கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அரசு தலையிடாவிட்டால்… ஆயிரக்கணக்கான கோடி வக்ஃப் வருமானம் நஷ்டமாகும்!

புதுடெல்லி: மத்திய அரசு உளப்பூர்வமாக தலையிடாவிட்டால் வக்ஃப் சொத்துக்கள் மூலம் கிடைக்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வருமானத்தை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று சச்சார் கமிட்டியில் சிறப்புப் பணி அதிகாரியாக பணியாற்றிய ஸக்காத் பவுண்டேஷன் ஆஃப் இந்தியாவின் தலைவர் டாக்டர் ஸஃபர் மஹ்மூத் தெரிவித்துள்ளார்.

முற்றிலும் இலவசம் – அது என்ன? அதாங்க “அட்வைஸ்”

இளைஞர்களுக்குப் பிடிக்காதது, முதியர்வர்களுக்குப் பிடித்தது. தெரிந்தவர்களோ தெரியதவர்களோ எங்கு போனாலும், சிறியவர் முதல் பெரியவர் வரை வயது வரம்பு இல்லாமல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைப்பதும், அனைத்து காலங்களிலும் பொழியும் மழை அதுதான் “அட்வைஸ் மழை”.

கீழணை பாலம் பாதுகாப்பு அவசியம் : பாசனத்தை காக்க போக்குவரத்தை தடை செய்தால் என்ன?

கடலூர், நாகை மற்றும் தஞ்சை மாவட்டங்களின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும், பழமையான கீழ்அணையை பாதுகாக்க, அப்பாலத்தின் மீது, போக்குவரத்தை முற்றிலும் தடை செய்ய வேண்டும். போக்குவரத்திற்காக, மாற்றுப் பாலம் அமைக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

மயிலாடுதுறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளாம்!

மதுரை, மயிலாடுதுறையில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி
மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக, தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.

மத்திய அரசு சிறுபான்மையினருக்காக உருவாக்கும் 5 பல்கலைக்கழங்களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்காக மத்திய அரசு உருவாக்க உள்ள 5 பல்கலைக்கழகங் களில் ஒன்றை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம். அப் துல் ரஹ்மான் எம்.பி. இன்று கோரிக்கை வைத்தார்.

சிறுபான்மையின சமுகத் தின் கல்வி மேம்பாட்டின் அவசியம் குறித்து ஆய்வு செய்த மத்திய அரசு சிறுபான்மை யினருக்கென பிரத்யேகமாக நாடு முழுவதும் பல்கலைக் கழகங்கள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்றும், அதன் முதற்கட்டமாக ஐந்து பல்கலைக் கழங்களை ஐந்து வெவ்வேறு மாநிலங்களில் உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தது.

‘இன்ஷா அல்லாஹ்’ என்றால் என்ன?.

முஸ்லிம்கள் அடிக்கடி இந்த வார்த்தையை பயன்படுத்துவதைக் கண்டிருப்பீர்கள். குறிப்பாக எதிர்காலத்தில் ஒரு செயலை செய்வதாக இருந்தாலோ அல்லது நாடினாலோ இந்த வார்த்தையோடு சேர்த்துதான் அச்செயலை செய்வதாகக் கூறுவர். ‘இன்ஷா அல்லாஹ் நான் இன்று மாலை அங்கு வருகிறேன்’ என்றோ ‘இன்ஷா அல்லாஹ் நாளை எனக்கு திருமணம் நடைபெற உள்ளது’ என்றோ கூறுவதை கேட்டிருப்பீர்கள். இந்த வார்த்தையின் பொருள் என்ன?

கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு ஜீனத்அம்மாஅவர்கள் மறைவு.

                                         அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)
கோணுழாம்பள்ளம் மெயின் ரோடு ஹஜ்ஜி முகம்மது அவர்களின் தாயாரும்,சகாபுதீன்&அப்துல்ரஷீத் பாட்டி  ஜீனத்அம்மா இன்று வெள்ளிக்கிழமை(23.08.2013) இரவு 9.00 மணியளவில்  தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.ஜனாஸா நல்லடக்கம் நாளைசனிக்கிழமை(24.08.2013) காலை11,00மணியளவில் நடைப்பெறும்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கோணுழாம்பள்ளம்post இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.