கோணுழாம்பள்ளம்post தங்களை அன்புடன் வரவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக!!

நீங்கள் சமூக ஆர்வளர்களா?

          அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
 நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்காக தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்பனம் செய்பவர்களும் நம்மில் உண்டு,சமூதாயத்தை பற்றி கவலை படாமல் சுயநலமாக வாழ்பவர்களும் நம்மில் உண்டு. நாம் நமது பங்கிற்க்கு ஒரு முஸ்லிமாக நமது இஸ்லாமிய சமூதாயத்திற்க்கு என்ன செய்தோம் என்று சற்று சிந்தனை செய்து பார்ப்போம்….! வாழ்க்கை முழுவதையும் கொடுதோமா? அல்லது சுயநலமாக வாழ்கிறோமா? நம்மில் சிலர் ஏதோ ஒரு விதத்தில் சமூதாயத்திற்க்கு சேவை செய்கிறோம்.


“எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை.” (13:11)
“அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்.” (39:9)
      சமூக சேவைகளில் ஒரு சிறந்த சேவையாக உள்ளது கல்வி, ஆம்! நிச்சயமாக கல்வி கற்று கொடுப்பது சிறந்த சேவைதான், அதுவும் குர்ஆன் ஓத கற்று கொடுப்பது என்பது மிகவும் உயர்ந்த சேவையாக உள்ளது.

முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களை சுற்றி 5 முதல் 10 குடும்பங்கள் என பல கிராமங்களில் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள் என்று நாம் அறிந்த செய்திதான். அவர்களின் இஸ்லாமிய கல்விக்காக நாம் என்ன முயற்சி செய்தோம் என்பதுதான் இங்கு நமக்கு நாமே வைக்கும் கேள்வியாக உள்ளது. நமக்கு நாமே வைக்கும் வேண்டுகோள் என்னவெனில் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள முஸ்லிம் பிள்ளைகளுக்கு மக்தப், குர்ஆன் ஓத மற்றும் இஸ்லாத்தின் அடிப்படையை (இஸ்லாமிய கல்வியை) கற்றுகொடுக்க வேண்டும். இதற்கு இஸ்லாமிய சிந்தனை, நல்ல கல்வியறிவு பெற்றவர்களின் தேவை அதிகமாக உள்ளது. ஒவ்வோருவரும் நமது ஊர்களை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, அங்குள்ள முஸ்லிம் பிள்ளைகளுக்கு வாரம் ஒருமுறை சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அங்கு சென்று அவர்களுக்கு இஸ்லாமிய கல்வி கற்று கொடுப்போம். இன்ஷா அல்லாஹ்….,
thanks.Islamic Movement For Dawah

0 கருத்துகள்: