கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

அமீரகத்தில் புதிய எழுச்சி பொதுக்குழுவில் திரளானோர் பங்கேற்று அமீரக காயிதெமில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு!

அமீரகத்தில் புதிய எழுச்சி பொதுக்குழுவில் திரளானோர் பங்கேற்று அமீரக காயிதெமில்லத் பேரவை புதிய நிர்வாகிகள் தேர்வு!

                            அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொதுக்குழு கூட்டம் பேரவைத் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமையில் நடைபெற்றது.துவக்கமாக ஜமால் முஹ்யத்தீன் இறைமறை வசனங்கள் ஓதினார்.

அமீரக காயிதெமில்லத் பேரவையின் அபுதாபி மண்டலச் செயலாளர் லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வரவேற்றுப் பேசினார்.அமீரக காயிதெமில்லத் பேரவையின் துணைத் தலைவர் களமருதூர் ஹாஜி.ஷம்சுத்தீன்,அய்மான் சங்க பொதுச் செயலாளர் காயல் எஸ்.ஏ.சி.ஹமீது,துணைப்பொருளாளர் முத்தலிபு இக்பால்,ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத்,வழுத்தூர் ஜெ.எம்.முஹையத்தீன் பாட்ஷா,இராமநாதபுரம் தைய்யுப் அலி,கீழக்கரை ஹமீது யாஸீன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை மாவட்டத் தலைவர் பி.கே.என்.அப்துல் காதிர் ஆலிம்,அபுதாபி இந்தியன் ஸ்கூல் தலைமை ஆசிரியர் ஷேக் அலாவுத்தீன்,அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஏ.ஷாஹுல் ஹமீது,சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இஜாஜஸ் பெய்க்,அய்மான் கல்லூரியின் பொருளாளர் திருச்சி அப்துல் வஹ்ஹாப் சாஹிப் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு ஆற்றிவரும் பணிகளை அனைவருக்கும் சென்றடையும் விதத்தில் அவைகளை விளம்பரப்படுத்தும் பணியையும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.தாய்ச் சபை பாடகர் தேரிழந்தூர் தாஜுத்தீன் கொள்கைப்பாடல்களை பாடினார்.அமீரக காயிதெமில்லத் பேரவை பொருளாளர் கீழக்கரை ஹமீதுர் ரஹ்மான் பேசுகையில் தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பாடுகளை குறைகூறியே அரசியல் பிழைப்பு நடத்தும் சிலர் இன்று தமிழக அரசின் இட ஒதுக்கீடு விஷயத்தில் வாய் திறக்காமல் அமர்ந்திருப்பதை சுட்டிக்காட்டி,வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் சமுதாய முன்னேற்றத்தை முன்னிறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எடுக்கும் அரசியல் முடிவுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அதற்குரிய பணிகளில் காயிதெமில்லத் பேரவை இன்றிலிருந்தே இறங்கும் என்றும் ஆதாரப்பூர்வமாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் குறிப்பிட்டார்.
அமீரக காயிதெமில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் முஹம்மது தாஹா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையின் எளிமையைப் பற்றியும் சமுதாயம் ஏன் இந்ததலைமைக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்பது பற்றியும்.காயிதெமில்லத் பேரவையில் அனைவரும் இணைந்து பணியாற்றுவதின் அவசியம் குறித்தும் தெளிவாக விளக்கிப் பேசினார்.

இறுதியாக அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி நிறைவுரை ஆற்றினார்.அவர் தனது உரையில் அமீரகத்தில் வாழும் அனைவர்களின் சரியான அமைப்பாக காயிதெமில்லத் பேரவை மட்டும் தான் செயலாற்றி வருவதை பெருமையோடு குறிப்பிட்ட அவர் தாய்ச் சபையின் தேசிய செயற்குழுவின் நிகழ்வுகளையும்,சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற மதுரை செயற்குழுவின் தீர்மானங்களை வரவேற்றும்,எதிர் காலங்களில் இந்திய முஸ்லிம்கள் அனைவரும் தாய்ச் சபையில் மட்டுமே தங்களை ஐக்கியப் படுத்தி இந்த இயக்கத்தை வலுப்படுத்த முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

                                                  புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம்:
தலைவர்: குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாகத் அலி
துணைத் தலைவர்கள்: களமர்குதூர் அல்ஹாஜ் ஷம்சுத்தீன்
காயல் நூஹு சாஹிப்
வழக்கறிஞர் இஜாஸ் பெய்க்
பொதுச் செயலாளர்:திருப்பனந்தாள் ஏ.முஹம்மது தாஹா
பொருளாளர்: கீழக்கரை எஸ்.கே.எஸ்.ஹமீதுர் ரஹ்மான்
துணைப் பொருளாளர்: எலந்தக்குடி முத்தலிபு இக்பால்

அமைப்புச் செயலாளர்:லால்பேட்டை ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான்
கொள்கை பரப்புச் செயலாளர்: கடையநல்லூர் ஹபீபுல்லாஹ்
மக்கள் தொடர்பு செயலாளர்கள்:
கீழை ஏ.ஹமீது யாஸின் (துபை & வட அமீரகம்)
ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி(அபுதாபி மண்டலம்)
முத்துப்பேட்டை அப்துஸ் ஸலாம்
விழாக்குழு செயலாளர்: இராமநாதபுரம் பரக்கத் அலி

ஜமாஅத் ஒருங்கிணைப்புச் செயலாளர்கள்:
திண்டுக்கல் ஜமால் முஹ்யத்தீன்(துபை)
அஹ்மது குத்புத்தீன் ராஜா(அபுதாபி)

மார்க்க அணிச் செயலாளர்:
தாய்ச் சபை பாடகர்.தேரிழந்தூர் தாஜுத்தீன்

ஊடகத்துறை செயலாளர்: கும்பகோணம் சாதிக்
ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்: கும்பகோணம் நூர்தீன்
ஆடிட்டர்: காயல் எஹ்யா முஹையத்தீன்
மண்டலச் செயலாளர்கள்:
முதுவை ஹிதாயத் (துபை மண்டலம்)
பகுதி செயலாளர்கள்:
தேரா: அய்யம்பேட்டை காஸிம் ராஜாஜி
           வி.களத்தூர் ஷாஹுல் ஹமீது
சோனாப்பூர்:இராமநாதபுரம் ரஹ்மத்துல்லாஹ்
                     இராமநாதபுரம் ஷர்புத்தீன்
அல்கூஸ்: தேவிப்பட்டிணம் நிஜாம் அக்பர்

அபுதாபி மண்டலம்: அதிரை ஷாஹுல் ஹமீது
ஷார்ஜா: தஞ்சை பாட்சா கனி

அஜ்மான்: முதுவை எஸ்.ஷம்சுத்தீன்
                  பாம்பன் ஜாஹிர்

உம்முல் குவைன்:அஞ்சுக்கோட்டை அப்துல் ரஜ்ஜாக்

அல் அய்ன்: இராமநாதபுரம் தைய்யுப் அலி
.
ஆகியோர் தக்பீர் முழக்கத்தோடு ஒருமனதாக தெர்ந்தெடுக்கப்பட்டனர்.இறுதியாக துணைத்தலைவர் காயல் நூஹு சாஹிப் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

(மேலும் செய்திகள் மற்றும் தீமாங்கள் இன்ஷா அல்லாஹ் நாளை...)
http://qaidemillathperavai.blogspot.com/

0 கருத்துகள்: