கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்

நபிமார்களைப் பொய்யாக்குவது, படுகொலை செய்வது (5:70, 2:87) அல்லாஹ்வைப் பிச்சைக்காரன் என்று இழிவாகப் பேசுவது, அல்லாஹ்வை விட நாங்கள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள் என்று திமிராகப் பேசுவது (3:181) அல்லாஹ்வின் வலிமையையே நாங்கள் வென்றவர்கள் என்று கிறுக்குத்தனமாக உளறுவது (5:64) அல்லாஹ்வினால் அருளாக வழங்கப்பட்ட வேத வசனங்களை இடம் மாற்றி, பொருள் மாற்றிப் புரட்டல் செய்வது (4:46) அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யைக் கூறுவது (3:75) பூமியில் கிளர்ச்சிகளை ஏற்படுத்துவது, யுத்தச் சூழலை உருவாக்குவது (5:64) முஃமீன்களை கடும் பகைவர்களாகக் கருதுவது (3:118-119) ஒப்பந்தங்களை முறிப்பது (2:100) மார்க்கத்தை கேலிப் பொருளாகவும் விளையாட்டாகவும் கருதுவது (5:57) தடை செய்யப்பட்ட பொருள்களை உண்பது, மக்கள் சொத்தை முறைகேடாக உண்பது, வட்டியை உண்பது (4:161) உலக வாழ்வை அளவு கடந்து நேசிப்பது, மரணத்தை வெறுப்பது (2:96) ஈவு, இரக்கத்தைத் தொலைத்து எந்தப் பழிபாவத்துக்கும் அஞ்சாமல் மனதைக் கல்லாக இறுக வைத்துக் கொள்வது (5:13)

… இவையெல்லாம் யூதர்களின் குணங்களும் இழிவான செயல்களுமாகும் என்று அல்லாஹ் (சுபு)  தனது  திருமறைக் குர்ஆனில் அடையாளம் காட்டியிருக்கிறான்.
இந்த இழிகுணம் மற்றும் ஈனச் செயல்களின் காரணமாக வரலாற்றில் உலகின் எந்த பாகத்திலும் யூதர்கள் நிம்மதியாக வாழ்ந்ததுமில்லை, வாழவிடப்பட்டதும் இல்லை. உலகின் பலதேசங்களில் மன்னர்களின் ஆணைக்கிணங்கவே இவர்கள் கடுந்துன்பங்களுக்குள்ளாக்கப்பட்டார்கள்; அடித்து விரட்டப்பட்டார்கள். இதனால் மிக நீண்ட காலமாகவே இவர்கள் தங்களுக்கென ஒரு நாடு இல்லாமல் நாடோடிகளாகவே திரிந்தார்கள். இதன் விளைவாக நமக்கொரு நாடு வேண்டும்; நம்மை ஒடுக்கிய உலகத்தை நாம் மேலாதிக்கம் செய்து பழிதீர்க்க வேண்டும் என்கிற எண்ணம் 1700களின் மத்தியில் இவர்களுக்கு ஏற்பட்டு அதற்கான செயல்வடிவங்களும் ஏற்படத் தொடங்கின.
இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு 1760களிலிருந்து பல ரகசிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் தொடங்கினார்கள். அந்நிலையில் ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருந்த ’ஆதம்வைஸ் ஹாரிபட்’ என்ற யூத அறிஞர் 1776 ஆம் ஆண்டில் `பேரொளியாளர்களின் சங்கமம்’ என்ற பொருள்படும் இதழ் ஒன்றை யூதர்களிடையே ரகசியமாகச் சுற்றுக்கு விட்டு வந்தார். அவ்விதழில் “கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம் யூத இனம் மட்டுமே! ஆகவே அவர்களே இவ்வுலகை ஆளவும் ஆதிக்கம் செலுத்தவும் உரிமையுள்ளவர்கள்” என்கிற கருத்தாக்கத்தை வலியுறுத்தி பல ஆக்கங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தார். இது சிதறிக் கிடந்த யூதர்களை ஒருங்கிணைக்கப் பெரிதும் உதவியதுடன் அவர்களின் ரகசிய ஆலோசனைக் கூட்டங்களுக்கும் வலுசேர்த்தது.
1869ஆம் ஆண்டில் `ஹாஹாம் ஷெரோன்’ என்ற யூதரின் (ஹாஹாம் என்றால் யூதர்களின் மொழியில் ‘சித்தாந்த’ குரு என்று பொருள்) தலைமையில் “யூதர்களை ஒருங்கிணைப்பது, உலகை மேலாதிக்கம் செய்வது” என்ற தலைப்பில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஷெரோன் இப்படிக் கூறினார்.
யூதர்களாகிய நாம் இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய வேண்டுமானால் நமக்கு இரண்டு ஆற்றல்கள் தேவை. ஒன்று, ஏராளமான தங்கம். மற்றொன்று பத்திரிக்கை (அக்காலத்தில் தங்கம்தான் பணமாக புழக்கத்தில் இருந்தது என்பதையும் ஊடகமாக அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்)
ஷெரோனின் யோசனைக்கேற்ப யூதர்கள் ஏராளமான தங்கங்களை அதாவது பொருளாதாரத்தைச் சேமிக்கத் தொடங்கினார்கள். அதே சமயம் ஊடகங்களிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். தாங்களே ஊடகங்களை உருவாக்குவது, வளர்ந்த ஊடகங்களில் ஊடுருவி தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது, பரவலான மக்கள் வரவேற்பைப் பெற்றுள்ள ஊடகங்களை விலைக்கு வாங்குவது என்று தொடங்கிய அவர்களின் ஊடக ஊடுருவல் இன்று மலைக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
உலகிலுள்ள மொத்த ஊடகங்களில் 25 சதவீத ஊடகங்கள் இன்று யூதர்களுக்குச் சொந்தம். அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் வளர்ந்த, முன்னணி ஊடகங்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஊடகங்களில் 52 சதவீத ஊடகங்கள் யூதர்களுக்
குச் சொந்தம். அதேபோல ஆஸ்திரேலியாவிலும் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலும் வெளியாகும் முன்னணி இதழ்களில் பெரும்பாலானவை யூதர்களுக்குச் சொந்தம்.யூதர்கள் ஊடகங்களின் மீது மூன்று வழிகளில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். 1.ஊடகங்களை உருவாக்குவது, 2. வளர்ந்த ஊடகங்களை மட்டும் விலைக்கு வாங்குவது, 3. முன்னணி ஊடகங்களின் பங்குகளை அதிகமாக வாங்கிக் குவித்துக் கொள்வது.
அமெரிக்காவில் பெருவாரியான வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள “நியூயார்க் டைம்ஸ், வால்ஸ்ட்ரீட் ஜர்னல், டெய்லி நியூஸ்” ஆகிய நாளேடுகளின் 80 சதவீதப் பங்குகள் இன்று யூதர்களுக்குச் சொந்தமாகும்.
அதேபோல வாரம் ஒன்றுக்கு 5 மில்லியன் பிரதிகளை விற்றுத்தீர்க்கும் `டைம்’ வார ஏட்டின் பெரும்பான்மையான பங்குகளை ஜான்மேயர் என்ற யூதர் வைத்திருக்கிறார். மிகவும் பிரபலமான `நியூஸ் வீக்’ இதழை மால்கம் மேயர் என்ற யூதர் 1973 ஆம் ஆண்டில் வாங்கினார். அதன் நிருவாகம் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளும் இன்று யூதர்களின் கையிலேயே இருக்கிறது.
`ஃபார்டுவர்டு’ என்ற வார இதழின் பெரும் பங்குகளை யூதர்கள் கட்டுப்படுத்துவது போலவே `நியூயார்க் போஸ்ட்’ என்ற நாளேட்டின் பெரும்பான்மைப் பங்குகளை நியூஸ்கார்ப்பரேஷனின் முதலாளியும் நம்ம ஊரு ஸ்டார், ஜீ குழுமத்தின் அதிபருமான `ரூபர்ட் முர்டோக்’ என்ற யூதர் கட்டுப்படுத்துகிறார்.
அமெரிக்காவிலும் உலகின் இதர பகுதிகளிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ள `வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழும் யூதர்களின் பிடியிலிருந்து தப்பவில்லை.
இந்த நாளிதழின் தலைமைப் பீடத்தில் 1933 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யூதர்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அதன் தொழிலாளர் நலன் நிருவாகக் கமிட்டியில் `லாரீ இஸ்ரேல்’ என்ற யூதர் தலைவராக இருந்து வருகிறார்.
அமெரிக்காவிலுள்ள நியூஆர்லியன்ஸ் நகரத்திலிருந்துவெளிவரும் ’பீகான்டைம்ஸ்’ என்ற நாளேட்டை நியூஹவுஸ் நிறுவனத்தின் யூத முதலாளி வாங்கினார்.
அந்த நாளிதழை வாங்கியபோது நியூ ஆர்லியன்ஸ் நகரில் விழா நடந்தது. அதில் உரையாற்றிய நியூஹவுஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கூறினார் :- “நான் பீகான் டைம்ஸை வாங்கியபோதே நியூ ஆர்லியன்ஸ் நகரையும் வாங்கிவிட்டேன்”!
இன்று நியூ ஹவுஸ் என்ற யூத நிறுவனம் 12 தேசங்கடந்த அதாவது கண்டங்களைக் கடந்த நாளிதழ்கள், 24 தொலைத் தொடர்பு நிறுவனங்கள், 26 தேசிய இதழ்கள், 78 நாளேடுகள் மற்றும் உலகெங்கும் எண்ணற்ற தொலைக்காட்சி நிறுவனங்களில் கூட்டு என்று தனது ஊடக ஆதிக்கத்தைப் பரப்பி வருகிறது.
பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலத்தில் மிகப்பிரபலமும் செல்வாக்கும் படைத்த ’டைம்ஸ்’ நாளேட்டை ரூபர்ட் முர்டோக் கைப்பற்றிக் கொண்டார். மேலும் சண்டே டைம்ஸ், சன், நியூஸ்ஆஃப்த வேல்ட் போன்ற நாளேடுகளும் சிட்டி மேகசின் என்ற வார ஏடும் ரூபர்ட் மூர்டோக்குக்குச் சொந்தம்.
பலகோடி மக்களின் “அறியாமையைப் போக்கி அறிவொளி ஏற்றும்’’ நாற்றமெடுத்த ‘ப்ளேபாய்’ இதழும் யூதர்களுக்குச் சொந்தமானதே. 1855ஆம் ஆண்டில் யூதர்களால் தொடங்கப்பட்ட டெய்லி டெலிகிராப் நாளேடு யூதர்களின் ஆதிக்கத்தை இன்றும் பிரிட்டனில் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.
ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் பிரான்ஸில்..
ஆஸ்திரேலியாவில் ரூபர்ட் முர்டோக் என்ற யூதர் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட நாளேடு மற்றும் வார ஏடுகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். இவையனைத்தும் முன்னணி ஏடுகள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ரஷ்யாவில் முன்னணி ஏடுகளையும் செய்தி நிறுவனங்களையும் யூதர்களே சொந்தமாகக் கொண்டுள்ளனர். போரிஸ் பெர்ஸோவ்ஸ்கி, கோசின்ஸ்கி ஆகிய இரு யூதர்களும் ரஷ்யாவிலுள்ள ஏராளமான ஊடகங்களின்  முதலாளிகளாக உள்ளனர். ரஷ்ய மொழியில் வெளிவருகிற மிகப் பிரபலமான நாளேடுகளான சேஃப் துன்யா, நோஸாஃபோஸீமாய, அஸ்ஃபசோதா ஆகிய நாளேடுகளும் ஈதோகீ, ஓஹூ நியூக் முதலான வார ஏடுகளும் மேற்படி இரு யூதர்களுக்கே சொந்தம்.
இவை தவிர ஏராளமான அச்சு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் இவர்கள் இருவருக்கும்  சொந்தமாக உள்ளன. பிரான்சில் ஷார்ல் ஹாப்ஸ் என்ற யூதர் 1935 ஆம் ஆண்டில் ஹாப்ஸ் செய்திகள் என்ற பெயரில் ஒரு செய்தி நிறுவனத்தைத் தொடங்கினார். பின்னர் அச்செய்தி நிறுவனத்திலிருந்து ’பிரஞ்ச் பிரஸ்’ என்ற தினசரி வெளிவந்தது. இதுவும் இதுபோன்ற எண்ணற்ற பல ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் யூதர்களுக்குச் சொந்தமாக இன்று பிரான்சில் உள்ளன.
உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மின்னணு ஊடகங்களிலும் ஆயிரக்கணக்கான அச்சு ஊடகங்களிலும் யூதர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள் என்பதை முன் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். . எனினும் அந்தப் பக்கங்களில் ஒரு சிலவற்றை மட்டுமே அடையாளம் காட்டியிருக்கிறோம். அதுவும் உலகளவில் மிகவும் பிரபலமடைந்த ஊடகங்களின் நிலையை மட்டுமே அடையாளம் காட்டி இருக்கிறோம் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு ஒரு நாடு இல்லாமல் – போக்கிடமில்லாமல் நாடோடிகளாக யூதர்கள் திரிந்து கொண்டிருந்த நிலையில், தங்களுக்காக ஒரு நாடு, ஏராளமான சொத்துக்கள், ஊடகங்களில் ஊடுருவல், மேலாதிக்கம் என்று சிந்தித்துக் களமிறங்கியதில் “ஏதோ ஒரு வகையில்” நியாயமிருக்கலாம்.
ஆனால் இன்று முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாலஸ்தீன நிலப்பரப்பை அமெரிக்க, ஐரோப்பிய ஷைத்தானியப் பேரரசுகளின் துணையுடன் சர்வாதிகாரமாக ஆக்ரமித்துக் கொண்டு அதில் தங்களுக்கென ஒரு நாட்டையும் இராணுவத்தையும் உருவாக்கிக் கொண்டு பாலஸ்தீன முஸ்லிம்களை ஒடுக்கிப் படுகொலை செய்து கொண்டிருக்கும் நிலையில், ஊடகங்களில் இந்தளவுக்கு வெறித்தனமான ஆக்கிரமிப்பைச் செலுத்திக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் மிகவும் முக்கியமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய விசயம். அவர்கள் இன்றும்  இந்த அளவுக்கு ஊடகங்களில் வெறித்தனமாக ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பதற்கு முக்கியமான மூன்று நோக்கங்கள் இருக்கின்றன.
1. வர்த்தகச் சூதாட்டம். அதாவது இன்றைய உலகமயமாக்கல் சூழலில், உலக நாடுகளை நிதிச்சந்தைக் கட்டுப்படுத்தும் சூழலில், எந்த ஒரு நிறுவனமும் பங்குச்சந்தைக்குள் நுழைந்து கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கலாம் என்ற சூழலில், வளர்ந்த, தேசங்கடந்த ஊடகங்களின் மூலம் பங்குச் சந்தையில் கோடி கோடியாய் லாபமீட்டலாம் என்பதுடன் படிப்படியாக பங்குச் சந்தையையே கைப்பற்றி உலக நாடுகளை ஆட்டுவிக்கலாம். அத்துடன் பங்குகளை ஒரே நேரத்தில் உருவி பங்குச்சந்தையையும் அதைச்சார்ந்து நிற்கும் உங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆட்டங்காணச் செய்வோம் என்று மிரட்டி பல காரியங்களை பல நாடுகளின் அதிபர்கள் மூலமே சாதித்துக் கொள்ளலாம். மேலும் ஊடகங்கள் கைவசம் இருப்பதால் மந்த நிலையில் இருக்கும் பங்குச் சந்தையைக் கூட சுறுசுறுப்பாக இயங்குகிறது. ஏற்றம் காணுகிறது. கொள்ளை லாபம் கொட்டப்போகிறது என்று புளுகி, சாதாரண, நடுத்தர முதலீட்டாளர்களை முதலீடு செய்ய  வைத்துக் கொள்ளையிடலாம். மொத்தத்தில் பலதேசங்களை மொட்டையடிக்கலாம். பலதேசங்களை மிரட்டலாம், ஆட்டுவிக்கலாம், காரியம் சாதிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் இன்று வளர்ந்த, முன்னணி அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களும் செய்தி நிறுவனங்களும் கொள்ளை லாபத்தில் தான் இயங்குகின்றன. விளம்பரம் மற்றும் அரசின் சலுகைகள் மூலம் கோடி கோடியாய் லாபமீட்டுகின்றன. பெருந்தொழில் அதிபர்களின் தரகர்களாகச் செயல்பட்டு டாலர்களில் குளிக்கின்றன. மேலும் தங்களது உற்பத்திப் பொருட்களையும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களையும் ‘உன்னதமாகச்’ சித்தரித்து மக்கள் மூளையில் திணித்து அதன் மூலமும் பில்லியன் கணக்கில் அறுவடை செய்கின்றன.
2. கருத்தியல் பயங்கரவாதம். உண்மைகளை மறைப்பது, திரிப்பது, அவதூறுகளையும் பீதியையும் பரப்புவது. அதாவது கடந்த கால உண்மைகளை மறைத்து, மேற்குலக அரசுகள் நிகழ்த்திய / நிகழ்த்தி வருகிற வன்முறைகளை மறைத்து, அரசு வன்முறைகளுக்கெதிரான போராட்டங்களையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் தீவிரவாதமாகச் சித்தரித்து உலகமக்கள் மூளையில் திணிப்பது., சுருங்கச் சொன்னால், அவர்கள் தீர்மானிக்கும் செய்திகளையே படிப்பதும், பேசுவதும், சிந்திப்பதுமாக உலக மக்கள் இருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவது.
இதை எளிமையாகக் கூற வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அதாவது இன்று உலக அளவில் வளர்ந்த முன்னணி ஊடகங்கள் எவற்றைச் செய்திகளாக வெளியிடுகின்றனவோ அவற்றைத்தான் நடுத்தர, சிற்றிதழ்களும் செய்திகளாக வெளியிடுகின்றன. அவற்றைத்தான் விவாதத்திற்கு உட்படுகின்றன. இந்த வட்டத்திற்கு அப்பாற்பட்டு இவர்களால் எதுவுமே செய்து விட முடியாது. ஒருவேளை வேறு ஒரு வட்டத்தை உருவாக்க முயற்சித்தால் அது காற்றில் கரைந்த முயற்சியாகவே அமையும். அந்த அளவுக்கு யூதர்கள் ஊடகப் பலம் பெற்றுள்ளனர். சுருங்கச் சொன்னால் யூதர்கள் தீர்மானித்திருக்கும் வட்டத்திற்குள்ளேதான் உலக மக்களின் சிந்தனை, படிப்பு, முயற்சி எல்லாம் இருக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதுதான் உலகளாவிய கருத்தியல் பயங்கரவாதம்.
3. யூதர்களே கடவுளால் தேர்வு செய்யப்பட்ட இனம். அவர்களே இவ்வுலகை மேலாதிக்கம் செய்ய உரிமையுள்ளவர்கள் என்கிற கருத்தாக்கத்தை ஊடகங்கள் மூலமாக கொஞ்சம் கொஞ்சமாகப் பரப்புவது. இதை மேற்குலகில் பல ஊடங்களின் மூலம் பகிரங்கமா
கவே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். மேற்படி கருத்தாக்கத்தை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநாடுகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் அமெரிக்கா, ஐரோப்பிய முன்னாள் / இன்னாள் அதிபர்கள், செயலர்கள் என்று பலரும் கலந்து கொண்டுதான் இருக்கிறார்கள். மொத்தத்தில் தங்களது பாஸிசக் கோட்பாட்டை தங்களின் செல்வாக்குமிகுந்த ஊடகங்களின் வழியாகப் பரப்பிவருகிறார்கள்.
குறிப்பாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தின் பல கருத்தாக்கங்களையும் இழிவாகவும் பயங்கரமாகவும் சித்தரித்துப் பரப்பி வருகிறார்கள். மேலும் நம் நாட்டில் உள்ள அச்சு ஊடகம் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் யூதர்களின் பங்கு ஏராளம் உள்ளன. யூதர்களோடு மிக நெருக்கமாக உறவு வைத்துள்ள ஆரிய சங்பரிவார் கூட்டம் அத்தகைய ஊடகங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றன. உலக அளவிலும் இந்திய அளவிலும் முஸ்லீம் வெறுப்பு என்ற அவர்களின் ஜீவநாதத்தை இடைவிடாது ஒலித்து வருகின்றனர்.
இவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்து விழிப்புடன் செயலாற்ற வேண்டிய முஸ்லிம்களோ தாங்கள் ஒரே உம்மா என்கிற ஓருடல் என்பதையும் உலகுக்கு நேர்வழிகாட்ட வேண்டிய பொறுப்பை தங்களுக்கு அல்லாஹ் (சுபு) கடமையாகத் தந்திருக்கிறான் என்பதையும் மறந்து அந்நியச் சித்தாந்த நோய் பிடித்துத் திரிகிறார்கள். நோய் தீர பிரார்த்திப்பது மட்டுமல்ல, முயற்சிப்பதும் முக்கியம். முயற்சிப்போமா?
என்ன செய்வது?
உலக அளவிலும் இந்திய அளவிலும் வலிமையாக செய்யப்படுகின்ற திரிபுவாதத்திற்கு சரியான, முறையான பதிலடி கொடுக்க வேண்டும். உலக மக்களில் ஒன்ற¬க் கோடி யூதர்களால் செய்யப்படுகின்ற வேலைகளினால் 180 கோடி முஸ்லிம்கள் கடும் சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகின்றனர்.
எதிர்கால இளம் தலைமுறைக்கு இந்த ஆபத்துக்களைச் சொல்லி எச்சரிக்கை செய்து வளர்க்க வேண்டும். அருட்கொடையாக, அமானிதமாக நம்மிடம் வழங்கப்பட்டுள்ள தீனுல் இஸ்லாம் மார்க்கத்தை உறுதியாகப் பற்றிப்
பிடிக்கும் சமுதாயமாக எதிர்கால முஸ்லிம் சமூகம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
உலக வரலாறு, உலக நிகழ்வுகள் குறித்து தெளிவான ஞானம் மற்றும் இவற்றில் ஒரு முஸ்லிம்க்கு உள்ள பொறுப்புகள் குறித்த தெளிவான பார்வை ஆகியவை எல்லா முஸ்லிம்களிடமும் உருவாக வேண்டும்.
தலைமை தாங்குவோரிடத்தில் இஸ்லாமிய எதிரிகளுக்குக் களம் எது என்பதை தீர்க்கமாக அறிந்து, உணர்ந்து செயலாற்றும் ஆற்றல் வேண்டும். ஆபத்துகள் எது என்பதை முஸ்லிம் சமுதாயத்திற்கு உணர்த்தி, அவற்றிலிருந்து மீண்டிட வழி என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
அடுத்த தலைமுறை எதிர்காலத்திற்கான தங்களது தொழில் துறைகளை தேர்வு செய்யும் போது எது எந்த துறையாக இருந்தாலும் அவர்கள் இதழியல் மற்றும் ஊடகம் அவற்றில் நுழைந்து முத்திரையைப் பதிக்கக்கூடிய ஆற்றலுடன் உருவாக்கப்பட வேண்டும்.
மக்களே, மார்க்கத்தில் பயிற்சி பெறுங்கள்!
உலகின் நிகழ்வுகளை ஆழமாகப் புரிந்து கொள்ளுங்கள்!
உலகின் பிரச்சனைகளுக்கு இஸ்லாம் ஒன்றே தீர்வு என்பதை வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் காட்டுங்கள்!
வெற்றி இஸ்லாம் ஒன்றுக்கே!
- அலாவுத்தீன் இம்தாதி
———————————————————————————————————–
இணையதளங்களில் யூதர்களின் ஆதிக்கம்…
இவை தவிர myspace – basynet – wikipedia – woopidoo முதலானவையும் யூதர்களுக்குச் சொந்தமே.

உலகச் செய்தி நிறுவனங்களில் யூதர்களின் ஆதிக்கம்

யூதர்களுக்குச் சொந்தமாக உலகெங்கும் பல செய்தி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட யூதச் செய்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து முன்னணி நிறுவனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க, அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களாகும். ஏனெனில் இந்நிறுவனங்கள் உலகெங்கும் பல கிளைகளை பல்வேறு பெயர்களைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்களும் இவற்றின் பல்லாயிரக் கணக்கான கிளைகளும் ஏராளமான தலைப்புகளில் எண்ணற்ற நூல்கள், மாத, வார, நாளிதழ்கள் ஆகியவற்றை வெளியிடுகின்றன. மேலும் மின்னணு ஊடகங்களையும் நடத்தி வருகின்றன.
1.    டைம் பாக்ஸ் இது வார்னர் பிரதர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தின் பெரும் பங்குகளை வைத்திருப்பதுடன் உலகின் மிகப் பெரும் செய்தி நிறுவனமாகத் திகழ்கிறது. இதன் தலைமைப் பீடத்தில் ‘ஜெரால்டுலைபன்’ என்ற யூதர் கோலோச்சுகிறார்.
2. ராண்டம் – செய்தி நிறுவனம்
3.    ஷைமன் அண்ட் ஷோஸ்டர் – செய்தி நிறுவனம்
4.    ரிச்சர்டு பர்ன்ஸ்டைன் என்ற யூதரின் தலைமையிலான வெஸ்டர்ன் நிறுவனம்.
5.    ரூபர்ட்முர்டோக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் செய்தி நிறுவனம்.
உலகெங்கும் செல்வாக்குச் செலுத்தி வரும் ’ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனமும் யூதர்களால் உருவாக்கப்பட்டு யூதர்களால் நிருவகிக்கப்படுபவையே. இதன் தலைமையகம் பிரிட்டனில் இருக்கிறது.
சினிமாத்துறையில் யூதர்களின் ஆதிக்கம்
1.    ஹாலிவுட்டின் மிகப் பெரிய சினிமா நிறுவனங்களில் ஒன்றான பாரமவுண்ட் நிறுவனம் லூயிஸ் மேயர் என்ற யூதருக்குச் சொந்தம்.
2.    மெட்ரோ கோல்டன் என்ற நிறுவனத்தின் மூன்றில் இரண்டு பங்குகள் இரண்டு யூதர்களுக்குச் சொந்தம்.
3.    மிகப்பிரபலமான பாக்ஸ் நிறுவனம் வில்லியம் பாக்ஸ் என்ற யூதருக்குச் சொந்தம்.
4.    வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வார்னர் என்ற யூதரால் உருவாக்கப்பட்டு இன்று அவரது சகோதரிக்குச் சொந்தமாக இருக்கிறது.
5.    யுனிவர்சல் என்ற நிறுவனம் கார்ல் லைமீ என்ற யூதருக்குச் சொந்தம்.
இதுபோலவே பிரிட்டனில் 280க்கும் மேற்பட்ட மிகப்பெரிய சினிமா நிறுவனங்களை யூதர்கள் சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர்.
தொலைத்தொடர்பு நிறுவனங்களில்…
யூதர்கள் உலகெங்கும் ஏராளமான தொலைத்தொடர்பு நிறுவனங்களைச் சொந்தமாக வைத்திருக்கின்றனர். தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்றால் டெலிபோன், செல்போன் நிறுவனங்கள் என்று பலர் சுருக்கமாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால் யூதர்கள் கைவசம் வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்பது டெலிபோன், செல்போன், இணையம், வானொலி, தொலைக்காட்சி என்று பல ஊடகங்களை அதுவும் ஆயிரக்கணக்கில் இயக்கும் வசதிகளை உள்ளடக்கியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெலைத் தொடர்பு நிறுவனங்கள் பலவற்றை யூதர்கள் உலகெங்கும் சொந்தமாக வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும் முப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கின்றனர். இந்நிறுவனங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளை இயக்கிக் கொண்டிருக்கின்றன.
1. ABC மற்றும் NBC குழுமம்  2. MTV குழுமம்  3. பாக்ஸ் குழுமம்
இவையல்லாமல் நியூ ஹவுஸ் நிறுவனம் மட்டும் 24 தொலைத்தொடர்பு நிறுவனங்களை வைத்திருக்கிறது. அந்நிறுவனத்தின் மூலம் அமெரிக்காவில் மட்டும் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறது.
பிரிட்டனில் ATV குழுமம் என்கிற யூத தொலைத்தொடர்பு நிறுவனம் ஏராளமான தொலைக்காட்சி அலைவரிசைகளை நடத்திக் கொண்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் கோசின்ஸ்கி என்ற யூதர் NTV குழுமம் என்ற பெயரில் பல தொலைக்காட்சிகளை நடத்தி வருகிறார். இதுபோலவே பிரேசில், உருகுவே, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பொலிவியா ஜெர்மனி, இத்தாலிய போன்ற தேசங்களில் யூதர்களே 90 விழுக்காடு ஊடகங்களில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.
நன்றி;http://www.samooganeethi.org/

போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) கலாச்சாரம்.

கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.

பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).

கடந்த டிசம்பர் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய மகன்கள் "பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்" என்று அடம் பிடித்தனர். நான், "இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்" என்று சொன்னேன்.

நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த என்னுடைய மகன்கள், "அங்கே பாருஙகள். முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள். "ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்" என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.

உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.

உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் "PIZZA HUT ஹலாலா?" என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு "ஹலால்தான்" என்றார்கள். ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே.. என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, "அதனால் ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள்.

மற்ற சிலர், "நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்" என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் "PORK என்றால் பன்றியின் இறைச்சி" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.

இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம். "இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்" என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.

LARD எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களுக்கு பிள்ளைகள், தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம் "In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG)" என்று தெரியப்படுத்துங்கள்.

இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
1. http://www.pizzahut.co.in/cheesybites_menu.php OR http://www.pizzahut.co.in/
2. http://www.dominos.co.in/nonvegpizzas.jsp
and Click CHEESE AND PEPPERONI menu   நன்றி;பாலைவனத்தூது.
அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்
 
"எங்கள் இறைவா!  என்னையும்,  என் பெற்றோர்களையும்,  முஃமின்களையும்
கேள்வி கணக்கு கேட்கும் (மறுமை)நாளில் மன்னிப்பாயாக" அல் குர்ஆன் 14:41.
 
 
 
எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு
செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால்
தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை
நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது
கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது
(நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" (அல்
குர்ஆன்-2:286)
 
 
 
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின்
வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

நமக்கென்று ஒரு நாளிதழ்: பிரச்சினைகளும் சவால்களும்

பாலைவனத் தூது நடத்திய கட்டுரைப் போட்டியில்முதல் பரிசு பெற்ற கட்டுரை
அறிமுகம்
ஊடகம் என்பதை தரவுகள், தகவல்கள், செய்திகள் என்பவற்றைச் சேகரித்து வைத்துப் பரவலாக வழங்கும் மிகச் சக்தி வாய்ந்த தொடர்பாடல் சாதனம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம்.

இது அச்சு ஊடகம், இலத்திரனியல் ஊடகம் என்று வகைப்படுத்தப்படுகின்றது. இவற்றுள் சாசனம், புத்தகம், பத்திரிகை, சஞ்சிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையம் முதலான அனைத்தும் உள்ளடங்குகின்றன. இன்றைய அறிவியல் யுகத்திலே ஊடகமொன்று இல்லாத சமுதாயம் உயிரில்லாத உடம்புக்கு ஒப்பானதாகும். காரணம், ஒரு சமுதாயத்தின் இருப்பையும் (existence) உயிர்ப்பையும் (dynamism) நிர்ணயிப்பதில் ஊடகத்தின் பங்கு மகத்தானதாகும். எந்த ஒரு சமுதாயமும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் தன்னுடைய தனித்துவ அடையாளங்களைப் (identity) பேணிக்கொள்ளவும் மட்டுமின்றி, தனக்கெதிராகக் கட்டமைக்கப்படும் போலிப் புனைவுகளையும் திட்டமிட்ட நச்சுப் பிரசாரங்களையும் எதிர்கொண்டு அவற்றை முறியடிக்கவும் ஊடகமே மிகச் சக்தி வாய்ந்த ஆயுதமாகப் பயன்பட முடியும். எனவேதான், இன்றைய உலகில் பலம் வாய்ந்த அதிகாரச் சக்திகளுக்கு இடையிலான அல்லது வேறுபட்ட சித்தாந்தங்கள், மதங்களுக்கிடையிலான போர், "ஊடகப் போர்" (media war) என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.

இஸ்லாம், முஸ்லிம் என்ற இரண்டு சொல்லாடல்கள் (discourse) குறித்த பல்வேறு புனைவுகள், சர்ச்சைகள், ஐயங்கள் காலங்காலமாக வெளிவந்தவண்ணமே இருந்துள்ளன. குறிப்பாக, செப்டம்பர் 11-ல் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகமான பெண்டகனும் தாக்குதலுக்கு உள்ளானதையடுத்து இந்நிலைமை உக்கிரமடைந்ததை நாமறிவோம். அன்றிலிருந்து இன்று வரை முஸ்லிம்களின் உண்மையான அடையாளம் திட்டமிட்ட அடிப்படையில் உருக்குலைக்கப்பட்டும், இஸ்லாமும் அதன் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களும் அவமானப்படுத்தப்பட்டும் வருவதை நாம் கண்டும் கேட்டும் வருகிறோம். இத்தகைய இழி செயலில் மேலைத்தேய ஊடகங்களும் கீழைத்தேய ஊடகங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. ஸியோனிஸ, கிறிஸ்தவ, ஹிந்துத்துவ சக்திகள் தமது இஸ்லாமிய எதிர்ப்பை, முஸ்லிம் எதிர்ப்பை மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதற்கு ஊடகத்தையே பெரிதும் பயன்படுத்தி வருகின்றன.

மேலைத்தேய உலகைப் பொறுத்தவரையில் முதலாவது செய்திப் பத்திரிகை 1605ம் ஆண்டிலும், முதலாவது வானொலிச் சேவை 1920ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டதாக விக்கிபீடியா பதிவு செய்துள்ளது. எனின், முஸ்லிம் உலகின் நிலையென்ன? உலகின் எந்த மூலையில் எந்த ஒரு முஸ்லிம் நாட்டுக்கோ முஸ்லிம்களுக்கோ எத்தகைய கொடூரமான அநியாயங்கள் நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்க நமக்கென்று ஓர் ஊடகம் இருக்கவில்லை. பி.பி.சி. (B.B.C.), சி.என்.என். (C.N.N.), ஏ.பி. (A.P.), ராய்ட்டர்ஸ் (Reuters) முதலான பக்கச் சார்பு ஊடகங்களினால் கட்டமைக்கப்படும் உண்மைக்குப் புறம்பான செய்திகளே உலகமெங்கும் பரவலாகச் சென்றடைந்தன. உலகெங்கிலும் முஸ்லிம்களுக்கெதிராக சொல்லொணாத வன்கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையிலும் கேட்பார் பார்ப்பாரற்ற அனாதைச் சமூகமாக, அகதிச் சமூகமாக நம்முடைய சமுதாயம் நாதியற்றுத் தவிக்கும் நிலையே காணப்பட்டது.

இந்நிலையில், பல்வேறுபட்ட சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் Al Jazeera (அல்ஜஸீரா) அரபுத் தொலைக்காட்சிச் சேவை 1996ம் ஆண்டிலும் ஆங்கில சேவை 2006ம் ஆண்டிலும், பிரஸ் தொலைக்காட்சி (Press TV) சேவை 2007ம் ஆண்டிலும் ஆரம்பிக்கப்பட்டு இன்று விதந்துரைக்கத்தக்க முஸ்லிம் ஊடகங்களாகத் திகழ்கின்றன.

இத்தகைய ஒரு பின்புலத்தில் தமிழ்நாட்டில் 13.7 சதவீதமும், இலங்கையில் 7.6 சதவீதமும் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கென்று தனியான முழுநேர செய்தி ஊடகமொன்றின் தேவை பரவலாக உணரப்பட்டு வருவதையும் அதற்கான முயற்சிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேற்கொள்ளப்பட்டு வருவதையும் நாம் அறிவோம். என்றபோதிலும் ஒருங்கிணைக்கப்பட்டதும், பரவலாக மக்களைச் சென்றடையக்கூடிய சக்திவாய்ந்ததுமான தமிழ் முஸ்லிம் ஊடகமொன்றை உருவாக்கி வளர்க்கும் நம்முடைய நெடுங்காலக் கனவு இன்னும் முழுமை பெறவில்லை என்றே கூற வேண்டும். அந்தக் கனவை நனவாக்கும் முதற்கட்ட முயற்சியென்ற வகையில் "நமக்கென்று ஒரு நாளிதழ்" குறித்து சிந்திப்பதும் திட்டமிட்டு செயற்படுவதும் அதனை நோக்கி இடையறாது பாடுபடுவதும் தமிழ் பேசும் முஸ்லிம்களாகிய நமது இன்றியமையாத சமூகப் பணியாகும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஏனெனில், அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் ஜிஹாதுக்கு அல்லாஹ்விடம் மிக உயர்ந்த நற்கூலிகள் உள்ளன. அந்த அடிப்படையில், உலகளாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சதித்திட்டங்களை முறியடிப்பதற்குரிய மிகப் பிரதான ஆயுதமான ஊடகமொன்றைக் கட்டமைத்து அதனை ஸ்திரமடையச் செய்வதும் ஜிஹாதின் ஒரு பகுதியே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் நாம் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில்,

"அவர்(நிராகரிப்பாளர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும் உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் (அதற்கான நற்கூலி) உங்களுக்குப் பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது." (8:60)
என்ற அல்குர்ஆன் வசனத்தின் மூலம், இஸ்லாத்தின் எதிரிகளை எதிர்கொள்ளத்தக்க எல்லா வகையான போர் சாதனங்களையும் சித்தப்படுத்தி தயாராக வைக்குமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். இந்தத் திருமறை வசனம் இன்றைய ஊடகப் போருக்கும் பொருந்தி வரும் என்பதில் ஐயமில்லை. இந்திய முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கு மலையாளத்தில் தேஜஸ், மாத்யமம் எனும் நாளிதழ்களும் தமிழில் மணிச்சுடர் எனும் நாளிதழும் முக்கியமானவை. அவ்வாறே இலங்கையைப் பொறுத்தவரையில், நவமணி வாரமிருமுறை இதழாக வெளிவந்து அண்மைக்காலமாக வாரமொருமுறை மட்டும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இவை தவிர மறுமலர்ச்சி வாரப் பத்திரிகை, எங்கள் தேசம் மாதமிருமுறைப் பத்திரிகை என்பனவும் குறிப்பிடத்தக்கவையே.

1. பிரச்சினைகளும் சவால்களும்எந்தவொரு முயற்சியிலும் வெற்றி காண வேண்டுமானால், அது தொடர்பான பிரச்சினைகள், சவால்களை இனங்காண்பதோடு, அவற்றைத் தீர்ப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கண்டறிவதும், தக்க அணுகுமுறைகளைக் கையாண்டு செயற்படுத்துவதும் முக்கியமானதாகும். அந்த வகையில், நமக்கான ஊடக உருவாக்கத்தில் உள்ள பிரச்சினைகள், சவால்கள் குறித்து நோக்குவது பொருத்தமானதே!

1.1 நமக்கான ஊடகம் எனும் எண்ணக்கருவின் தத்துவார்த்தப் பின்புலத்தை (The Background of Conceptual Criteria) வரையறுப்பதிலுள்ள சிக்கல்கள்

நம்மவர் மத்தியில் நமக்கான ஓர் ஊடகம் இருக்கவேண்டியதன் இன்றியமையாமை குறித்த விழிப்புணர்வு தோன்றியிருப்பது ஓர் ஆரோக்கியமான அம்சமே. எனினும், அதனைச் சாத்தியமாக்குவதற்கான முயற்சிகள் காலத்துக்குக் காலம் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பல்வேறு காரணங்களால் அவை இடையிலேயே நின்று போயின. இன்னொரு வகையில் சொல்வதானால், ஒருங்கிணைக்கப்பட்ட சக்தி வாய்ந்த செய்தி ஊடகம் என்றளவில் முன்னோடி முயற்சியாக ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சி இன்னும் முழுமையடையாமல் இருக்கின்றது. இதற்கான மிகப் பிரதானமான காரணங்களாக நாம் பல்வேறு அம்சங்களை அடையாளப்படுத்தலாம். என்றபோதிலும், இவ்விடயம் தொடர்பாக நாம் மிக முக்கியமானதோர் அம்சம் குறித்து நமது கவனத்தைத் திருப்புவது இன்றியமையாததாகின்றது. அதாவது, நமக்கான ஊடகம் ஒன்றை வரையறுப்பது குறித்து சில அடிப்படையான கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியுள்ளது. அவை வருமாறு:

அ) நமக்கான ஓர் ஊடகம் என்பதன் உட்கருத்து என்ன?

ஆ) அந்த ஊடகத்தின் பேசுபொருள் வெறுமனே முஸ்லிம்களின் சமுதாயப் பிரச்சினைகளை மட்டும் குவிமையப் (focus)படுத்தியதா?

இ) அதன் இலக்கு வாசகர்கள் யாவர்?

நமக்கான ஊடகம் எனும்போது அது, நம்முடைய பிரச்சினைகளை நாம் பேசுவதற்கானதா அல்லது நம்மிடமிருந்து மனிதகுல மேம்பாடு கருதி நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்தக் கூடியதும், பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் குரல் கொடுப்பதாகவும், நம்முடைய சமுதாயம் பற்றிய விசாலமான பார்வையை சகோதர சமுதாயத்தவரிடம் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் அமையத்தக்க ஒரு பொது ஊடகமா என்பதை வரையறுப்பதில் முதலாவது கேள்வி முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், இதற்கான விடையை வரையறுக்கும் போது ஏனைய இரண்டு கேள்விகளுக்கும் இயல்பாகவே பதில் கிடைத்து விடுகின்றது.

ஏனெனில், முதலாவது வகைமையைப் (category) பொறுத்தவரையில், இன்று நம்மிடையே உள்ள அனேகமான மாத, வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் இவ்வகையைச் சேர்ந்தவையே. இவை முஸ்லிம் உலகின் பொதுப் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதோடு, சன்மார்க்கப் போதனைகள், உள்ளக சமூக-கலாசார சீராக்கம் (inter socio-cultural reform) பற்றிய விழிப்புணர்வு ஊட்டுவதாகவுமே அமைந்துள்ளன. எனவே, தவிர்க்க முடியாதவாறு முஸ்லிம்களே இவற்றின் இலக்கு வாசகர்களாக உள்ளனர்.

இந்நிலையில், நம்முடைய பிரச்சினைகளை நமக்குள் நாம் பேசிக்கொள்வது, விசனப்படுவது என்ற நிலையிலிருந்து மாறி, அடுத்தகட்ட நகர்வாக, நம்முடைய பிரச்சினைகளை மற்றவர்கள் மத்தியிலும் கொண்டு சென்று, பொதுஜன அபிப்பிராயத்தை நம் பக்கம் வெற்றிகரமாகத் திருப்புவது, தாக்குதிறன் கூடியதாக (effectively) நம்முடைய நியாயமான கோரிக்கைகளை, போராட்டங்களை முன்னெடுப்பது, சமூக-தேசிய மேம்பாடு தொடர்பான நம்முடைய காத்திரமான பங்களிப்பை வழங்குவது முதலான அம்சங்களை உள்வாங்கியதாக நம்முடைய ஊடகம் அமைவதே மிகப் பொருத்தமானது. எனவே, நம்மை நாமே தற்காத்துக் கொள்வதற்காகவும், நமக்கெதிரான சவால்களை முறியடிப்பதற்காகவும் மட்டுமின்றி, நீதியை நிலைநிறுத்த வேண்டிய நடுநிலைச் சமுதாயத்துக்குரிய (உம்மத்தன் வஸத்) பணியைத் திறம்படச் செய்வதற்காகவும் அத்தகைய ஒரு பொது ஊடகத்தை நோக்கி நகர்வது காலத்தின் தேவையாக உள்ளது.

2. ஏனைய சவால்கள்2.1 நிதிப் பிரச்சினை (Financial Problem)
ஒருசில தன்னார்வமுள்ளோரால் அல்லது துடிப்புமிக்கதோர் இளைஞர் குழுவினரால் சமுதாயத்துக்காகப் பணியாற்றும் தீராத தாகத்தோடு ஆரம்பிக்கப்படும் இதழியல் முயற்சிகளைப் பொறுத்தளவில் அவை பாரியளவு முதலீடுகளுடன் ஆரம்பிக்கப்படுவதில்லை. பத்திரிகையின் விற்பனை சூடு பிடிக்கும் வரையும் பிரசுரத்துக்காகச் செலவிட்ட பணத்தை விற்பனை வருமானம் மூலம் மீளப் பெற முடியாத நிலையிலும் தளராது நட்டத்துடனேனும் தொடர்ச்சியாகப் பத்திரிகையை வெளியிடுமளவுக்குத் தேவையான நிதி இன்மை அனேகமான பத்திரிகைகள் இடையிலேயே நின்று போவதற்கான பிரதான காரணமாக உள்ளது. புதிதாக அறிமுகமான பத்திரிகை என்ற நிலையில் போதிய விளம்பரங்கள் கிடைக்காமை, விற்பனை முகவர்களிடமிருந்து முறையாகப் பணம் வசூலிப்பதிலுள்ள இடர்பாடுகள், நம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியில் காசு கொடுத்துப் பத்திரிகை வாங்கிப் படிக்கும் பழக்கம் இன்மையால் விற்பனை வருமானத்தை மட்டும் நம்பியிருக்க முடியாத நிலைமை என்பன இந்த நிதிப் பிரச்சினையை பூதாகரமாக வளர்ப்பதில் பெரும் பங்காற்றுகின்றன என்றால் மிகையில்லை. இத்தனையையும் தாண்டி குறித்த பத்திரிகையை நடப்பு நட்டத்தைத் தாங்கிக்கொண்டே தொடர்ச்சியாக வெளியிடக்கூடிய நிலை வெகு அரிதானதாகும்.

2.2 வளப் பற்றாக்குறை (Resource Constraint)
இது பன்முகப்பட்டதாகும். அதாவது, வளம் எனும்போது அதற்குள் தொழிநுட்பம் மற்றும் உடைமைகள் சார்ந்தவை, மனித அறிவு மற்றும் உழைப்பு சார்ந்தவை என்று பல வகைப்பட்ட வளங்களிலுள்ள பற்றாக்குறை நிலைமைகளும் உள்ளடங்குகின்றன. அந்த வகையில் தேர்ச்சி பெற்ற செய்தியாளர்கள், பத்திரிகையின் வடிவமைப்பு முதலான தொழினுட்பம் சார்ந்த துறைசார் நிபுணர்கள், அச்சக வசதி, போதிய ஊழியர் படை, பரவலான விநியோகத்துக்குத் தேவையான வாகன வசதி, நாடெங்கிலும் நேர்மையான முகவர்கள் அல்லது விநியோகஸ்தர்கள், விளம்பரதாரர்கள் என்று பல்வேறுபட்ட அடிப்படை அம்சங்கள் இந்த வளப் பற்றாக்குறை என்பதோடு தொடர்பு படுகின்றன. இவை அனைத்தும் சரிவர அமைதல் என்பது மிகச் சிக்கலான ஒன்றாகும் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

2.3 நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் (Administrative Issues)
நாம் மேலே குறிப்பிட்டுள்ள முதலிரண்டு பிரச்சினைகளுக்கு சற்றும் முக்கியத்துவம் குறையாத ஓர் அம்சமாக முகாமைத்துவம் சார்ந்த பிரச்சினைகள் திகழ்கின்றன. ஏனைய துறைகளைப் போலவே ஒரு பத்திரிகையைப் பொறுத்தவரையிலும் ஆரம்பத்திலேயே சரியானதும் நுணுக்கமானதுமான திட்டமிடல் இன்றியமையாததாகும். அந்த வகையில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பதெனில், பத்திரிகையின் பிரதான கொள்கையை வரையறுத்தல், இலக்கு வாசகர் வட்டத்தை நிர்ணயித்து அதற்கேற்ப பத்திரிகையை வடிவமைத்தல், பத்திரிகையை இலாபத்தை எதிர்பார்க்காமலும் நட்டத்தை எதிர்கொண்டவாறும் தொடர்ந்து வெளிக்கொண்டு வருவதற்கு எந்தளவு மூலதனம் தேவை, ஊழியர் படை மற்றும் தொழிநுட்பம் சார்ந்த அம்சங்களை ஒருங்கிணைப்பது எப்படி முதலான தீர்மானங்கள் மிகத் துல்லியமாக அமைதல் இன்றியமையாததாகும். இதற்குக் கருத்தொருமித்த நிர்வாகக் குழுவொன்று இருப்பது கட்டாயமானதாகும். அதாவது, மிகச் சிறப்பானதொரு நிர்வாகக் குழு இல்லாத பட்சத்தில் வெற்றிகரமானதொரு பத்திரிகையை வடிவமைத்தல், இருக்கின்ற நிதியை முறையாகக் கையாளுதல், போதியளவு நிதியைப் பெருக்கிக் கொள்ளுதல், விற்பனை சார்ந்த பிரச்சினைகளைத் திறம்படக் கையாளுதல் முதலான இன்னோரன்ன விடயங்கள் தொடர்பில் உரிய தீர்மானங்களை எடுத்துச் செயற்படுத்துவது சாத்தியமற்றதாகும். எனவே, ஒரு பத்திரிகையின் வெற்றி என்பது சிறந்த நிர்வாகத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.

2.4 முஸ்லிம் மக்களிடம் போதிய வாசிப்புப் பழக்கமின்மைஇந்திய - இலங்கைவாழ் தமிழ் முஸ்லிம்களிடையே வாசிப்புப் பழக்கம் மிகக் குறைவாக உள்ளதென்பது கசப்பான உண்மையாகும். அதிலும், எத்தனையோ வீண் ஆடம்பரங்களுக்காகப் பணத்தை அள்ளியிறைக்கும் நம்மவர்கள் ஒரு சிறு தொகைப் பணத்தை புத்தகமொன்றை, பத்திரிகையொன்றை வாங்குவதற்காகச் செலவழிப்பதை பெரும் சுமையாகக் கருதும் மனப்பாங்கே மேலோங்கியுள்ளது எனலாம். தொலைக்காட்சி, இணையம் என்று இலத்திரனியல் ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட சூழ்நிலையில் நாளாந்த, வாராந்த பத்திரிகைகளைப் படிக்கும் பழக்கம் நம்மவர் மத்தியில் மிக அரிதாகி வருகின்றது. இந்நிலையில், நம்முடைய இலக்கு வாசகர்கள் யார் என்று தீர்மானித்து அதற்கேற்ப பத்திரிகையின் உள்ளடக்கத்தை வடிவமைக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஜனரஞ்சகமான பத்திரிகைக்குரிய அம்சங்களை இணைத்து சகல தரப்பினரையும் உள்வாங்குவதானது வெற்றி வாய்ந்த ஒரு நாளிதழுக்குரிய அடிப்படையாகத் திகழ்ந்தாலும், மிக இறுக்கமான மனப்போக்குடைய நம்முடைய உலமா பெருமக்களுக்கிடையில் காணப்படும் கருத்து முரண்பாடுகள், சர்ச்சைகள், மார்க்கம் சார்ந்த விடயங்களை ஒற்றைத் தன்மையோடு அணுகும் போக்கு என்பன மிகப் பெரும் தடைக்கற்களாக அமைந்துள்ளன எனலாம். உதாரணமாக, ஒரு பக்கக் கட்டுரை மூலம் விளக்கக்கூடிய ஓர் ஆழமான அரசியல் செய்தியை ஒரேயொரு அரசியல் கார்ட்டூன் மூலம் வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்ற நிலையில், உருவம் வரைவது கூடுமா கூடாதா என்ற சர்ச்சைக்குள்ளேயே தசாப்த காலமாய் அமிழ்ந்து கிடக்கும் அவல நிலை இன்னும் முற்றாக அகன்று விடவில்லை என்பதைக் குறிப்பிடலாம்.

3. சில தீர்வு முன்மொழிவுகள்
நாம் தொடர்ந்து பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றோம். அன்றாடம் எதிர்கொண்டு வருகின்ற சவால்களைப் பற்றி மணிக்கணக்காய் கலந்துரையாடுகின்றோம். நம்முடைய நிலைமை என்ன என்பதைத் தெளிவாக அறிவதற்கு அதெல்லாம் மிக அவசியம்தான் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாதுதான். என்றாலும், நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, அதாவது நாம் இதுவரை இனங்கண்டுள்ள பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டவாறு முழு முனைப்போடு நம்முடைய ஊடக இலக்கினை அடைவதற்கு என்னென்ன தயாரிப்புகளை செய்து வைத்துள்ளோம் என்ற கேள்வி மிக முக்கியமானதாகும். எனவே இனி நாம் வெற்றிகரமான ஒரு செயற்திட்டத்தை (Project) முன்னெடுப்பதற்கான தீர்வு வழிவகைகள் குறித்தும் சுருக்கமாக ஆராய்வது பொருத்தமானதே!

3.1 நிதியீட்டலும், நிதியைப் பெருக்குதலும்ஆழமறிந்து காலை வைத்தால் மூழ்கிச் சாகாமல் பிழைத்துக் கொள்ள முடியும் என்பது போல, அதிக மூலதனமொன்று தேவைப்படும் இந்த முயற்சியில் இறங்கும் நாம், அவசரப்பட்டு காரியமாற்றாது போதிய நிதியினைச் சேகரித்துக்கொள்வது மிக இன்றியமையாததாகும். இதற்கான முயற்சியில் ஒருசில வருடகாலமேனும் செலவிட்டு உரியளவு நிதியைச் சேகரிப்பதோடு, அதில் கணிசமானதொரு பகுதியை இலாபகரமான தொழிற்துறைகளில் முதலீடு செய்யவோ அல்லது நிரந்தர வருமானம் தரத்தக்க சொத்துக்களாக மாற்றவோ முனையலாம். இதனூடாகக் கையிருப்பில் போதிய நிதிவளத்துடன் நாளிதழ் முயற்சியில் இறங்கலாம். அது மட்டுமன்றி, பல்வேறு தொழிற்துறைகளில் முன்னணியிலுள்ள நம்முடைய வர்த்தகப் பெருமக்களை அணுகி, நம்முடைய பொதுநல நோக்கை விவரிப்பதன் மூலம் முன்கூட்டியே தொடர் விளம்பரங்களைப் பெறுவதற்கான கள வேலைகளில் ஈடுபடலாம். அவ்வாறே, சமூக நோக்குடைய இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் முதலானோரின் உதவியோடு நாட்டின் அனேக பகுதிகளில் தேவையான விற்பனை முகவர்களை ஏற்பாடு செய்துகொள்வதன் மூலமும், உரிய விளம்பரங்கள் பள்ளிவாசல் ஊடான பிரச்சாரம் என்பனவற்றின் மூலமும் தொய்வற்ற முறையில் பத்திரிகை விற்பனை நடைபெறுவதை முன்கூட்டியே உறுதிப்படுத்திக்கொள்ளும் முன்முயற்சிகளில் இறங்கலாம்.

3.2 வளவாளர்கள் (Resource Persons) உருவாக்கம்இந்தியாவின் தமிழ் பேசும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இன்று நம்மிடம் மணிச்சுடர் என்றொரு நாளிதழ் வெளிவந்துகொண்டு இருப்பது சற்றே ஆறுதல் தரும் விடயமே. எனின், இதனை இன்னும் சற்று ஜனரஞ்சகப்படுத்தி, ஒரு சக்தி வாய்ந்த செய்தி ஊடகமாக மெருகேற்றுவதற்கேற்ற முறையில் உரியவர்களிடம் கலந்தாலோசித்து உரிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் முனையலாம். அவ்வாறே, நமக்கான ஓர் அச்சுக்கூடமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளில் படிப்படியாக ஈடுபடலாம். ஊடக யுத்தத்தை எதிர்கொண்டு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நடுநிலைச் சமுதாயம் அல்லாஹ்வின் பெயரால் இந்த உலகில் நீதியையும் நியாயத்தையும் அமைதியையும் ஆனந்தத்தையும் நிலைநிறுத்தும் மகத்தான இப்பணியை நிறைவேற்றுமுகமாக ஸகாத் பணத்தில் ஃபீஸபீலில்லாஹ் என்ற அல்லாஹ்வின் பாதையில் முயற்சிப்போருக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்ளலாம்.

அது மட்டுமன்றி, நாளைய தலைமுறையினரில் நாம் கனவு காணும் ஒருங்கிணைந்ததும் சக்திவாய்ந்ததுமான தமிழ்-முஸ்லிம் நாளிதழுக்கான வளவாளர்களை உருவாக்கும் திட்டவரைபொன்றை ஏற்படுத்தலாம். இதை நிறைவேற்றுவது எப்படி?

நமக்கென்று ஒரு நாளிதழை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நம்முடைய நிர்வாகக் குழுவினர் தாம் திரட்டுகின்ற நிதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பின்வரும் நடவடிக்கைகளின் பொருட்டும் ஒதுக்கலாம்:

அ) இதழியல் பயிற்சிப் பாசறைகள், கருத்தரங்குகளை ஒழுங்கு செய்தல்இதழியல் (Journalism) துறையில் தமிழ் முஸ்லிம்கள் தேர்ச்சி பெறுதல் இன்றியமையாததாகும். எனவே, இதன் பொருட்டு இத்துறை சார்ந்த நிபுணர்களை உள்நாட்டிலிருந்தோ வெளிநாட்டிலிருந்தோ தருவித்து ஆர்வமும் திறமையும் உள்ள நம் இளைஞர் யுவதியருக்கான பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்தலாம். இம்முயற்சியில் சமீப காலமாக 'மனிதநீதிப் பாசறை'யினர் ஈடுபட்டு வருவதாக அறியக் கிடைத்தமை மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நம்முடைய இம்முயற்சியின்போது தகுதி வாய்ந்த பிற சமயம் சார்ந்தவர்களின் உதவியையும் அறிவுத் திறனையும் மூலவளமாகப் (resource) பயன்படுத்திக் கொள்ளவும் நாம் தயங்கக் கூடாது. உதாரணமாக, ஹிந்து சமயத்தவரான ஒரு பேராசிரியர் மாஸ் மீடியா துறையில் நிபுணத்துவம் வாய்ந்தவர் என்று இனம் கண்டால், அவரை அழைத்து வந்து, அவருக்குரிய வசதிகளைச் செய்து கொடுத்து நம்முடைய கருத்தரங்கில் உரையாற்றவோ பயிற்சியளிக்கவோ சந்தர்ப்பம் வழங்கத் தயங்கவே தேவையில்லை. யார் இடித்தாலும் நெல் அரிசியானால் சரிதான் என்ற நாட்டார் பழமொழிக்கேற்ப, எங்கே வளம் இருந்தாலும் நம்முடைய தூய நோக்கத்துக்காக அதனை உரிய முறையில் பெற்றுப் பயன்படுத்தத் தவறக் கூடாது.

ஆ).இதழியல்,வெப்டிசைனிங் முதலான துறைகளில் உயர்கல்விக்கு மாணவர்களை ஊக்குவித்தலும் பயிற்றுவித்தலும்

முதலில் இதழியல் முதலான துறைகளில் உயர்கல்வி வாய்ப்புள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிலையங்கள் பற்றிய தரவுகளைச் சேகரித்தல் இன்றியமையாததாகும். இதில், குறித்த பல்கலைக்கழகத்தின் தரம், பாடநெறிக்கான கால எல்லை, செலவு விபரம் முதலான அனைத்தும் அடங்கும்.

அவ்வாறே, ப்ளஸ் டூ படிப்பில் மிகத் திறமையான பெறுபேறுகளைப் பெற்ற நமது மாணவர்களில் மேற்படி துறைகளில் உயர்கல்வியைத் தொடர ஆர்வமுள்ளவர்களை கேள்விக்கொத்து, நேர்முகப் பரீட்சை என்பன மூலம் 20-100 பேர் வரை தெரிவு செய்து, அவர்களின் உயர்கல்விக்கான புலமைப் பரிசில் (scholarship) வழங்கும் திட்டமொன்றை அமுல் நடாத்தலாம். இதற்கு முன், குறித்த மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் தனித் தனியே சந்தித்து முழுமையான விளக்கமளிப்பதோடு, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் 2-4 வருட காலத்துக்கு குறித்த சம்பளத்தில் நம்முடைய பத்திரிகைக்காகப் பணியாற்றுவது கட்டாயமானது, தவறும் பட்சத்தில் புலமைப் பரிசிலாகப் பெற்ற மொத்தத் தொகையோடு கால விரயத்துக்கான நட்ட ஈட்டுத்தொகையையும் சேர்த்து திருப்பிச் செலுத்துதல் வேண்டும் என்ற சட்ட ரீதியான ஒப்பந்தத்துக்கு அவர்களை உடன்படச் செய்தல் வேண்டும். நமது பத்திரிகைக்காக அவர்கள் பணியாற்றும் காலத்திலேயே ஒருவரின் கீழ் பத்து தன்னார்வத் தொண்டர்களைக் குறித்த துறையில் பயிற்றுவிக்கும் பொறுப்பும் வழங்கப்படுதல் வேண்டும். இந்தச் சங்கிலித் தொடர் மூலம் நாம் நம்முடைய நாளிதழுக்கான தகுதியும் நிபுணத்துவமும் வாய்ந்த வளவாளர்களை உருவாக்கவும், இன்று இருப்பதை விட நாளை நம்முடைய நாளிதழ் மேலும் சக்தி வாய்ந்ததாக, மெருகு கூடியதாக, பரவலானதாக வளரவும் வழியமைக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது. அவ்வாறே, இன்றைய நாளிதழை நடத்தும் நாம் நாளை கண் மூடிவிட்டால் நாம் தொடக்கி வைத்த அந்த முயற்சி மண் மூடிப் போகாமல் முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒரு பரம்பரையையும் உருவாக்கியவர்களாவோம். இதன் மூலம் அல்லாஹ்விடத்தில் நிரந்தர நன்மைக்குப் பாத்தியதை பெற்றவர்களாகவும் நாம் மாறிவிடுகின்றோம் அல்லவா?

இ) முஸ்லிம் ஊடகவியலாளரை ஒருங்கிணைத்தல்ஊடகத்துறையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் ஊடகவியலாளர்களை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பின் கீழ் இயங்கச் செய்யும் முயற்சியும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். இலங்கையில் உள்ள "முஸ்லிம் மீடியா ஃபோரம்" (Muslim Media Forum) இத்தகைய முயற்சியின் விளைவால் தோற்றுவிக்கப்பட்டதே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்தகைய அமைப்பினூடே ஊடகவியலாளரின் நலன்கள், உரிமைகள் பேணப்படுவது, அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடுவது என்பன தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், பரஸ்பரம் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
முடிவுரைஅற்பமான விடயங்களைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இடைவிடாத சர்ச்சைகளுக்குள்ளேயே அமிழ்ந்து போய் நூற்றாண்டு கால பின்னடைவுக்குள் சிக்கித் தவிக்கும் பரிதாபகரமான நிலையில் ஆழ்ந்திருக்கும், தனக்குரிய சுய அடையாளத்தையே தொலைத்துவிட்டு நிற்கும் நம்முடைய சமுதாயம் வீறு கொண்டு எழுந்து மாண்டு போன சரித்திரக் கீர்த்தியை மீண்டும் நிலைநிறுத்துவதற்கு முதற்படியாக நமக்கென்று ஒரு சக்தி வாய்ந்த நாளிதழ் என்று தொடங்கி, வானொலி, தொலைக்காட்சி என்று படிப்படியாக முன்னேற வேண்டியுள்ளது.

செயற்கைக் கோள் எனும் செட்டலைட் வரை விண்ணோக்கி உயர்ந்து நம்முடைய முஸ்லிம் நாடுகளை அங்குலம் அங்குலமாக உளவு பார்க்கும் நவீன தொழினுட்பத்தின் உச்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள், இஸ்லாத்தின் எதிரிகள். ஆனால், உலகுக்கே வாழும் வழிமுறை வகுத்துக் கொடுத்த ஓர் ஒப்பற்ற மார்க்கத்துக்குச் சொந்தக்காரர்களாகிய நாமோ இன்னும் கார்ட்டூன் வரைவது கூடுமா, கூடாதா என்றும், புகைப்படம் எடுப்பது ஹலாலா, ஹராமா என்றும் வாத விவாதங்களில் மூழ்கிக் கிடக்கின்றோம். இத்தகைய கடும் இறுக்கமான ஒற்றைத் தன்மையோடு மட்டுமே சிந்திக்கத் தெரிந்த நம்முடைய இந்தத் தலைமுறை உலமா பெருமக்களை வெறுமனே பதிலுக்கு விமர்சித்துக் கொண்டிருப்பதைக் கைவிட்டு, புதுயுகம் படைக்கும் உத்வேகத்தோடும், அல்லாஹ்வின் மார்க்கத்தை அகிலத்தில் மேலோங்கச் செய்வதற்குரிய எல்லா வியூகங்களையும் அமைத்துப் போராடத்தக்க தணியாத தாகத்தோடும் விவேகமும் தியாக சிந்தையும் கடும் உழைப்பும் தளராத மனோதிடமும் கொண்ட நவயுக முஸ்லிம் இளைஞர் அணியொன்று முன்வரவேண்டும்.

அவர்கள் இன்று செய்கின்ற, செய்யப் போகின்ற இடையறாத இப்பணியின் பயனாய் நாளைய நம் சமுதாயமாவது புதிய விடியல் காணட்டும்! காண வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் நிறைவு செய்கின்றேன். அருளாளன் அல்லாஹ் நம் அனைவரின் எண்ணங்களையும் பணிகளையும் பொருந்திக்கொள்வானாக!

உசாத்துணைகள்:
Hugh Miles, (2005) Al-Jezeera: How Arab TV news Challenged the World, Brettenham House: London.
http://en.wikipedia.org/wiki/Mass_media
http://en.wikipedia.org/wiki/Mass_media
http://dharulathar.com/
http://tamilnirubar.org/
http://www.tamililquran.com/filesearch.asp?R1=V1&search_term=Fjpiu&B2=NjLf

அன்புடன்,இஸ்லாமிய சகோதரி,

லறீனா அப்துல் ஹக்.

அருகி வரும் அரிசி!

உலகின் பல கோடி மக்களின் அத்தியாவசிய உணவாக அரிசி திகழ்கிறது. இந்தியா முதல் வியட்னாம் வரை அரிசி ஒரு கலாச்சாரச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. அது நமது பாரம்பரியத்தைப் பறை சாற்றுகின்றது. நமது அடையாளத்தை வெளிப்படுத்துகிறது. ஆனால் இந்த அரிசியின் எதிர்காலம் பற்றி நமக்குக் கிடைக்கும் தகவல்கள் கவலையை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக, தென்னிந்தியாவின் முக்கிய உணவான அரிசிக்கு அங்கே பிரகாசமான எதிர்காலம் இல்லை.

பசுமைப் புரட்சி எல்லாம் பொய்த்துப்போன மழையாகிவிட்டது. கடந்த 2004ம் வருடம் கேரளாவில் கொச்சிக்கு அருகில் கும்பளங்கி என்ற இடத்தில் "அரிசியைப் பாதுகாப்போம்" என்ற முழக்கத்துடன் ஒரு பிரச்சாரம் நடைபெற்றது. அதன் விளைவாக "தென்னிந்திய அரிசிப் பேரவை" ஒன்று தொடங்கப்பட்டது.

இப்படி அமைப்பை உருவாக்கி அரிசியைக் காக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

காரணம் இருக்கிறது. கேரளாவில் முன்பு 8.5 லட்சம் ஹெக்டேர் நிலம் நெல் சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று அது வெறும் 2.2 லட்சம் ஹெக்டேராகக் குறுகிப் போனது. இதன் விளைவாக, 13.5 லட்சம் டன்னாக இருந்த நெல் உற்பத்தி இன்று 5.5 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. ஆனால் கேரளாவில் மட்டும் 40 லட்சம் டன் நெல் உற்பத்தித் தேவை இருக்கிறது. அதாவது, கேரளாவில் மட்டும் 85 சதவீதம் அரிசிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலை நீடித்தால் என்னவாகும் என்று யாருக்கும் சொல்லத் தெரியவில்லை. கடந்த 5000 வருடங்களுக்கும் மேலாக நாம் அரிசியை அத்தியாவசிய உணவாக உண்டு வருகின்றோம். ஆனால் கண்களுக்குக் குளிர்ச்சியாக 'பச்சைப் பசேல்' என்று நேற்று வரை நெல் வயல்களாக இருந்த நிலங்கள் இன்று மாயமாய் மறைந்து வருகின்றன.

ஏனெனில் பல நெல் வயல்கள் இன்று தோட்டங்களாக மாற்றப்படுகின்றன. நகரக் குடியிருப்புகளாக உரு மாறுகின்றன. தொழிற்சாலைகளாக மாறி புகைகளைக் கக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலை நீடித்தால் சுற்றுப்புறச் சூழல் மாசு பட்டு, அரிசி என்பது ஓர் அரிய பொருளாக மாறி விடும் அபாயம் உள்ளது. எனவே அருகி வரும் அரிசியை அழிவிலிருந்து காப்பாற்றுவோம்.
நன்றி;பாலைவனத்தூது

தூ‌க்கமு‌ம் க‌ண்களை‌த் தழுவ‌‌ட்டுமே

தூ‌க்க‌ம் எ‌ன்பது இரவானது‌ம் நமது உட‌ல் இளை‌ப்பாற‌க் ‌கிடை‌‌த்த ‌விஷய‌ம் எ‌ன்றுதா‌ன் பலரு‌ம் எ‌‌ண்‌ணி‌‌க் கொ‌ண்டி‌ரு‌க்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல், தூ‌க்க‌த்‌தி‌ற்கு எ‌த்தனையோ ‌விஷய‌ங்க‌ள் உ‌ள்ளன.

தூ‌க்க‌ம் எ‌ன்பது ஒ‌வ்வொருவரு‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் அமையு‌ம். ஒரு ‌சில‌ர் படு‌த்தது‌ம் தூ‌ங்‌கி ‌விடுவ‌ர். ‌சில‌ர் ம‌ணி 12ஐ தா‌ண்டினா‌ல் தா‌ன் தூ‌ங்கவே செ‌ல்வ‌ர். ‌சில‌ர் புர‌ண்டு புர‌ண்டு படு‌த்து தூ‌க்க‌த்துட‌ன் போராடி கடை‌சியாக தூ‌ங்குவ‌ர். தூ‌ங்குவ‌திலு‌ம் பல வகைக‌ள் உ‌ண்டு. ஆ‌ழ்‌ந்த உற‌க்க‌ம், லேசான உ‌ற‌க்க‌ம் போல பல உ‌ண்டு.

பொதுவாக கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌மே ‌சிற‌ந்த தூ‌க்கமாகு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாம‌ல் தூ‌ங்‌கி எழு‌ந்தா‌ல்தா‌ன் உ‌ண்மை‌யி‌ல் ஆ‌ழ்‌ந்த தூ‌க்க‌த்தை தூ‌ங்‌கி‌னீ‌ர்க‌ள் எ‌ன்று அ‌ர்‌த்த‌ப்படு‌ம். கனவுக‌ள் இ‌ல்லாத தூ‌க்க‌த்தை‌க் கான சுவாச‌ம் ‌சீராக இரு‌க்க வே‌ண்டு‌ம். ‌சீரான சுவாச‌ம் இரு‌ப்‌பி‌ன் ந‌ல்ல தூ‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம். சுவாச‌த்‌தி‌ல் ‌சிதைவு ஏ‌ற்ப‌ட்டா‌ல் தூ‌க்க‌‌த்‌திலேயே மன‌ம் அ‌திக‌ம் வேலை செ‌ய்ய ஆர‌ம்‌பி‌த்து ‌விடு‌ம். மன‌ம் வேலை செ‌ய்வதுதா‌ன் கனவுக‌ளி‌ன் அடி‌ப்படையே.

ச‌ரி தூ‌க்க‌த்‌தி‌ல் சுவாச‌த் தடை ஏ‌ற்பட‌ எ‌ன்‌ன‌க் காரண‌ம் இரு‌க்கு‌ம். நமது உணவு முறைதா‌ன். தூக்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம் பல உணவுக‌ள் உ‌ள்ளன. தூ‌க்க‌த்தை‌க் கொடு‌க்கு‌ம் உணவுகளு‌ம் உ‌ள்ளன. அவ‌ற்றை‌த் தே‌ர்வு செ‌ய்து அளவோடு உ‌ண்பதுதா‌ன் தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌சீரான சுவாச‌த்தை அ‌ளி‌க்கு‌ம்.

இர‌வி‌ல் சா‌ப்‌பிடு‌‌ம் உணவானது அளவு குறைவான உணவாகவு‌ம், கார‌மி‌ல்லாத, வாயு சே‌ர்‌க்காத உணவாகவு‌ம் இரு‌ப்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம்.

உட‌ல் சு‌த்தமு‌ம், ந‌ல்ல கா‌ற்றோ‌ட்டமு‌ம் கூட தூ‌க்க‌த்‌தி‌ற்கு அடி‌ப்படையாகு‌ம். உற‌‌ங்க‌ப் போகு‌ம் மு‌ன் முக‌ம், கை கா‌ல்களை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌க் கொ‌ள்வது‌ம், நா‌ம் படு‌க்கு‌ம் இட‌ம் சு‌த்தமாகவு‌ம், கா‌ற்றோ‌ட்டமாகவு‌ம் இரு‌க்கு‌ம்படியு‌ம் பா‌ர்‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

சா‌ப்‌பி‌ட்டவுட‌ன் களை‌ப்போடு செ‌ன்று படு‌க்கை‌யி‌ல் ‌விழுவது, சோ‌ம்பலையு‌ம், கெ‌ட்ட கனவுகளையு‌ம் அ‌ளி‌க்கு‌ம். பக‌ல் தூ‌க்க‌ம் ‌நி‌ச்சயமாக இரவு‌த் தூ‌க்க‌த்தை‌க் கெடு‌க்கு‌ம். சா‌ப்‌பி‌ட்டு இர‌ண்டு ம‌ணி நேர‌த்‌தி‌ற்கு‌ப் ‌பிறகு படு‌க்க‌ச் செ‌ன்றா‌ல் ‌நி‌ச்சயமாக ந‌ல்ல தூ‌க்க‌ம் வரு‌ம்.

தூ‌க்க‌ம் உடலு‌க்கு மட‌்டும‌ல்ல, மன‌த்‌தி‌ற்கு‌ம் ஓ‌ய்வ‌ளி‌க்‌கிறது. அதே போல தூ‌ங்காத ம‌னித‌ர்க‌ளி‌ன் மனமு‌ம் சோ‌ர்வடைவதை காணலா‌ம். ச‌ரியான தூ‌க்க‌ம் இ‌ல்லையே எ‌ன்ற எ‌ண்ணமே, மன‌தி‌ற்கு‌ள் கோபமாகவு‌ம், துக்கமாகவு‌ம் மாற‌க் கூடு‌ம். இதனா‌ல் தேவைய‌ற்ற ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படலா‌ம்.

ந‌ல்ல ‌சீரான தூ‌க்க‌ம் மனதை ஆன‌ந்தமான ‌நில‌ை‌யி‌ல் வை‌த்‌திரு‌க்க உதவு‌ம். மனமே நமது அ‌ன்றாட கா‌ரிய‌ங்களு‌க்கு உறுதுணையாக இரு‌க்கு‌ம். மன‌ம் ஆன‌ந்தமாக இரு‌ந்தா‌ல் நமது வேலையு‌ம் ‌திரு‌ப்‌தியாக இரு‌க்கு‌ம்.

தூ‌க்க‌ம் வராத ‌நிலை‌யி‌ல் ‌புர‌ண்டு புர‌ண்டு படு‌ப்பதை ‌விட, உ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்த ஏதேனு‌ம் ஒ‌ன்றை செ‌ய்து பாரு‌ங்க‌ள். ‌‌மன‌ம் உ‌ற்சாக‌ம் அடைவதா‌ல் வராத தூ‌க்கமு‌ம் ‌விரை‌வி‌ல் வ‌ந்து சேரு‌ம். ‌பிடி‌த்த வேலை எ‌ன்றா‌ல் பா‌ட்டு கே‌ட்பது, பு‌த்தக‌ம் படி‌ப்பது போ‌ன்றவை. தொலை‌க்கா‌ட்‌சி பா‌ர்‌ப்பதா‌ல் பலரது தூ‌க்க‌ம் பா‌தி‌க்க‌ப்படு‌கிறது.

தூ‌க்க‌ம் கெ‌ட்டு எ‌ந்த‌ப் ப‌ணியை செ‌ய்தாலு‌ம் அது வெ‌ற்‌றிகரமாக முடியாது. எனவே, தூ‌க்க‌த்‌தி‌ற்கு‌த் தேவையான ‌விஷய‌ங்களை நா‌ம் ச‌ரியான முறை‌யி‌ல் ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம்.

நன்றி:வெப்துனியா

தண்ணீர் பருகுவதன் காரணம் என்ன?

 உலகிலேயே மனிதன் மட்டுமே பூமியைக் குடைந்து தண்ணீரை எடுத்து தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறான். ஆனால் மற்ற உயிரினங்கள் தண்ணீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், சூரிய ஔி படும் தண்ணீரை மட்டுமே விலங்குகளும், மற்ற உயிரினங்களும் குடித்து தனது எலும்பு வளர்ச்சியை மேம்படுத்துகின்றன என்கின்றனர், இயற்கை வைத்தியர்கள்.

தண்ணீரானது நமது உடலில் நான்கு விதமான முக்கிய பணிகளைச் செய்கிறது. உடலில் இருந்து ஜீவ சத்துக்களைக் கரைத்து திரவமாக உடலிலுள்ள செல்களுக்கு எடுத்துச் செல்கிறது.

மேலும் நமது உடலிலுள்ள ரசாயன பொருள்களுடன் சேர்ந்து கரைந்து உடல் முழுவதும் பரவுவதற்கு அவசியமாகிறது. நம்முடைய உடலுக்கு வெப்பம் மற்றும் குளிர்ச்சியில் சமநிலையை உண்டாக்குவதில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

நுரையீரல் வழியாகவும், சருமங்கள் வழியாகவும் அழுக்குகளை வியர்வை மூலமாகவும், சளி மூலமாகவும் வெளியேற்றுகிறது. நமது உடம்பிலுள்ள திசுக்கள் விஷமாகாமல் தடுத்து, ஆக்ஸிஜனை உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு கொடுத்து உதவுகிறது. முக்கியமாக நாம் சாப்பிட்ட உணவுகள் நல்லபடியாக செரிமானம் ஆவதற்கு தண்ணீர் அவசியம் தேவைப்படுகிறது.

மனிதன் வாழ்வதற்கு தினமும் தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும். தண்ணீர் இல்லாமல் பிரபஞ்சத்தில் உயிரினம் வாழ முடியாது. தண்ணீர்தான் மனித இனத்துக்குத் தேவையான உணவு பொருள்கள், தானியங்கள், காய்கனிகள் போன்றவற்றை உற்பத்தி செய்ய அடிப்படைக் காரணியாக விளங்குகிறது.

"மனித இனத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது சூரிய ஔி பட்ட தண்ணீர்தான்" என்று கூறியுள்ளார் ஹிப்போக்ரேடிஸ். இவர் மருத்துவ உலகின் தந்தையாக போற்றப்படுபவர். இங்கிலாந்தில் சில மருத்துவமனைகளில் தண்ணீர் சிகிச்சைகள் செய்யப்படுவது தற்போது பிரபலமாகி வருகிறது.

சூரிய ஔி பட்ட நீரைக் குடிக்கும்போது அதன் ஒவ்வொரு சொட்டிலும் சூரியசக்தி பரவி 30 சதவீதம் கூடுதலான ஆக்ஸிஜனும், நைட்ரஜன் சக்திகளும் கிடைக்கின்றன. இவை சரீரத்திலுள்ள திசுக்களை குணப்படுத்தி சக்தியைக் கொடுத்து நன்கு செயல்பட வைக்கின்றன.

சூரிய ஒளிக்கதிரானது கெடுதலான பாக்டீரியா கிருமிகளை ஒழித்து நீரை சுத்தப்படுத்துகின்றன என்கிறார் பிரபல தண்ணீர் சிகிச்சை நிபுணர். உடலைச் சுத்தபடுத்துவது குளிப்பதன் முலம் நடைபெறுகிறது. உடலின் உள் உறுப்புகளை சுத்தப்படுத்துவது தண்ணீர் குடிப்பதன் முலம் நடைபெறுகிறது
நன்றி;பாலைவனத்தூது

பாகற்காயின் மருத்துவ குணங்கள்

நம் உடலில் உள்ள பல புழுக்களினால் தான் நமக்கு நோய் வருகிறது. சரியான உணவு உண்ணும் பட்சத்தில் புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும்.

உடலில் உள்ள புழுக்கள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரிக்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய்.

1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.

2. பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது.

3. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.

4. பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.

5. ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்து கண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.

6. பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடி விரியன்) கடித்த விஷம் நீங்கும்.

7. பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக் கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.

8. நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.

9. ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.

10. மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும், ஜுரத்துக்கும், குடல் புண், வாயுத் தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.

11. இலையைக் கொதிக்க வைத்து, சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.

12. சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.

13. பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.

14. உடலில் கட்டி, புண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள் ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
நன்றி;பாலைவனத்தூது