கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

ரேஷன் கார்டு புதுப்பிப்பதில் சிரமமா? புகார் தெரிவிக்க மொபைல் எண்கள் வெளியீடு

சென்னை:ரேஷன் கார்டுகள் புதுப்பிப்பு பணியில், ஏதாவது சிரமங்கள் இருந்தால் புகார் செய்வதற்கான மொபைல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.உணவுப் பொருள் வழங்கல் ஆணையர் பஷீர் அகமது வெளியிட்ட செய்திக் குறிப்பு:தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் காலத்தை, இம்மாதம் 1ம் தேதியில் இருந்து இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை, மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, 1ம் தேதியில் இருந்து, அனைத்து மாவட்டங்களிலும், குடும்ப அட்டைகள் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.குடும்பத் தலைவர் அல்லது உறுப்பினர், தாங்களே முன்வந்து வாய்மொழியாக தேவையான விவரங்களை தெரிவித்து, குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்வதுடன், தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கிச் செல்கின்றனர். 5ம் தேதி வரை, 6.5 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளை புதுப்பித்துள்ளனர்.

வரும் பிப்ரவரி 28ம் தேதி முடிய, உரிய நாட்களில் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் உள்ளது. புதுப்பிக்கும் பணியிலோ அல்லது உணவுப் பொருட்கள் பெறுவதிலோ சிரமங்கள் இருந்தால், 7299998002 அல்லது 8680018002 அல்லது 7200018001 என்ற மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=380298

0 கருத்துகள்: