்று ஒரு வார்த்தை சொல் உனக்கு தூக்கிலிருந்து விடுதலை, சுகபோகமான வாழ்க்கை காத்திருக்கிறது என்றார்கள்.

அந்த மறுகனமே உண்மை முஃமின் ஹுபைப் (ரலி) அவர்களது வாய்களிலிருந்து வார்த்தைகள் அனலாய் கொட்டியது. இதோ அந்த வார்த்தைகள்! அல்ல வீர முழக்கங்கள்.

ஓ… மக்கத்து குரைஷிகளே, காஃபிர்களே இந்த ஹுபைபினுடைய உடல் ஈட்டிகளால் குத்தப்பட்டு சல்லடைகளாக துளைக்கப்பட்டாலும், இந்த ஹுபைபினது உடல்கள் மக்காவில் உள்ள நாய்களுக்கும், கழுகுகளுக்கும் உணவாக்கப்பட்டாலும், என்னுடை தூதர், என்னுடைய ரஸூல், என்னுடைய முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தங்களது வீட்டிலே அவர்களது படுக்கையிலே இருக்கும் போது அவர்களது காலிலே சிறு முள் தைப்பதையும் இந்த ஹுபைப் ஒத்துகொள்ளமாட்டான். என்ற ஹூபைப், தூதர் மீது கொண்ட அன்பின் மிகுதியை வெளிக்காட்டி ஸஹீதானார்கள் என்று வரலாறு நீள்கின்றது.

சிலர் நினைக்களாம் இதற்காக எவ்வாறு உயிரை விட முடியும் என்று. ஆம் இன்று அற்ப ஆண், பெண் காதலுக்காக மலைகளில் இருந்து குதித்தும், கத்திகளாக் காயத்தை ஏற்படுத்தி கொண்டும் இருக்கும் மனிதர்களை நாம் பார்க்கிறோம். காரணம் அன்பு. அதை விட பல நூறு மடங்கு அன்பும், பாசமும் இவ்வுலகத்தில் மனித தன்மையற்று மிருகங்களாக வாழ்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த எங்களது தூதர் மீது நாங்கள் (முஸ்லிம்கள்) வைத்திருக்கின்றோம். அவர்களை கொச்சை படுத்தவோ அல்லது இழிபடுத்தவோ நினைப்பவர்களிடம் இருந்து எங்களது உயிரை கொடுத்தேனும் எங்களது தூதர் முஹம்மது அவர்களது கண்ணியத்தை பாதுகாப்போம் இன்ஷா அல்லாஹ்.

இவையனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள் இவ்வுலக இன்பங்களுக்காக இஸ்லாத்தையும் அதன் தூதரையும் பழிக்கின்றனர். எதிர்மறை உணர்வுகள் நேர்மையையும் நல்லுணர்வுகளையும் கொன்று, குருதியை உறிஞ்சி விடுகின்றன. இன்றைய மேலை நாடுகளுக்கு உண்மையும் சத்தியமும் நன்றாகத் தெரியும். வாய்மையையும் வழிகாட்ட வந்த வான்மறையையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.  ஆயினும், இனவெறியும் இஸ்லாமிற்கெதிரான கொலை வெறியும் அவர்களுடைய மனங்களை விட்டு அகலாமல் உள்ளன.
வலசை ஃபைசல்

0 கருத்துகள்: