கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

உள்ளங்களை இணைக்கும் உணவு

Food relates the Family - Food Habits and Nutrition Guide in Tamil
ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் குடும்பக்காட்சி ஒன்றை உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து பாருங்கள்.

மனைவி, கணவருக்கு உணவைப் பரிமாறும்போது, ''இது உங்களுக்கு ரொம்ப பிடிக்குமேன்னு வாங்கிவந்து, லேசா வதக்கி டேஸ்டா பண்ணியிருக்கேன். சாப்பிட்டு பாருங்க...'' என்பாள்.


எனக்காகவே சிரத்தை எடுத்து பண்ணியிருக்கே. உனக்கு கொஞ்சம் காரம் தூக்கலா இருக்கணுமே. உனக்காக இன்னும் கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாமே..''' என்று பதிலுக்கு கணவர் சொல்வார்.

அம்மா நீங்க சமைத்து ரொம்ப களைத்து போயிருப்பீங்க.. நீங்களும் உட்காருங்க நான் எல்லோருக்கும் பரிமாறுகிறேன்..'' என்பான், மகன்.

இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும்.

ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம்.


புது ஜீவனை பிரசவித்து இந்த உலகத்திற்கு அதனை அறிமுகப்படுத்தும் தாய்தான், அதற்கு முதல் உணவைப் புகட்டுகிறாள். அது, தாய்ப்பால். உயிரோடு, தன் உணர்வோடு கலந்த உணவை ஊட்டும் தாய், மாதங்கள் பல கடந்த பின்பு உடலில் இருந்து குழந்தையைப் பிரித்து, புதுப்புது ருசியை அறிமுகம் செய்கிறாள்.

குழந்தைக்காக ஒவ்வொரு காய்கறியையும் பார்த்து பார்த்து வாங்கி, எதிலெல்லாம் என்னென்ன சத்து இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை ருசியோடு சமைத்துக் கொடுக்கிறாள்.

என்னதான் சத்து இருந்தாலும், எவ்வளவுதான் அது சுவையாக இருந்தாலும் ''இதோ சமைத்து வைத்திருக்கிறேன். எடுத்து சாப்பிடு'' என்று தாய் கூறுவதில்லை. சாப்பிடுவதற்கான சூழ்நிலை, மனநிலை, சுற்றுச்சூழல் போன்றவை குழந்தைக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக நிலாவைக்காட்டி, பறவைகள்-பிராணிகளைக் காட்டி, பாட்டுப்பாடி, கதைகள் சொல்லி தாய் உணவூட்டுகிறார். இது தாய்மையின் இன்றியமையாத பண்பு.

வீடு எதனால் அமைக்கப்பட்டது? என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், செங்கல், சிமெண்ட், இரும்பு... என்ற கட்டுமானப் பொருட்களால் ஆனது என்று பதிலளித்தால், பதில் சரி. ஆனால் அவை அனைத்தும் உயிரற்றவை. அன்பு என்ற உயிர் அதனுள் இருந்தால் மட்டுமே வீடு வீடாக அமையும். இல்லாவிட்டால் கல்லறைக்கும்-வீட்டிற்கும் வித்தியாசம் இருக்காது. இப்போது பெரும்பாலான வீடுகள், நவீன சவுகரியமான கல்லறைகள் போலத்தான் இருந்து கொண்டிருக்கின்றன.
உணவு எதனால் அமைகிறது? என்ற கேள்வியைக் கேட்டால், ''பிரியாணியில் இந்தெந்த பொருட்கள் எல்லாம் சேர்கிறது. ஜாங்கிரியில் இந்தெந்த பொருளெல்லாம் சேர்க்கப்படுகிறது'' என்பது அதற்கான தத்துவார்த்தமான பதில் அல்ல. இத்தனை பொருட்களையும் கலந்தால் ஒரு உணவு தயாராகிவிடும் என்பது உண்மைதான். ஆனால் அந்த உணவு சரியான நேரத்தில், சரியான சூழலில் அன்போடும், பாசத்தோடும் பரிமாறப்பட வேண்டும். அப்படியானால்தான் உடலுக்கும், மனதுக்குக்கும் பலன் தருவதாக அந்த உணவு அமையும்.

வீட்டிற்கும், உணவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குடும்பமே ஒன்றாவதற்கு வீடு ஒரு கூடு போல் இருப்பது இன்றும் தொடர்கிறது. ஆனால் உணவை ஒன்று கூடி உண்ணும் விஷயத்தில் பழைய காலத்திற்கும் இப்போதைக்கும் நிறைய வேறுபாடு. முன்பெல்லாம் பசியை தாங்கிக்கொண்டு ஒருவருக்காக இன்னொருவர் காத்திருப்பதும், எல்லோரும் வந்த பின்பு ஒன்றாக அமர்ந்து உண்ணுவதும் பாசத்தின் மிகப்பெரிய வெளிப்பாடாக இருந்தது.

குழந்தை பசிக்கிறது என்று தாயிடம் சொன்னாலும், ''அப்பா வரட்டும். அது வரை பொறுத்திருப்போம்'' என்று தாய் காத்திருப்பார். குழந்தை பசிக்கிறது என்று சொல்லும் அதே நேரத்தில் தனது பசியையும் தாயார் உணர்ந்திருக்கவே செய்வார். அதே பசி கணவருக்கும் இருக்கும் என்பதும் அவளுக்குத் தெரியும். கணவர் என்ற ஒருவருக்காக தானும், குழந்தையும் பசியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆயினும் பசியை போக்குவது மட்டுமே உணவின் நோக்கம் அல்ல, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்போதுதான் உணவின் முழுமையை உணர்ந்து கொள்ள முடியும் என்று தாய்மார்கள் நம்பினார்கள்.

இப்படி ஒருவருக்கொருவர் அன்பால் போட்டி போடும் போது, அங்கே அன்னியோன்யம் உருவாகும். அதற்கு முன்புவரை அவர்களுக்குள் ஏதாவது மனவிலகல் இருந்திருந்தாலும், ஒன்றாக இருந்து உணவருந்தும் போது அந்த நெருக்கடி மறைந்து நெருக்கம் தோன்றியிருக்கும்.

ஹோட்டலில் கூட இப்படி ஒன்றாகச் சாப்பிடலாமே! என்று நீங்கள் கேட்கலாம். நான்கு பேர்களைக் கொண்ட உங்கள் குடும்பம் ஹோட்டல் மேஜையைச் சுற்றி உட்காருகிறது. என்னென்ன பொருட்கள் கலந்தது, யார் தயாரித்தது, யாருக்காக தயாரித்தது, எப்படி தயாரித்தது... எதுவுமே தெரியாது. ஆனால் நீங்கள் கேட்ட பெயருள்ள உணவு உங்கள் முன்னால் இருக்கும். அங்கே சாப்பாட்டு போட்டி நடந்து கொண்டிருப்பது போல் பலரும் பலவிதத்தில் உண்டு கொண்டிருப்பார்கள். நீங்களும் அந்த வேகத்திற்கு தக்கபடி உண்டுவிட்டு, எழுந்து போவீர்கள். அங்கே உங்களுக்கு பேச நேரம் இருக்காது. உங்கள் உணர்வுகளை பங்கிட்டுக்கொள்ள வாய்ப்பும் இருக்காது. அங்கே பசி மட்டுமே ஆறும். அன்பு மேம்பாடென்று எதுவும் இருக்காது.

பிரச்சினைகள் நிறைந்த இரண்டு குடும்பத்தினரை ஒன்றாக்க விரும்பும் மூன்றாவது குடும்பத்தார், இரு குடும்பத்தினரையும் அழைத்து விருந்து வைப்பது கிராமத்து வழக்கம். உணவருந்திக் கொண்டே பேசும்போது முக்கியமான பிரச்சினைகள்கூட எளிதாகி, தீர்வை நோக்கிச் சென்று கொண்டிருக்கும்.

இப்போது எத்தனை குடும்பங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்?

18.6 சதவீத குடும்பங்களில் மட்டுமே தினமும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஒரு நேரம் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது 22.1 சதவீதம்பேர்.

மாதத்தில் ஒரு தடவை ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறவர்கள் 53 சதவீதம் பேர்.

நாளடைவில் இந்த சதவீதத்திலும் பெரும் சரிவு ஏற்பட்டுவிடும் போல் தெரிகிறது.

ஒன்றாக இருந்து உண்டால்தான் உறவுகளை மேம்படுத்த முடியும் என்பதை உலகமே புரிந்து கொண்டதால் இப்போது உலகநாடுகள் பலவற்றில் ''பேம்லி மீல்ஸ்'' திட்டம் வலியுறுத்தப்பட்டுவருகிறது. அமெரிக்காவில் இதை பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நாளைய வாழ்க்கையை வெற்றிகரமாக்க இன்றே திட்டமிட்டு செயல்பட வேண்டியவர்களாக இருப்பவர்கள் டீன்ஏஜினர். இந்த இளம்பருவத்தினர்தான் உணவில் அதிக அளவில் அலட்சியமாக இருந்து உடலைக் கெடுத்துக் கொள்கிறார்கள். வீட்டில் உணவருந்துவதே தேவையா என்ற கேள்வியுடன் இவர்கள் இருந்து கொண்டிருப்பதால், சாப்பாடு மட்டுமின்றி ஆரோக்கியமும் இரண்டாம் பட்சமாகி விடுகிறது. ஒன்றாக உணவருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தினால் இவர்கள் சமச்žரான சத்துக்கள் கொண்ட உணவை, சரியான நேரத்தில் சாப்பிடும் சூழ்நிலை உருவாகும்.

இளம் பெண்களிடம் ''பிரேக் பாஸ்ட் ஸ்கிப்பிங்'' என்ற காலை உணவை தவிர்க்கும் பழக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. காலையில் கல்லூரி செல்லும் மாணவிகளும், வேலைக்கு செல்லும் பெண்களும் காலை உணவைத் தவிர்ப்பதை ஒரு ''நவீன கால நாகரீகம்'' போல் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் ஏற்படும் உடல்பாதிப்புகள் இன்று நாளை அல்ல... பிற்காலத்தில்தான் முழுமையாகப் புரியத் தொடங்கும். குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் இவர்களும் சரியான நேரத்திற்கு சாப்பிட்டு விடுவார்கள்.

ஒரு குடும்பமே ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது உணவை மட்டுமல்ல, மனதையும் பங்கிடுகிறோம்.

பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விடுவதாலும், ஒருவரைப் பற்றி இன்னொருவர் தவறாகப் புரிந்து கொள்வதாலும்தான் பெரும்பாலான குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசுகிறோம். ஒருவர் மீது இருக்கும் குறைபாட்டையும் எடுத்து வைப்போம். அதன் மூலம் பிரச்சினைகள் சுமூகமாக களையப்படும். மனபாரம் குறைந்து, மகிழ்ச்சி பெருகும்.
http://www.nidur.info/

0 கருத்துகள்: